பிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்பது தப்பில்&#

saranyapavalan

Citizen's of Penmai
Joined
Jun 8, 2011
Messages
886
Likes
1,060
Location
Malaysia
#1
டீன் ஏஜ் பிள்ளைகளை காயப்படுத்திவிட்ட பெற்றோர்கள் தங்களின் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள். அதனால் பெற்றோர்கள் மீது பிள்ளைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

டீன் ஏஜ் பிள்ளைகளை வளர்ப்பது சாதாரண காரியமில்லை. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையே ஏற்படும் உறவுச்சிக்கல்கள் மிகப்பெரிய போராட்டத்தை ஏற்படுத்தக்கூடியவை. நாங்க சொன்னா கேட்க மாட்டேங்கிறான் என்று கூறும் பெற்றோர்கள் ஒருபக்கம், என்னை புரிஞ்சிக்கவே மாட்டேங்கிறாங்க என்று கூறும் பிள்ளைகள் மறுபக்கம் என இருவேறு திசைகளில் பயணித்துக்கொண்டிருப்பார்கள்.

இதைக் கருத்தில்கொண்டு பெற்றோர்கள் தங்களின் டீன் ஏஜ் பிள்ளைகளிடம் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்று இணையதளம் ஒன்று ஆய்வினை நடத்தியிருக்கிறது.

தனக்கு இருக்கும் தனித்திறமையை பெற்றோர்கள் பாராட்டவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். எனவே பெற்றோர்களே, உங்கள் பிள்ளையிடம் உள்ள நல்ல திறமைகளை சுட்டிக்காட்டிப்பேசுங்கள். நான் உன்னை நினைச்சுப் பெருமை படுறேன் என்று கூறுங்கள். அந்த மந்திர வார்த்தைக்கு உங்கள் பிள்ளைகள் கட்டுப்படுவார்கள்.

உங்கள் குழந்தைகள் எப்படியிருந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள். அளவுகடந்த கட்டுப்பாடுகள் அற்ற அன்பைக்காட்டுங்கள் ஏனென்றால் பிள்ளைகள் எதிர்பார்ப்பதும் அதைத்தான்.

பெற்றோர்கள் பேசிய வார்த்தைகள் காயப்படுத்தியிருக்கலாம், எனவே ஈகோ பார்க்காமல் மன்னிப்பு கேளுங்கள். இதனால் உங்கள் பிள்ளைக்கு உங்கள் மீதான மதிப்பு குறைந்து விடாது. தவறை ஒப்புக்கொள்கிற உங்களை கூடுதலாக கூடுதலாக நேசிக்கவும் மதிக்கவும் வைக்கும்.

பதின் பருவம் என்பது மிகவும் சிக்கலான பருவம். எந்த சூழ்நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் பருவம். தாம் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற ஏக்கம் நிறைந்துள்ள காலம். குழப்பம் நிறைந்த இந்த காலத்தில் உங்கள் குழந்தைகளை நீங்கள் நம்புங்கள். ஏனெனில் அவர்கள் எதிர்பார்ப்பதும் அதைத்தான்.

அட்வைஸ் செய்கிறேன் பேர்வழி என்று மொக்கை போடாதீர்கள் அப்புறம் உங்களைக் கண்டாலே காததூரம் ஓடுவார்கள். எனவே பிள்ளைகள் உறங்கும் நேரத்தில் பேச்சை ஆரம்பியுங்கள். ஏனெனில் அந்த நேரத்தில் உங்களை எதிர்த்துப் பேசும் உணர்வு குறைவாக இருக்கும். சொல்லும் விசயங்களை நினைவிலும் வைத்துக்கொள்வார்கள்.
 

umaravi2011

Minister's of Penmai
Joined
Nov 28, 2011
Messages
3,874
Likes
7,532
Location
Hyderabad
#2
Re: பிள்ளைகளிடம் மன்னிப்பு கேட்பது தப்பில&#302

Hi Saranya

really very needed sharing and valuable info

kulanthaikalai valarkarathum pru kalai thaan la

naama advice nu solli mokkai podarathu nejamalume correct

nammoda pillai pirayathai naama marakkama irunthaale oralavu nalla valarthalam la

thanks for sharing this wonder info dear
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.