பிரசவ லேகியம் - Legiyam for young mothers

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,749
Location
Bangalore
#1
பிரசவ லேகியம்


தேவையானவை :

சுக்கு - 50 கிராம்

மிளகு - 50 கிராம்

அதிமதுரம் - 20 கிராம்

சித்திரத்தை - 20 கிராம்

லவங்கம் - 20 கிராம்

கண்டத்திப்பிலி - 50 கிராம்

வால்மிளகு - 10 கிராம்

ஓமம் - 25 கிராம்

சீரகம் - 50 கிராம்

ஜாதிக்காய் - 3

வெல்லம் - 150 கிராம்

நெய் - 100 கிராம்

நல்லெண்ணெய் - 100 மில்லி

பெருங்காயம் - சுமார் 20 கிராம்


செய்முறை :

மேலே கூறியவற்றில் ,நல்லெண்ணெய் , நெய் , வெல்லம் , பெருங்காயம் ஆகியவற்றைத் தவிர்த்து , மற்றவற்றை , ஒரு வெற்று வாணலியில் வறுத்து,பெருங்காயத்தை சிறிதளவு எண்ணையில் பொரித்து , இதனுடன் சேர்த்து , மிக்சியில் நன்கு பொடி செய்துக் கொள்ளவும் .

பின்னர் இதை சலித்துவிட்டு , அந்தப் பொடியை ஒரு கப்பில் எடுத்துக் கொண்டு அளவு பார்த்துக் கொள்ளவும் .

இந்தக் கப்பின் அளவே வெல்லத்தையும் எடுத்துக் கொள்ளவும் .

இப்போது ஒரு கடாயில், சிறிதளவு தண்ணீர் ஊற்றி , வெல்லத்தைப் போட்டு , அது நன்கு கரைந்தவுடன் எடுத்து வடிக்கட்டிக் கொள்ளவும் .

பின்னர் இதை திரும்ப கடாயில் கொட்டி , கொதிக்க விடவும் .

இந்தப் பாகு கெட்டியாக ஆரம்பித்தவுடன் , வறுத்து வைத்துள்ளப் பொடியைப் போட்டுக் கிளறவும் .

இதனுடன் , நல்லெண்ணையை ஊற்றிக் கிளறவும் .

எல்லாம் சேர்ந்து நல்ல கெட்டியாக ஆரம்பிக்கும் போது , நெய்யை முழுவதும் ஊற்றி , மேலும் சிறிது கிளறி , இளகிய பதத்திலேயே இறக்கி வைத்து விடவும் .

நேரம் செல்லச் செல்ல இது அப்படியே இறுகி விடும் .

இதை ஒரு சுத்தமான டப்பாவில் எடுத்து வைத்துக் கொண்டு , தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு சிறு உருண்டை அளவு எடுத்து சாப்பிட வேண்டும் .

இதனால் , பிரசவித்த தாய்மார்கள் சாப்பிடும் உணவு நன்கு ஜீரணமாகி , குழந்தைக்கு எந்தத் தொந்தரவும் ஆகாமல் இருக்கும் .

தாய்மாருக்கும் உடல் வலிமையை மீட்டுத் தரும் .


 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Thank you Jayanthy! Very useful information for the young mothers!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.