பீரியட் கால டயட்

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#1
பீரியட் கால டயட்

‘‘ஒரு பெண் பூப்படையும்போது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கிறாள். உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களை சமாளிக்க அவளுக்கு ஆரோக்கியமான திடமான உணவுகளை கொடுக்க வேண்டும்’’ என்கிறார் உணவு ஆலோசகர் அம்பிகா சேகர்.

‘‘பொதுவாகவே இந்த நேரங்களில் பெண்கள் தங்கள் உடல்களில் பல மாற்றங்களை சந்திக்கிறார்கள். மார்பகங்கள் வளர்ச்சியடையும், இடுப்பு எலும்பு விரிவடையும், கர்ப்பப்பை உறுதியாகும். இந்த நேரத்தில் ஆரோக்கியமான
உணவுகளை சாப்பிடுவது அவசியம்.
உளுத்தம் பருப்பில் செய்யப்படும் களியில் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடலாம் அல்லது அதில் உருண்டைகள் செய்து தரலாம். உளுந்து, இடுப்பு எலும்பை பலப்படுத்தும். உலர்ந்த பருப்புகளான பாதாம், பிஸ்தா, அத்திப்பழம், அக்ரூட், பேரீச்சை பழம் சாப்பிடுவது நல்லது. காரணம், ரத்தப் போக்கு அதிகமாக இருக்கும் என்பதால் அதை ஈடுகட்ட பேரீச்சை, மாதுளை மிகவும் நல்லது. அத்திப்பழம் கர்ப்பப்பையை வலுப்படுத்தும். அசைவ உணவுகளில் மீன், முட்டை, சிக்கன் போன்றவற்றை சாப்பிடலாம். இந்த உணவுகளை பெண் வயதுக்கு வந்த பிறகு மாதாமாதம் அந்த நேரத்தில் கொடுப்பது அவசியம். இதனால் உடல் சோர்வு ஏற்படாமலும், இழக்கும் சக்தியை ஈடுக்கட்ட உதவியாக இருக்கும்.
இப்போது பெண் குழந்தைகள் பத்து வயதிலேயே வயதுக்கு வந்துவிடுகிறார்கள். இதற்கு காரணம், செடென்டரி வாழ்க்கை முறை. அதாவது அவர்கள் வெளியே விளையாடுவது குறைந்தவிட்டது. டி.வி. முன் அமர்ந்து சிப்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் ஹார்மோன் பாதிப்புதான் முக்கிய காரணம். இதைத் தடுக்க அவர்கள் தினமும் உடற்பயிற்சி, யோகாசனம் செய்ய வேண்டும். முடிந்த வரை துரித உணவுகளை தவிர்த்து வீட்டில் தயாரிக்கப்படும் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.

மாதவிடாய் காலத்தில் புரதம் நிறைந்த உணவுகள் (மீன், முட்டை, பனீர், சிக்கன், முளைக்கட்டிய பயிறு வகைகள், கொண்டைக் கடலை) போன்றவற்றை சாப்பிடலாம். காய்கறி சாலட், பழங்கள், இளநீர், மோர், பழச்சாறுகள் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம். எண்ணெயில் பொரித்த உணவுகள், காரமான உணவுகளை தவிர்ப்பது நல்லது. இது வயிற்றில் வாயு பிரச்னையை ஏற்படுத்தும். மேலும் இந்தச் சமயத்தில் கர்ப்பப்பை சுருங்கி விரியும் என்பதால், அதே சமயத்தில் வயிற்றுக்கும் அதிக வேலைகளை கொடுக்கக் கூடாது. எளிதில் ஜீரணமாகும் இட்லி, ஆப்பம், இடியாப்பம், தோசை, தயிர்சாதம் போன்றவற்றை சாப்பிடலாம்...’’ என்று கூறிய அம்பிகா சேகர் அதற்காக உணவு சார்ட்டையும் வழங்கினார்.

காலை 6.00 மணிக்கு: கிரீன் டீ (இது உடலில் உள்ள கெட்டதை வெளியேற்றும்.)காலை 8.00 மணிக்கு: 2 இட்லி அல்லது ஆப்பம் அல்லது இடியாப்பம். உடன் புதினா அல்லது கொத்தமல்லி சட்னி ப்ளஸ் 2 பேரீச்சை பழம்.
பகல் 11.00 மணிக்கு: மோர் அல்லது இளநீர் அல்லது ஒரு பழச்சாறு
பகல் 1.00 மணிக்கு: ஒரு சப்பாத்தி, ஒரு கப் சாதம், சாம்பார், கூட்டு, பொரியல், கீரை, சுட்ட அப்பளம், ரசம், தயிர். (காரக்குழம்பு மற்றும் எண்ணெயில் பொரித்த அப்பளம் மற்றும் துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்

அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை அல்லது மீன் அல்லது சிக்கன் குழம்பு வைத்து சாப்பிடலாம். பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
மாலை 4.00 மணிக்கு: டீ, சுண்டல், அல்லது ஒரு கொய்யா பழம் அல்லது ஒரு ஆப்பிள் அல்லது மாதுளை.

இரவு 8.00 மணிக்கு: ரசம் அல்லது தயிர் சாதம் அல்லது இட்லி அல்லது தோசை அல்லது ஆப்பம் அல்லது இடியாப்பம். படுக்கும் முன் ஒரு டம்ளர் பால்.

Dinakaran
 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#5
Hi Nisha & Sudha,

You are most welcome deras...Nisha parattu unakku vandha enna enakku vandha enna..ellam onnu dhaan da(romba over ah irukko??? :) )
 
Last edited:

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#6
Hi dear:hug::kiss:,

after reading your comment my hand is full of Goose Bumps:roll::roll:.......... Thanks dear:tea:.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.