பிறந்த குழந்தைக்கும் வரும் - பீரியட்ஸ் (Tiny menst

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#1
பிறந்த குழந்தைக்கும் வரும் - பீரியட்ஸ் (tiny menstrual period )



பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தைகளுக்கு சிறிதளவு ரத்தம் பிறப்பு உறுப்பு வழியாக வரும் . இது குறித்து பயம் கொள்ள தேவை இல்லை .

காரணம் :

குழந்தை வயிற்றில் இருக்கும் போது அம்மாவின் அத்தனை ஹர்மோன்களும் குழந்தைக்கு பிளாசெண்ட எனப்படும் நஞ்சு கோடி மூலம் குழந்தைக்கு போய்கொண்டிருக்கும் . குழந்தை பிறந்தவுடன் இவை அனைத்தும் நிறுத்தபடுகிறது.

இந்த ஹார்மோன்களின் அளவு ரத்தத்தில் படி படியாக குறையும் .எனவே இது ஒரு மினி மேன்ஸ்ட்ரோல் பீரியட் (tiny menstrual period ) போன்ற நிலையை ஏற்படுத்தும் . குழந்தையின் கற்பபையில் இருந்து சிறிதளவு ரத்தபோக்கு ஒரு சில நாள் நீடிக்கும் .

இதனால் குழந்தைக்கு வலி இருக்காது

குழந்தையின் உடல் உறுப்புகள் மற்றும் ஹார்மோன் அமைப்புகள் சரியாக வேலை செய்வதையே இது காட்டுகிறது. எனவே இது கவலை பட கூடிய விஷயம் அல்ல. (சந்தோஷ படகூடிய விஷயம் என்றும் கூறலாம்)

பெண் குழந்தைகளுக்கு மட்டுமே வரும்


எல்லா பெண் குழந்தைகளுக்கும் வரும் என்று கூறமுடியாது . வரவில்லை என்றாலும் கவலை கொள்ள தேவை இல்லை.

வைட்டமின் கே அளவு சாதரணமாக பிறந்த குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் .இதனாலேயே பிறந்தவுடன் vit k ஊசி மூலம் போடபடுகிறது . உதிரபோக்கு அதிகமாகவோ அல்லது அதிக நாட்களோ இருந்தால் வைட்டமின் கே போட்டுகொள்வது நல்லது.

Thanks: Dr. T. Rajmohan

Regards,
Sumathi Srini
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.