பீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் டிப்ஸ்

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#1
பீரியட் பிரச்னைக்கு ஸ்பெஷல் டிப்ஸ்


பீரியட் பிரச்னை பெண்களை பாடாய்படுத்தும் பிரச்னைகளில் ஒன்றாக இருக்கிறது. நாட்கள் தள்ளி போவது, அதிகப்படியான உதிரப்போக்கு, அதிகவலி போன்ற மாதவிடாய் பிரச்னைகளால் பல பெண்கள் அவதிப்படுகிறார்கள். கருப்பையில் அல்லது ஹார்மோனில் வில்லங்கம் ஏதாவது இருந்தால் அதை உணர்த்தும் எச்சரிக்கையாக இந்த பிரச்னை இருப்பதால் இதற்கு உடனே தீர்வு காண வேண்டியது அவசியம் என்கிறார் டாக்டர் சசிக்குமார். அவர் கூறியதாவது: ஒரு காலத்தில் பீரியட்ஸ் டைமில் ஓய்வும், சத்தான உணவும் கிடைத்தது. இப்போது அப்படியில்லை. பிஸியான வாழ்க்கை முறையில் நல்ல ஓய்வு என்பது கனவாகி விடுகிறது. ஹார்மோன் சுழற்சியின் வெளிப்பாடு தான் மாதவிடாய். மாதம் ஒரு கருமுட்டை பெண்ணின் முட்டைப் பையில் இருந்து வெளிப்படும்.

இந்தக் கரு குழந்தையாக உருவாகி விட்டால் பீரியட்ஸ் வராது. முட்டை உயிராக மாறாமல், வெளிப்படுவது தான் உதிரப்போக்கு. இந்த சுழற்சிக்கு ஈஸ்ட்ரோ ஜென் மற்றும் புரோஜஸ்ட்ரான் ஆகிய 2 ஹார்மோன்கள் தான் காரணம். வழக்கமாக 28 நாட்களுக்கு ஒரு முறை பீரியட்ஸ் ஏற்பட்டு மூன்று முதல் 5 நாட் கள் வரை உதிரப்போக்கு இருக்கும். இந்தக் காலகட்டத்தில் பீரியட்ஸ் துவங்குவதற்கு முன்பு பெண்ணின் உடலில் சில அறிகுறிகள் தோன்றும். ஒருவிதமான டென்ஷன், கோபம் வருதல், மார்பகங் கள் கொஞ்சம் வீங்கி வலி போன்றவை ஏற்படலாம். சில நேரங்களில் பீரியட்ஸ் லேட் ஆகி தாமதமான உதிரப்போக்கு, வழக்கத்தை விட குறைவாகப் போதல், அதிக உதிரப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இதில் அதிக உதிரப்போக்கு முக்கியமான ஒன்று. கருப்பையில் ஏதாவது பைபர் கட்டி கள் அல்லது வேறு கட்டிகள் இருக்கும் பட்சத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்படலாம்.

ஹார்மோன் அளவு மாறுபாடு, கருப்பையின் உட்புறச் சுவர் தடிமன் ஆவது போன்றவை இதற்கு காரணங்களாக இருக்கலாம். இதெல்லாம் சரியாக இருந்தும் கூட சிலருக்கு அதிக உதிரப் போக்கு மற்றும் கட்டியாக உதிரம் போதல் போன்ற தொல்லைகள் இருக்கும்.உதிரப்போக்கு அதிகம் போதல், கட்டியாக உதிரம் வெளிப்படும் போது அதிக வலியிருந்தால் சாதாரணமாக எண்ணி விடக்கூடாது. உடனடியாக கர்ப்பவியல் நிபுணர்களை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும். ஸ்கேன் மற்றும் கருப்பைக்கான பரிசோதனைகள் மூலம் சரியான காரணத்தை கண்டறிய வேண்டியதும் அவசியம். கருப்பைக் கட்டிகளை கண்டுகொள்ளாமல் விடும்போது அவை கேன்சர் கட்டிகளாக மாறும் அபாயம் உள்ளது. எனவே உங்களின் அதிக உதிரப் போக்கு கேன்சருக்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என்கிறார் டாக்டர் சசிக்குமார்.

மனரீதியான ஆறுதல்:

இளம் வயது முதல் மெனோபாஸ் வரை பெண்களின் பீரியட்ஸ் நேரத்தில் அவர்களது பிரச்னைகளை உடன் இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பீரி யட்சுக்கு முன்பு வரும் டென்ஷனை கணவர்கள் புரிந்து கொண்டு விட்டுக் கொடுக்கலாம். உடல் சோர்வு, இடுப்பு வலி உள்ளிட்ட பிரச்னைகளுக்கு வழக்க மான வேலைகளில் இருந்து முதல் மூன்று நாட்களுக்கு மட்டும் சிறிது ஓய்வு தேவை. பீரியட்ஸ் நேரத்தில் வலி, எரிச்சல், வாந்தி உள்ளிட்ட பிரச்னைகள் உள்ள பெண்கள் சரியாக சாப்பிட மாட்டார்கள். இந்த நேரத்தில் உடன் இருப்பவர்கள் அவர்களை சத்தான உணவை சாப்பிட செய்வது அவசியம். ஒவ் வொரு பீரியட்ஸ் நேரத்திலும் சுகாதாரமான நாப்கின் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் நாப்கினை மாற்றுவது அவசியம். நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது கல் உப்பு சேர்த்து அடிக்கடி பிறப்புறுப்புகளை கழுவலாம். இதன் மூலம் அரிப்பு மற்றும் நோய்த் தொற்று உருவாவதை தடுக்க முடியும்.


பாட்டி வைத்தியம்

அசோக மரப்பட்டை 3 கிராம் அளவுக்கு எடுத்து தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்கவும். இதனை தினமும் மூன்று வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு குடித்து வந்தால் மாத விலக்கின் போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்.

அருகம்புல்லை அரைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் குணமாகும்.

அன்னாசிப் பழத்தை தினமும் சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

ஆலமர இலைகளை பொடி செய்து வெண்ணெய்யில் குழைத்து சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்னையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

இத்திப் பிஞ்சை சீரகம் சேர்த்து வேக வைத்து சாப்பிடுவதன் மூலம் அதிக ரத்தப்போக்கு குறையும்.

ஈச்சுரமூலி இலையுடன் கருஞ்சீரகம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறுகள் தீரும்.

எள்ளை தண்ணீரில் போட்டு ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை குடித்து வந்தால் மாதவிலக்கு காலத்தில் உண்டாகும் தொந்தரவுகள் குறையும்.

கடுக்காய், மருதம்பட்டை, ஆவாரம்பூ ஆகியவற்றில் தலா 200 கிராம் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும். இவற்றை பொடியாக அரைத்து வைத் துக் கொள்ளவும். இதில் 5 கிராம் அளவுக்கு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கஷாயத்தை குடிப்பதன் மூலம் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும். அதிக ரத்தப் போக்கும் கட்டுப்படும்.

கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு உடனே வெளிப்படும்.

செம்பருத்திப் பூக்களை அரைத்து அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு ஒழுங்காகும்.

செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலி குணமாகும்.

சோம்பு, மாவிலங்கப்பட்டை, மிளகு மூன்றையும் சம அளவுக்குக் காய்ச்சி 100 மில்லி அளவுக்குக் குடித்தால் மாதவிலக்கு பிரச்னைகள் சரியா கும்.

ரெசிபி

எனர்ஜி உருண்டை: நிலக்கடலை, பொட்டுக்கடலை, பாதாம், பிஸ்தா, முந்திரி ஆகியவற்றை தேவையான அளவு எடுத்து உலர்த்தி சுத்தம் செய்து கொள்ளவும். இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும். தேவையான சர்க்கரையை தனியாக பொடியாக்கி கொள்ளவும். அரைத்தவற்றை ஒன்றாக கலந்து தேன், சிறிதளவு தண்ணீர் சேர்த்து உருண்டையாக பிடித்துக் கொள்ளலாம். இந்த எனர்ஜி உருண்டையை சாப்பிடுவதன் மூலம் புரதம் மற்றும் இரும்புச் சத்து உடலுக்குக் கிடைக்கும். உதிரப் போக்கும் கட்டுப்படுத்தப்படும்.

பேரீச்சை பால்:

பாலை சுண்டக்காய்ச்சி எடுத்துக் கொள்ளவும். இதில் சர்க்கரைக்கு பதிலாக பனங்கற்கண்டு சேர்க்கவும். பேரீச்சம் பழத்தை சிறு சிறு துண்டு களாக நறுக்கி பாலில் சேர்க்கவும். இதமான சூட்டில் இந்த பாலை குடிக்கலாம். பனங்கற்கண்டு உடல் சூட்டை குறைக்கிறது. பேரீச்சம் பழத்தில் இருந்து உட லுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைக்கிறது. பாலில் இருந்து கால்சியம் கிடைக்கிறது. இது மூன்றும் உடல் இழந்த சத்தை திரும்பப் பெற உதவும்.

கொள்ளு கூட்டு:

மணம் வரும் வரை கொள்ளுவை வறுத்து எடுக்கவும். இத்துடன் சின்ன வெங்காயம், பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து கூட்டு போல வேக வைத்து எடுக்கவும். இதில் உப்பு சேர்த்து சீரகம், மிளகாய், கருவேப்பிலை தாளித்து கூட்டுடன் சேர்த்து கடைந்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட லாம். கொள்ளு பருப்பில் இருந்து இரும்புச் சத்து கிடைக்கிறது.

டயட்

பீரியட்ஸ் நேரத்தில் உடல் இழக்கும் சக்தியை திரும்பப் பெற என்ன சாப்பிடலாம் என்று சொல்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா. ‘பீரியட்ஸ் நேரத்தில் ரத் தப்போக்கு ஏற்படுவதால் உண்டாகும் இழப்பை ஈடு செய்ய இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். உடல் சூட்டை தணித் துக் கொள்ள குளிர்ச்சியான ஆகாரங்களை எடுத்துக் கொள்வது அவசியம். இதற்காக இளநீர், வெண்ணெய், வெந்தயம், வெள்ளரி உள்ளிட்டவற்றை உணவில் சேர்க்கலாம். அதிக எண்ணெய், மசாலா மற்றும் அசைவ உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. கீரை மற்றும் பழச்சாறுகள் உடல் இழந்த சக்தியை மீட்டுத் தரும். இந்த நேரத்தில் பெண்களின் எடை குறையும். இதைத் தவிர்க்க புரதம் உள்ள பருப்பு வகைகளை உணவில் சேர்ப்பது அவசியம். சர்க்கரைக்கு பதிலாக தேன் சேர்ப்பதன் மூலம் பீரியட்ஸ் நேரத்தில் வரும் வயிற்று வலி குறையும். நோய் எதிர்ப்பு சக்தி தரும் உணவுகளும் அவசியம் என்கிறார் சங்கீதா.

-Tamil murasu

Ganga
 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#4
Most welcome Yamini and Suji...
 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#5
அதிக ரத்தப் போக்கு ஆபத்தானது...

மாதவிலக்கின் போது வெளியேறுகிற ரத்தம் அசுத்தமானது என்றும், அது எத்தனை அதிகமாக வெளியேறுகிறதோ, அத்தனை நல்லது என்றும் பலருக்கும் தவறான ஒரு அபிப்ராயம் உண்டு. ஆனால், ‘‘அதிக ரத்தப் போக்கு ஆரோக்யமானதில்லை, ஆபத்தானது’’ என்கிறார் மகப்பேறு மற்றும் ரத்த நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் மகேஸ்வரி.

‘‘25 முதல் 35 நாட்களுக்குள் மாதவிலக்கு வர்றதும், 5 நாட்கள் நீடிக்கிறதும்தான் இயல்பானது. அந்த 5 நாட்கள்ல 25 முதல் 80 மி.லி ரத்தம் வெளியேறலாம். 80 மி.லிக்கு கூடுதலாகவோ, 5 நாட்களைத் தாண்டியோ ரத்தப் போக்கு இருந்தா, அது அசாதாரணமானதுனு சந்தேகப்படணும். அதிகப்படியான ரத்தப் போக்கை ‘மெனரேஜியா’னு சொல்றோம்.

13 & 14 வயசுல வயசுக்கு வர்ற ஒரு பெண்ணுக்கு, முதல் சில மாசங்களுக்கு மாதவிலக்கு சுழற்சி மற்றும் வெளியேறும் ரத்தப் போக்கின் அளவுல மாற்றம் இருக்கலாம். அது கொஞ்ச நாள்ல சரியாயிடும். அதுவே 18 & 19 வயசுலயும் தொடர்ந்தாலோ, மாதவிலக்கு நாள்ல அந்தப் பெண் ரொம்பக் களைச்சு, சோர்ந்து போனாலோ, அலட்சியப்படுத்தாம மருத்துவரைப் பார்க்கணும்.

அதிகப்படியான ரத்தப் போக்குக்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். ரத்தத் தட்டணுக்கள்ல ஏதாவது குறைபாடு இருக்கலாம். சிலர் இதய நோய்க்கு மருந்துகள் எடுத்துப்பாங்க. ரத்தம் உறையறதைத் தடுக்கிற அந்த மருந்துகளோட பக்க விளைவா இருக்கலாம். கர்ப்பப்பையோட உள் பக்க லைனிங் பாகம் அப்படியே உதிரும் போதுதான் அது ரத்தப் போக்கா வெளிப்படுது. பிறகு புது திசுக்கள் உருவாகும். இந்த இயக்கத்துல கோளாறு இருக்கலாம். கர்ப்பப்பைல தொற்று அல்லது கட்டி, காப்பர்டியோட விளைவு, என்டோமெட்ரியாசிஸ்னு சொல்லக்கூடிய கர்ப்பப்பை வீக்கம்னு பல காரணங்களால உதிரப் போக்கு அதிகமா இருக்கலாம். வயசான, நாலஞ்சு பிள்ளைங்க பெற்றெடுத்த, குண்டான உடல்வாகுள்ள பெண்களுக்கு இப்படி இருந்தா, அது கர்ப்பப்பை புற்றுநோய்க்கான அறிகுறியாங்கிறதையும் சோதிக்கணும். கர்ப்பப்பைக்கு வெளியில உருவாகிற கர்ப்பம், கர்ப்பப்பை வாய் கட்டி மற்றும் தொற்று, தைராய்டுனு இன்னும் சில காரணங்களையும் குறிப்பிடலாம்.
அதனால ரத்தப் போக்கு அதிகமா இருக்கிறப்ப, சின்னப் பொண்ணுங்களுக்கு அப்படித்தான் இருக்கும், போகப் போக சரியாயிடும்னு நினைக்க வேண்டாம். உடனடியா மகப்பேறு மருத்துவரைப் பார்த்து, பரிசோதிக்கறது நல்லது.
முதல்ல கர்ப்பப் பையை ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கும். பிறகு ரத்தத்துல ஹீமோகுளோபின் அளவும், தைராய்டும் சரி பார்க்கப் படணும். அளவுக்கதிக ரத்தப் போக்கு இருந்தா, தேவைப்பட்டா டி அன்ட் சி செய்து, திசுக்களை பயாப்சி சோதனைக்கும் அனுப்ப வேண்டியிருக்கும். அதிகப்படியான ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த, ஹார்மோன் கலக்காத அருமையான மருந்துகள் இப்ப நிறைய இருக்கு’’ என்கிறார் மகேஸ்வரி.

Dinakaran
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#7
really useful msg ganga.....
 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#8

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#9
hi ganga, unga inf romba usefula irundhadhu. problems pathiyum remedy pathiyum therinjukka mudinjadhu. thank u so much...-Anitha.
 

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#10
hi ganga, unga inf romba usefula irundhadhu. problems pathiyum remedy pathiyum therinjukka mudinjadhu. thank u so much...-Anitha.
<BR><BR>Thanks Anitha....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.