பிரேதப் பரிசோதனை - Post Mortem

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பிரேதப் பரிசோதனை

என்ன நடக்கிறது?

சிகிச்சை பலன் அளிக்காத மரணமோ, தற்கொலையோ, கொலையோ, விபத்தோ... இறந்தவரின் உறவினர்கள் மருத்துவமனையில் இருந்து உடனடியாக உடலைபெற்றுக்கொள்ளத்தான் நினைப்பார்கள்.எங்கே பிரேதப் பரிசோதனை என்ற பெயரில் உடலை சிதைத்துவிடுவார்களோ என்ற பயமே காரணம். உண்மையில் அப்படி எதுவும் நடப்பது இல்லை என்கிறார் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் சட்டம் சார்ந்த மருத்துவர் (Assistant Professor - Department of Forensic Medicines) வினோத்.

‘‘பிரேதப் பரிசோதனையைஎம்.பி.பி.எஸ். படித்த அரசு மருத்துவர் யார் வேண்டுமானாலும் செய்யலாம். வயது முதிர்வால் ஏற்படும் மரணம், நீண்ட நாள் நோயின் காரணமாக படுத்த படுக்கையாக இருந்து மரணம் அடைதல் போன்ற இயற்கை மரணங்களுக்குப் பிரேதப் பரிசோதனை தேவையில்லை. சந்தேகப்படும்படியாக உயிரிழப்பவர்கள், இயற்கைக்கு மாறாக மரணம் அடைபவர்களின் உடலைக் கண்டிப்பாக பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும்.

குறிப்பாக, சிறுவயதிலேயே அகால மரணம் அடைபவர்கள், கொலை, தற்கொலை செய்து கொள்பவர்கள், நீரில் மூழ்கிஉயிரிழப்பவர்கள், தீக்காயத்தினால் உயிரிழப்பவர்கள், தொழிற்சாலை விபத்துகளில் சிக்கி மரணம் அடைபவர்கள், எதிர்பாராதவிதமாக சாலை மற்றும் கட்டிட விபத்துகளில் சிக்கி உயிரிழப்பவர்கள் ஆகியோரின் உடல்கள் அவசியம் பிரேதப் பரிசோதனை செய்யப்படும்.

பொதுவாக ஒரு மருத்துவர்தான் இதை செய்வார். போலீஸ் காவல் மரணம், என்கவுன்டர் மரணம், வரதட்சணைக் கொடுமை மற்றும் சிறைச்சாலை மரணம் எனில், குறைந்தது இரண்டு மருத்துவர்கள்பிரேதப் பரிசோதனை செய்யவேண்டும். அதோடு, அது வீடியோவில் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கு நீதிமன்றத்தில் அனுமதி பெறவேண்டும். இந்தியாவில் இது தொடர்பானவிழிப்புணர்வு மிகக் குறைவு.

பிரேதப் பரிசோதனையில் மெடிக்கோ லீகல் போஸ்ட் மார்ட்டம், ஹாஸ்பிட்டல் போஸ்ட் மார்ட்டம், அகட மிக் போஸ்ட் மார்ட்டம் என மூன்று வகைகள் உள்ளன. விசாரணைஅதி காரி விண்ணப்பம் கொடுத்து அதன் பின்னர் செய்யப்படுவது மெடிக்கோ லீகல் போஸ்ட் மார்ட்டம். இதில் கேஸை பொறுத்து போலீஸ் விசாரணை அல்லது நீதித்துறை விசாரணையை யாராவது ஒருத்தர் நடத்துவார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி, சிகிச்சைகளுக்குப் பிறகு நல்ல உடல் ஆரோக்கியத்துடன் காணப்பட்டு, திடீரென இறந்து விடுவார்.

அவரது உடலை போஸ்ட்மார்ட்டம் செய்வதே ஹாஸ்பிட்டல் போஸ்ட் மார்ட்டம். எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு மாணவர்களின் அனாடமி பாடப்பிரிவுக்காக செய்யப்படுவதுதான் அகடமிக் போஸ்ட் மார்ட்டம்.பிரேதப் பரிசோதனையை செய்ய சில சட்ட நடவடிக்கைகள் உள்ளன. சம்பந்தப்பட்ட காவல் துறை ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர் விபத்து அல்லது சம்பவம் நடந்த இடத்துக்குச் சென்று சூழ்நிலைகளை ஆராய்ந்து சந்தேகம் இருந்தால், பிரேதப் பரிசோதனைக்கான விண்ணப்பக் கடிதத்தை போஸ்ட்மார்ட்டம் செய்யப்போகும் சட்டம் சார்ந்தமருத்துவ அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். இந்த மருத்துவ அதிகாரி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விண்ணப்ப கடிதத்தைப் பெறுவார். தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் பிரேதப் பரிசோதனை செய்யும் வழக்கம் கிடையாது.

பிரேதப் பரிசோதனை என்றால், உடலைத் துண்டுதுண்டாக அறுத்துவிடுவார்கள் என்று நினைக்கின்றனர். அப்படியல்ல... பிரேதப் பரிசோதனையின்போது, மண்டையோடு, மார்புப் பகுதி மற்றும் வயிற்றுப்பகுதி ஆகிய மூன்று உறுப்புகளும் அறுக்கப்பட்டு, உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு இறப்புக்கான சரியான காரணம் அறியப்படும்.

இதன் பிறகு இறந்தவருக்கு செய்ய வேண்டிய அனைத்து மரியாதைகளும் பொறுப்புடன் செய்யப்படும். போஸ்ட்மார்ட்டம் செய்ய குறைந்தது ஒரு மணிநேரம் ஆகும். சில நேரங்களில் மரணத்தின் காரணத்தைப் பொறுத்து நேரம் அதிகம் ஆகும். போஸ்ட்மார்ட்டம் செய்யப்படும் உடலில் இருந்து, விழி வெண்படலம்(Cornea) மட்டும் சம்பந்தப்பட்ட உறவினர் அனுமதியுடன் தானமாக பெறப்படும். பிரேதப் பரிசோதனை அறிக்கை சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிக்கு அனுப்பப்படும். இதனை காவல் நிலையம் அல்லது அரசு மருத்துவமனையில் பெற்றுக்கொள்ளலாம்...’’
 

sumitra

Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
23,812
Likes
34,051
Location
mysore
#2
Hi @chan, very useful information you have shared. thank you!
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#3
Thanks for the detailed info about Post Mortem Lakshi.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.