புதுமை...

Joined
May 20, 2018
Messages
32
Likes
33
#1
என்ன துளசி இங்க நின்னு என்ன யோசிச்சுட்டு இருக்க??? என கேட்டுக்கொண்டே ஆபீஸசுக்குள் வந்தாள் பிரியா...இருவரும் தலை முதல் கால் வரை அத்துனையும் தயாரிக்கும் ஒரு பன்னாட்டு கம்பெனியில் ப்ரோடக்ஷன் எக்ஸ்கியூடிவ் ஆஃபீசர் ஆக பணிபுரிபவர்கள்....

" இல்லடி இன்னைக்குள்ள ஒரு இன்னோவேடிவ் ப்ரோடக்ட்க்கு எம்டி ஐடியா சொல்ல சொன்னாருல"

"ஓஹோ அதான் இவ்ளோ யோசிக்கிறியா ஒண்ணும் இல்ல வா நாம எம்டிய பாக்கப்போலாம்"

"ஹேய் ஐடியா"நீ வா பாத்துக்கலாமனு சொல்லிட்டே எம்டி அறைக்கு சென்றனர்"

"குட் மார்னிங் சார் ...ஐடியா கிடைச்சுட்டு சார்...அப்படியா சொல்லுங்க பாப்போம் என சேட்டு தமிழில் அந்த வடநாட்டு எம்டி கூற..."சார் நாம ஏன் சார்க்கோல்,நீம் யூஸ் பண்ணி டூத் பிரஷ்,turmeric பவுடர் மில்க் வித் பெப்பர்,கார்லிக் மில்க்,அப்புறம் ஸ்கின்க்கு மேத்தி பைன் பேஸ்ட்,கால்க்கு ஆயில் மிக்ஸ்ஷர் வித் பைனஸ்ட் சால்ட்..."ஆச்சர்யமாய் பார்த்தார் எம்டி லால்...துளசியும் தான்"

"வாவ்!!!!எக்ஸ்ஸெலென்ட் ஐடியாஸ்..கோ அண்ட் எக்ஸ்கியூட் இட்"என எம்டி கூற நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தனர் இருவரும்"என்னடி என்னலாமோ சொல்ற நீ ஐடியா என வியந்து துளசி கேக்க"

"ஹே அதெல்லாம் நாம அந்த காலத்துல யூஸ் பண்ணதுதான்...நீ அதோட தமிழ் பேர பாரு...கரித்தூள்,வேப்பங்குச்சி தான் சார்க்கோல்,நீம் பிரஷ்...மஞ்சத்தூள் மிளகுபால் இருமல்நா நாம அம்மா கொடுக்கிறது...பூண்டு பால் வயித்துப்புண்ணை ஆத்துறதுக்கு ஆச்சிக சொல்லுறது...அப்புறம் வெந்தையம் அரைச்சது முகத்துக்கு..நல்லெண்ணையும் உப்பும் கலந்த தண்ணி கால்வலிக்கு சொல்லுறது"வியப்பு விலகாமல் பார்த்தாள் துளசி...

"இப்போல்லாம் பெயர் மாத்தி ஆங்கிலத்தில சொன்னதானமா வாங்குறாங்க...பாரம்பரியம் போயிறக்கூடாது அதே நேரத்தில கம்பெனிக்கும் ஐடியா ஆச்சு அதான் சொன்னேன்..."பெருமிதமாய் பிரியாவை அணைத்துக் கொண்டாள்..."சரி வா கடுங்காப்பி குடிக்க போலாம்..ஹா ஹா அதான்டி blackcoffee..."சிரித்துக் கொண்டே சென்றனர்...
 

Annapurani Dhandapani

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jan 19, 2017
Messages
723
Likes
2,026
Location
Chennai
#2
Ha... Ha... Ha... :LOL::ROFLMAO:

Correctu than.... English mogham ellaraiyum aatti padaikkidhu....
 

Similar threads

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.