பிறந்த குழந்தைக்கு இருக்கும் பற்கள் (பிற

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,536
Location
Hosur
#1
[TABLE="width: 1"]
[TR]
[TD="class: reactions-label-cell, width: 1%"]
[/TD]
[TD][/TD]
[/TR]
[/TABLE]
பிறந்த குழந்தைக்கு இருக்கும் பற்கள் (பிறவி பற்கள் )

பொதுவாக 6 -8 மாதங்களில் குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைக்க தொடங்கும் .ஆனால் அரிதாக பிறக்கும் போதே சில குழந்தைகளுக்கு பற்கள் இருக்கலாம் .இதற்க்கு NATAL TEETH என்று பெயர் .


பொதுவாக கீழ்வரிசை நடுபற்களில் இது காணப்படும் .எல்லா பிறவி பற்களையும் நீக்க தேவை இல்லை .

இதில் இரு வகைகள் உள்ளன :

I .PREDECIDUOUS TEETH : இது 4000 இல் ஒரு குழந்தைக்கு இருக்கலாம் .இது ஏற்கனவே ஈறுகளின் உள்ளே மறைந்துள்ள பால் பற்களின் மீது தோன்றும் ஒரு அதிகபடியான பல் ஆகும் .இது வலுவில்லாமல் ஆடிக்கொண்டு இருக்கலாம் .எனவே இதை நீக்கிவிடுவது நல்லது .

II .TRUE DECIDUOUS TEETH : இது 2000 இல் ஒரு குழந்தைகளுக்கு இருக்கலாம் .இது உண்மையான பால் பற்கள் ஆகும் .ஆனால் சற்று முன்கூட்டியே முளைத்து விடுகிறது .இதனே நீக்க கூடாது .

மேலே சொன்ன இரு வகைகளை X -RAY எடுத்து பார்ப்பதன் மூலம் வேறுபடுத்தி அறியலாம் .


ஏன் நீக்கவேண்டும் :

வலுவில்லாத , ஆடிகொண்டிருக்கும் பல் மூச்சு குழாயினுள் சென்று மூச்சு திணறலை ஏற்படுத்தலாம் .
எனவே மருத்துவர் ஆலோசனை பெற்று நீக்கிவிடுவது நல்லது .

பின் குறிப்பு : அதிர்ஷ்டதிர்க்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை .ஆனால் சில நாடுகளில் இதனை ஒரு கெட்ட சகுனமாக கருதி பிறந்த குழந்தைகளை கொன்ற சம்பவங்கள் கூட நடந்துள்ளன

Thanks: Dr.Rajmohan

Regards,
Sumathi Srini 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.