பிரசவகால வலி போக்கும் திருநீற்றுப்பச்ச&a

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பிரசவகால வலி போக்கும் திருநீற்றுப்பச்சிலை!


மூலிகைகளின் அரசன் என்று அழைக்கப்படும் திருநீற்றுப்பச்சிலை, துளசியைப் போன்றே தெய்வீக தாவரமாகும். பூக்களுக்கு மணம் உண்டு, அதேபோல சில இலைகளும் நறுமணம் வீசுவதுண்டு. அப்படியொரு சிறப்பு பெற்றது திருநீற்றுப்பச்சிலை.

உருத்திரசடை, பச்சை, பச்சிலை, சப்ஜா என்ற பெயர்களும் இதற்கு உண்டு. நறுமணம் வீசும் இந்த செடியின் இலைகளை அரைத்து பூசினால் கட்டிகள் கரையும். வெறுமனே இலையை முகர்ந்து பார்த்தால் தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை சரியாகும். இலைச்சாறுடன் சமஅளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்புவலி, இருமல், வயிற்று வாயு பிரச்னைகள் சரியாகும்.

திருநீற்றுப்பச்சிலையின் இலையை மென்று சாப்பிட்டால் வாய்வேக்காடு சரியாகும்.

தேள் கடிப்பதால் வலி ஏற்படும்போது, அதன் கடிவாயில் திருநீற்றுப்பச்சிலையை கசக்கி பூசினால் வலி குறையும். காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற பிரச்னைகளுக்கு இந்த இலைச்சாற்றின் சில சொட்டுகளை விட்டால் நிவாரணம் கிடைக்கும். இதன் இலையை முகர்ந்து பார்த்தாலே மூக்கில் வரும் வியாதிகள் சரியாகும்.

முகப்பருவை விரட்ட திருநீற்றுப்பச்சிலை சாறுடன் வசம்பு சேர்த்து அரைத்து பூசினால் பலன் கிடைக்கும். குழந்தை உண்டான பெண்கள், பச்சிலைச்சாறு சாப்பிட்டால் பிரசவ கால வலி விலகும். அதேபோல் இதன் விதையை பிரசவத்துக்குப்பிறகு சாப்பிட்டு வந்தால் வலி குறையும்.

 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#2
Re: பிரசவகால வலி போக்கும் திருநீற்றுப்பச்&#297

Very nice natural care tips :thumbsup Thanks for sharing ji
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.