பீட்சா, பர்கர், பரோட்டா பிரியரா நீங்கள்.... உ&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பீட்சா, பர்கர், பரோட்டா பிரியரா நீங்கள்.... உணவுக்குழாய் பத்திரம்!


பீட்சா வில்லன் பரோட்டா எமன்! - உலுக்கும் புற்றுநோய்.

மீபத்தில் இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் பீட்ஸா, பர்கர், பிரபலமான நிறுவனத்தின் பிஸ்கட் போன்றவற்றை சாப்பிட்டால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பொட்டாசியம் புரோமெட், பொட்டாசியம் அயோடைட் ஆகிய இரண்டு வேதிப் பொருள்களை பல நிறுவனங்கள் பீட்சா, பர்கர், பிஸ்கட் பயன்படுத்தும் மாவுகளில் சேர்க்கின்றன. இந்த வேதிப்பொருள்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பு கொண்டவை என்பதால் பல நாடுகள் இதற்கு தடை விதித்திருக்கின்றன. இன்னமும், இந்த வேதிப் பொருட்களால் கண்டிப்பாக புற்றுநோய் வரும் என உலகம் முழுவதும் நடத்தப்படும் எல்லா ஆய்வுகளிலும் உறுதி செய்யப்படவில்லை. எனினும் மக்களின் நலன் கருதி பல நாடுகள் தடைபோட்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவில் இவற்றுக்கு தடை இல்லை.

இதனால் உடனடியாக இந்த இரண்டு வேதிப்பொருட்களையும் உணவில் பயன்படுத்துவதற்கு இந்திய உணவு பாதுகாப்பு கழகம் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறது, இந்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்.

இந்த இரண்டு வேதிப்பொருட்கள் பிரச்னை ஒரு பக்கம் இருக்க, மைதா தயாரிக்க பயன்படுத்தப்படும் அலெக்சான் என்ற வேதிப்பொருள் புற்றுநோயை ஏற்படுத்தவல்லது என மருத்துவ அறிஞர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர். எனவே எப்படி பார்த்தாலும் மைதா ஒரு சர்ச்சைக்குரிய பொருளாகவே இருக்கிறது. நாம் விரும்பி சாப்பிடும் அத்தனை உணவுகளிலும் மைதாவே நிறைந்திருக்கிறது. கேக், ஸ்வீட்ஸ், சமோசா, பீட்சா, பர்கர், பிரட், நூடுல்ஸ், பரோட்டா என இப்படி எங்கெங்கும் மைதா சாம்ராஜ்யம் விரிந்து வருகிறது.

மாறிவரும் வாழ்க்கை முறை காரணமாக உடற்பருமன், சர்க்கரை நோய், புற்றுநோய் என பல்வேறு நோய்கள் வருவதற்கு அடிப்படை காரணம் தவறான உணவுப் பழக்கமே என்கிறார்கள் மருத்துவர்கள்.

'நான் சிகரெட்டே பிடிச்சதில்லை, தண்ணி பழக்கமும் இல்லை. ஆனா எனக்கு எப்படி புற்றுநோய் வந்ததுன்னு தெரியலை' என பலர் புலம்புவதை பார்த்திருப்போம், கேட்டிருப்போம். புற்றுநோய்க்கு பின்னால் இருக்கும் முக்கியமான வில்லன் மோசமான உணவுகள் தான். பாக்கெட்டில் அடைக்கப்பட்ட, பதப்படுத்தப்பட்ட, அதிகம் சந்தைப்படுத்தப்படுகின்ற பெரும்பாலான உணவுகள் உடலுக்கு கெடுதியை விளைவிக்க கூடியவைதான்.

பீட்சா, பர்கர், நூடுல்ஸ் என மேற்கத்திய உணவுகள் மட்டுமல்ல; நம்மூர் பரோட்டாவும் கெடுதிதான். மைதாவில் இருப்பது வெறும் மாவுச்சத்து மட்டும்தான். நாம் அளவுக்கு அதிகமாக மாவுச்சத்தை சாப்பிட ஆரம்பிக்கும்போது, அது நமது உடலில் கொழுப்பாக மாறி சேகரித்து வைக்கப்படும். அடிக்கடி இந்த மோசமான மாவுச்சத்துள்ள உணவுகளை சாப்பிடும்போது உடல்பருமன் எளிதில் வந்துவிடும். உடல் பருமன் வந்துவிட்டால் அழையா விருந்தாளியாக ரத்தக் கொதிப்பும், சர்க்கரை நோயும் பின்னாலேயே வரிசை கட்டி வந்து நிற்கும். நீண்ட நாள் உடல்பருமன் பிரச்னை இருந்தால் மெல்ல மெல்ல புற்று செல்கள் வளர ஆரம்பித்து புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளையும் அதிகமாக்கும். நாம் அன்றாடம் செய்யும் சிறுசிறு தவறுகள் நமது வாழ்கையை புரட்டிப் போட்டுவிடுகின்றன.

'இந்திய உணவு பாதுகாப்புக் கழகம்' பரிந்துரைக்கும் உணவுகளைத்தான் மக்கள் சாப்பிடுகிறார்கள். ஆனால் அதே கழகம் பின்னொரு நாளில் இந்த உணவு கெடுதி என்கிறது. பிறகு மீண்டும் அதே நிறுவனத்தின் உணவை சந்தைப்படுத்த மீண்டும் அனுமதி கொடுக்கிறது. உணவுச் சந்தை மிக மிகப் பெரியது. உணவு சந்தைகளின் லாபத்துக்கு பலியாவது அப்பாவி பொது மக்கள்தான்.

அமெரிக்காவில் இருக்கும் எப்.டி.ஐ அவ்வப்போது பெரும் நிறுவனங்களாக இருந்தாலும் உணவு கட்டுப்பாட்டை மீறினால் கடுமையான அபராதம், தண்டனைகளை விதிக்கிறது. ஆனால் இந்தியாவில் நிலை தலைகீழ். அமெரிக்காவில் தடை செய்யப்பட்ட பல பொருட்கள் இங்கே சந்தையில் சக்கைப் போடு போடுகின்றன. அதற்கு எளிய உதாரணம் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தயாரிப்புகள்.

குறிப்பாக தமிழகம் மற்றும் சென்னையில் உணவு பாதுகாப்பு மையங்களின் செயல்பாடும் மிக மோசம். சந்தையில் இருக்கும் பல உணவுகள் கெடுதி விளைவிப்பவை என்பது மக்களுக்கு தெரிந்தாலும் மீண்டும் மீண்டும் மக்கள் ஏன் அதே உணவை நாடுவதற்கு அதன் சுவைதான் காரணம். மீண்டும் மீண்டும் சாப்பிடத்தூண்டும், சுண்டியிழுக்கும் சுவைக்கு பின்னால் பல ரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன. சுவைக்காக சேர்க்கப்படும் பதப்படுத்திகள், சுவையூட்டிகள் போன்றவை உயிருக்கே உலை வைப்பவை.

மது, சிகரெட் போலவே இது போன்ற சுவைகளுக்கும் அடிமையாகிவிட்டால் அதிலிருந்து மீள்வது கடினம். மதுவும், சிகரெட்டும் ஒழுக்கம் சார்ந்த பிரச்னையாக நம் சமூகத்தில் கருதப்படுவதால் நோய்களுக்கு பலர் அதை மட்டும் சுட்டிக்காட்டுகிறார்கள். சிகரெட் பழக்கமும், புகைப்பழக்கமும் இல்லாதவர்களுக்கும் பல நோய்கள் வருவதற்கு என்ன காரணம் என யாரும் எண்ணி பார்ப்பதில்லை.

“எந்த ஒரு உணவுப்பொருளிலும் அதன் நிறத்தை கூட்ட, நிறத்தை வெளுக்க வேதிப்பொருள் சேர்க்கப்படும் போது அதன் தன்மை மாறிவிடுகிறது, அதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும்” என எச்சரிக்கிறார் மருத்துவர் புகழேந்தி.

“ஒரு மனிதனுக்கு அத்தனை சத்துக்களுமே மிகவும் முக்கியமானவை. எது குறைந்தாலும், அதிகரித்தாலும் ஆபத்துதான். பொதுவாக எல்லா உணவுகளிலும் மாவுச்சத்து என்பது குறிப்பிட்ட அளவு இருக்கிறது. மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள் என எல்லாமே நமக்கு தேவை. இதில் ஏதாவதொன்றை மட்டுமே சாப்பிடுவேன், மற்றதை தவிர்ப்பேன் என முடிவெடுத்தால் உடல் பாதிக்கப்படுவதை யாராலும் தடுக்கமுடியாது.

மைதா வகை உணவுகள் அனைத்திலும் ஊட்டச்சத்துக்கள் அறவே கிடையாது, இதில் அளவுக்கு அதிகமான மாவுச்சத்து நிறைந்திருக்கும். மாவுச்சத்து நிறைந்த உணவுகள் பொதுவாக அதிகமாக சாப்பிடத் தூண்டும், எளிதில் வயிறு நிறைந்த திருப்தியை தராது. ஃபாஸ்ட் புட், பீட்சா, பர்கர் போன்ற உணவுகள் வெறும் குப்பை உணவுகள். இந்த உணவுகளால் ஒரு சதவிகிதம் கூட நல்லது கிடையாது. உணவு குறித்து கடந்த 30 ஆண்டுகளாக சரியான புரிதல் நம்மிடம் இல்லை. நமது முன்னோர் உணவுகள் எப்போதுமே பாதுகாப்பானது. உணவு என்பது பசிக்காக 80% ருசிக்காக 20% என பிரித்து சாப்பிட வேண்டும், ஆனால் ருசியே பிரதானமாகி , மேல்நாட்டு உணவுகளின் மேல் இருக்கும் மயக்கமும் அதிகரித்து விட்ட சூழ்நிலையில் நம்மில் பலர் ஒவ்வொரு வேளை உணவையும் ருசியாக இருந்தால் மட்டுமே சாப்பிடுவேன் என அடம்பிடிக்கிறார்கள். இது தவறு.

கம்பையும்,தினையையும், கேழ்வரகையும், அரிசியையும் ஒதுக்கிவிட்டு பீட்ஸா, பர்கர் சாப்பிடும் குழந்தைகளை பெருமையாக கருதும் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை குழி தோண்டி புதைக்கிறார்கள் என அர்த்தம். இட்லியையும், உப்புமாவையும் ஒதுக்கும் இளைஞர்கள் பரோட்டாவை சால்னா என்ற குழம்புடன் சாப்பிடும்போது, அவர்களது உடலில் இருக்கும் ஆரோக்கியமான செல்கள் குழம்ப ஆரம்பிப்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.

ஒவ்வொரு செல்லாய் பாதிக்கப்பட்டுத்தான், பாதிக்கப்பட்ட செல்கள் பல்கிப் பெருகி புற்று கட்டிகள் வருகின்றன. புற்றுநோய் என்பது ஏதோ ஓரிரு நாளில் வந்துவிடும் நோய் கிடையாது. பெரும்பாலான புற்றுகள் சராசரியாக 11 ஆண்டுகள் உடலில் மெல்ல மெல்ல வளர்ந்து அதன் பிறகு தான் அறிகுறியை காட்ட ஆரம்பிக்கின்றன. உணவுக்குழாய் புற்றுநோய் மேலை நாடுகளில் சர்வசாதாரணம். தற்போது இந்தியாவிலும் உணவுக்குழாய் புற்றுநோய் பெருக ஆரம்பித்திருக்கிறது. செரிமான பாதைகளில் புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் தவறான உணவுப் பழக்க வழக்கம்.

சரி அப்படியானால் ருசி என்பதையே மறந்து விட்டு சப்பென்ற உணவுகளை மட்டும்தான் சாப்பிட வேண்டுமா என பலர் கேட்ககூடும். ருசியும் முக்கியமே, ஆனால் அதற்கு எந்த அளவுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதை பொறுத்ததுதான் ஆரோக்கியம். பீட்சாவோ, பர்கரோ, பரோட்டாவோ, நூடுல்சையோ, கேக் கையோ வாரத்தில், மாதத்தில் என எப்போதோ ஒருநாள் சாப்பிடுவதால் பெரிய பிரச்னை இல்லை. இந்த குப்பை உணவுகளை அடிக்கடி சாப்பிடும்போதுதான் உடலில் குப்பை உணவுகள் அதிகம் சேர்ந்து உடல் பாதிப்பு அடைகிறது. நமது சமூகத்தில் எதாவது ஒரு உணவை யாராவது நல்லது என சொல்லிவிட்டால் உடனே எல்லோரும் ஒட்டுமொத்தமாக சென்று அந்த உணவை சாப்பிட ஆரம்பித்து விடுகிறார்கள். பிறகு கொஞ்ச நாளிலேயே எந்த முன்னேற்றமும் இல்லையே என விசும்புகிறார்கள்.

அரிசி, மீன், அசைவம், முட்டை, சிறுதானியம், பருப்பு வகைகள், நட்ஸ், காய்கறிகள், பழங்கள் என எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் அளவாக சாப்பிடுவதுதான் நல்லது. ஒரே வகை உணவை தொடர்ந்து சாப்பிடுவதை விட ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வெரைட்டி உணவுகளை சாப்பிடலாம். ஒரு நாள் அரிசிப் பொங்கல் சாப்பிட்டால், இன்னொரு நாள் சாமைப் பொங்கல், மற்றொரு நாள் ரவைப் பொங்கல் என மாற்றி மாற்றி சாப்பிடவேண்டும்.

உலகில் எந்தவொரு உணவிலும் எல்லா சத்துக்களும் இருப்பது கிடையாது. எனவே உணவை அணுகுவதில் நமது பார்வை மாற வேண்டும். சரிவிகித உணவுகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். வெறும் மாவுச் சத்து நிறைந்த உணவுகளை புறக்கணிக்க வேண்டும். நார்ச் சத்துள்ள உணவுகளை சாப்பிடவேண்டும். ஹோட்டல் உணவுகளை எப்போதாவது சாப்பிடுவதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் எப்போதும் ஹோட்டல், எப்போதும் ஃபாஸ்ட் ஃபுட் என்றால் உங்களுக்கு எமன் நீங்கள்தான்” என அதிர்ச்சியுடன் முடிக்கிறார் டாக்டர் புகழேந்தி.

உணவு குறித்த பார்வையும், ஆரோக்கியமான விவாதங்களும், மாற்றமும் நம்மிடமிருந்து தான் தொடங்கவேண்டும்.
 

rni123

Friends's of Penmai
Joined
Oct 24, 2014
Messages
371
Likes
322
Location
ME
#2
Re: பீட்சா, பர்கர், பரோட்டா பிரியரா நீங்கள்.... &#29

Thanks Chan for the useful info
 

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#3
Re: பீட்சா, பர்கர், பரோட்டா பிரியரா நீங்கள்.... &#29

Vasikave thikkunu irukku. Thanks for sharing this useful info.
 

Naemira

Commander's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Oct 22, 2015
Messages
1,109
Likes
3,406
Location
tuticorin

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.