புரட்டாசி வழிபாடு! - Purattasi vazhipadu

vishnusree

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2011
Messages
9,834
Likes
35,778
Location
Chennai
#1
புரட்டாசி சனிக்கிழமையின் மகத்துவம் தெரியுமா?
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் கீதையில் கண்ணபிரான். மார்கழி மாதத்தைப் போலவே புரட்டாசி மாதமும் இறைவனின் தி ருவிழாக்கள் பல நடக்கும் மாதமாக விளங்குகிறது. திருப்பதியில் பிரம்மோற்சவம் நடப்பது போலவே, பல பெருமாள் கோயில்களிலும் வருடாந்திர திருவிழாக்கள் நடை பெறுகின்றன. தேவி பராசக்தியைப் போற்றும் நவராத்திரி விழாவும் இம்மாதத்தில் தான் நடை பெறுகின்றது. இது தவிர திருப் பதி வெங்கடாசலபதியைக் குலதெய்வமாகக் கொண்டுள்ள குடும்பங்களில் மாவிளக்கு ஏற்றி திருவாராதனம் செய்வது வழக்கம்.


மஹாவிஷ்ணுவுக்கு உகந்த புரட்டாசி: பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்றென்கின்றனர். புதனின் அதி தேவதைய õகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. இந்த மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
 

vishnusree

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2011
Messages
9,834
Likes
35,778
Location
Chennai
#2
Re: புரட்டாசி வழிபாடு!

மஹாவிஷ்ணுவுக்கு உகந்த புரட்டாசி: பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை. ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்றென்கின்றனர். புதனின் அதி தேவதைய õகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. இந்த மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
 

vishnusree

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2011
Messages
9,834
Likes
35,778
Location
Chennai
#3
Re: புரட்டாசி வழிபாடு!

எவ்வாறு வழிபட வேண்டும்?


புரட்டாசி சனியன்று ஓம் நாராயணாய நம என்ற எட்டெழுத்து மந்திரத்தைச் சொல்கிறோம். இதிலுள்ள நம என்ற சொல்லுக்கு உனக்கே நான் உரிய வன் என்பது அர்த்தம். ஓம்காரமாக விளங்கும் நாராயணனே உனக்கே நான் உரியவன் என்பது மந்திரத்தின் முழுப்பொருள். அதாவதுஉலகத்தில் வந்து விட்ட பிறகு, என்றோ ஒருநாள் செல்லப்போகிறோம். அவ்வாறு செல்லும் நாளில் நாராயணா! உன்னால் வந்த நாங்கள் உன் இடத்திற்கே திரும்பி வந்து விடுகிறோம் என்று சரணாகதி அடைவதாக அர்த்தம். கலியுகக் கொடுமைகளில் இருந்து தப்பித்து, பூ லோகத்தில் சுகமாகவும், நிம்மதியாகவும் வாழ ஓம் நமோ நாராயணாய என்று சொல்வது பொருத்தமானது.புரட்டாசி சனி விரத முறை: புரட்டாசி சனியன்று காலையில் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். பகலில் மதியம் மட்டும் எளிய உணவு உண்ண வேண்டும். காலை, இரவில் பால், பழம் சாப்பிட்டுக் கொள்ளலாம். பகலில் விஷ்ணு சகஸ்ரநாமம், வெங்கடேச ஸ்தோத்திரம், அஷ்டோத்திரம் (108 போற்றி) படிக்க வேண்டும். பெருமாளுக்கு நைவேத்யமாக துளசி தீர்த்தம், இளநீர், தயிர்,பழங்கள் படைத்து வழிபட வேண்டும். இந்த விரதம் மேற்கொண்டால் கிரகதோஷம் நீங்கும். குறிப்பாக சனிக்கிரகத்தால் ஏற்படும் கெடுபலன் அகலும். வறுமை நீங்கி செல்வவளம் பெருகும். இரவில் பெருமாள் கோயிலுக்கு சென்று பெருமாளுக்கு நெய் தீபமும், சனீஸ்வரருக்கு எள்தீபமும் ஏற்றி வழிபட வேண்டும்.
 

vishnusree

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2011
Messages
9,834
Likes
35,778
Location
Chennai
#4
Re: புரட்டாசி வழிபாடு!

புரட்டாசி சனிக்கிழமை வழிபடுவதால் என்ன நன்மை!


கன்யா மாதம் என்று சொல்லப்படும் புரட்டாசி மாதம் முழுவதும் விரதமிருந்து பெருமாளை வழிபட சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். கன்யா (புரட்டாசி) மாதத்தில்தான் சனி பகவான் பிறந்தார். எனவே, புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது பெருமாளுக்கு மகிழ்ச்சியைத் தரும், சனியின் பார்வையும் பலவீனமடையும். அன்று முழுவதும் உபவாசம் இருப்பது சிறப்பாகப் பேசப்படுகிறது. கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் கருணை மிகுந்த ஆஞ்சநேயசாமி, சனியின் பிடியிலிருந்து காப்பாற்றுவார். இதற்குப் புராணத்தில் ஒரு கதை உண்டு.


ஒரு சமயம் சனி பகவான் ஆஞ்சநேயரைப் பிடிக்க அவரிடம் அனுமதி கேட்டார். சனியின் நச்சரிப்புத் தாங்காமல் ஆஞ்சநேயர், என் தலைமீது அமர்ந்து கொள் என்று சொன்னதும், ஆஞ்சநேயர் தலையில், சனி அமர்ந்தார். இதுதான் சமயம் என்று அங்கிருந்த பெரிய பாறாங்கல்லை தன் வாலில் எடுத்துத் தன் தலை மீது அமர்ந்திருக்கும் சனியின் தலைமீது வைத்தார். பாறாங்கல்லின் பாரம் தாங்காமல் மூச்சு வாங்கிய சனி, தன்னை விடுவிக்கும்படி ஆஞ்சநேயரிடம் மன்றாடவே, என்னையும் என்னை வணங்கும் பக்தர்களுக்கும் இனி தொந்தரவு கொடுக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடு என்று சொல்லவே, ஆஞ்சநேயரின் கட்டளைக்கு அடிபணிந்தார் சனி. அன்றிலிருந்து ஆஞ்சநேயரை வணங்கும் பக்தர்களை சனிபகவான் தொந்தரவு செய்வதில்லை. புரட்டாசி சனிக்கிழமைகளில் யாருக்கும் கடன் கொடுக்கவும் கூடாது. கடன் வாங்கவும் கூடாது. ஆனால் தர்மம் நிறையச் செய்யலாம். காகத்திற்கு அன்று ஆலை இலையில் எள்ளும் வெல்லமும் கலந்த அன்னம் வைத்தால் சனியின் தாக்கம் நீங்கும்.


புரட்டாசி சனிக்கிழமையன்று சிவாலயங்களுக்குச் சென்று சனி பகவானை வழிபட்டு வணங்கினால், சனி தோஷம் நீங்கும். புனிதமிக்க புரட்டாசி மாதத்தில் வரும் விரதங்கள் புண்ணிய பலன் அதிகம் தரும் என்பது ஐதீகம். ஜேஷ்டா விரதம், மகாலெட்சுமி விரதம், தசாவதார விரதம், கதளி கவுரிவிரதம், அநந்த விரதம், பிரதமை, நவராத்திரி பிரதமை, ஷஷ்டி, லலிதா விரதம் போன்றவை விசேஷமானவை.
 

vishnusree

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2011
Messages
9,834
Likes
35,778
Location
Chennai
#5
Re: புரட்டாசி வழிபாடு!

கலியுகத்தின் சிறந்த விரதம்!
சத்தியலோகத்தில் பிரம்மாவைத் தரிசிக்கச் சென்ற நாரதர், “கலியுகத்தில் விஷ்ணுவைப் பூஜிப்பது எப்படி?” என்று கேட்டார். அதற்கு பி ரம்மா,“லட்சுமி பதியான திருமாலின் அருள் பெற பக்தியுடன் சனிவார விரதம் மேற்கொள்வது நல்லது. புரட்டாசியில் வரும் சனி இன்னும் வி÷ சஷமானது. இதனால் சூரியனைக் கண்ட பனி போல துன்பம் நீங்கும். கலியுகத்தில் சனிவார விரதம் மேற்கொண்டால் ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் என அனைத்து நன்மையும் கிடைக்கும்,” என விளக்கம் அளித்தார். நாரதர் மூலம் இதன் அருமையை உணர்ந்து தேவர்கள் அனைவரும் விரதம் மேற்கொண்டு பலன் அடைந்தனர்.
 

sumitra

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
26,510
Likes
35,502
Location
mysore
#6
Re: புரட்டாசி வழிபாடு!

Hi Vishnusree, you have given such a wonderful information about புரட்டாசி வழிபாடு! Thank you!
 

vishnusree

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2011
Messages
9,834
Likes
35,778
Location
Chennai
#7
Re: புரட்டாசி வழிபாடு!

திருமால் 108 போற்றி!


புரட்டாசி சனி விரதமிருப்பவர்கள் பெருமாள் கோயில்களில் கூட்டாக அமர்ந்து இந்த 108 போற்றியை 11 முறை சொல்ல, வேண்டியது நடக்கும். வீடுகளில் பெருமாளுக்கு பூஜை செய்பவர்கள் மூன்று முறை சொல்ல வேண்டும்.


ஓம் அன்பின் சுடரே போற்றி
ஓம் அளவிலா அறமே போற்றி
ஓம் அருட்கடலே போற்றி
ஓம் அரவ சயனா போற்றி
ஓம் அக்காரக்கனியே போற்றி
ஓம் அரவிந்தலோசனா போற்றி
ஓம் அச்சத மூர்த்தி போற்றி
ஓம் அற்புத லீலா போற்றி
ஓம் அநாதரட்சகா போற்றி
ஓம் அலர்மேல் மார்பா போற்றி
ஓம் அலங்கார பிரியனே போற்றி
ஓம் ஆதிநாராயணா போற்றி
ஓம் ஆயர் கொழுந்தே போற்றி
ஓம் ஆழ்வார் உயிரே போற்றி
ஓம் ஆதிமூலமே போற்றி
ஓம் ஆபத்து சகாயா போற்றி
ஓம் ஆலிலை பாலகா போற்றி
ஓம் ஆனையை காத்தாய் போற்றி
ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
ஓம் இன்னல் தீர்ப்பாய் போற்றி
ஓம் இமையவர் தலைவா போற்றி
ஓம் ஈகை நெஞ்சினாய் போற்றி
ஓம் உலகமுண்ட வாயா போற்றி
ஓம் உம்பர் கோமானே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
ஓம் எட்டெழுத்தானே போற்றி
ஓம் எழில்மிகு தேவா போற்றி
ஓம் ஏழுமலையானே போற்றி
ஓம் ஏழைப் பங்காளா போற்றி
ஓம் ஒளிமணி வண்ணா போற்றி
ஓம் ஓங்காரப் பொருளே போற்றி
ஓம் கலியுக வரதனே போற்றி
ஓம் கண் கண்ட தேவா போற்றி
ஒம் கருட வாகனனே போற்றி
ஓம் கல்யாண மூர்த்தி போற்றி
ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
ஓம் கருட கொடியானே போற்றி
ஓம் கமலக் கண்ணனே போற்றி
ஒம் கஸ்துõரி திலகனே போற்றி
ஓம் கலியுக தெய்வமே போற்றி
ஓம் கார்முகில் வண்ணா போற்றி
ஓம் குன்றம் தாங்கினாய் போற்றி
ஓம் கோவிந்த மூர்த்தி போற்றி
ஓம் கோபியர் லோலா போற்றி
ஓம் கோகுல பாலா போற்றி
ஓம் கோதண்டபாணி போற்றி
ஓம் சர்வலோக சரண்யா போற்றி
ஓம் சபரிக்கு அருளினாய் போற்றி
ஓம் சகஸ்ரநாம பிரியனே போற்றி
ஓம் சாந்த சொரூபியே போற்றி
ஓம் சங்கடம் தீர்ப்பாய் போற்றி
ஓம் சங்கரப்பிரியனே போற்றி
ஓம் சங்கு சக்கர தாரியே போற்றி
ஓம் சப்தகிரி வாசனே போற்றி
ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
ஓம் சீனிவாச பெருமாளே போற்றி
ஓம் சீதேவி நாயகனே போற்றி
ஓம் சுயம்பிரகாசா போற்றி
ஓம் சுந்தர தோளினாய் போற்றி
ஓம் சுந்தரராஜமூர்த்தி போற்றி
ஓம் செல்வ நாராயணனே போற்றி
ஓம் தசரதன் வாழ்வே போற்றி
ஓம் தசாவதாரம் எடுத்தாய் போற்றி
ஓம் திருமகள் கேள்வா போற்றி
ஓம் திருவேங்கடவனே போற்றி
ஓம் திருமலை உறைவாய் போற்றி
ஓம் திருத்துழாய் பிரியனே போற்றி
ஓம் துருவனைக் காத்தாய் போற்றி
ஓம் துன்பம் தீர்ப்பவனே போற்றி
ஓம் தேவகி பாலகனே போற்றி
ஓம் தோள்மாலை சூடினாய் போற்றி
ஓம் நந்தகோபாலனே போற்றி
ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி
ஓம் நான்முகன் பிதாவே போற்றி
ஓம் பக்தவத்சலனே போற்றி
ஓம் பக்தர் சகாயனே போற்றி
ஓம் பரந்தாமனே போற்றி
ஓம் பத்மநாபனே போற்றி
ஓம் பரம தயாளனே போற்றி
ஓம் பத்மாவதி துணைவா போற்றி
 

vishnusree

Yuva's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 23, 2011
Messages
9,834
Likes
35,778
Location
Chennai
#8
Re: புரட்டாசி வழிபாடு!

ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
ஓம் பாற்கடல் உறைவாய் போற்றி
ஓம் பார்த்தசாரதியே போற்றி
ஓம் பார் புகழ் தேவா போற்றி
ஓம் பாஞ்சஜன்யம் ஏந்தினாய் போற்றி
ஓம் பாண்டவர் துõதா போற்றி
ஓம் பாஞ்சாலியை காத்தாய் போற்றி
ஓம் பாலாஜி வெங்கடேசா போற்றி
ஓம் பிரகலாதப் பிரியனே போற்றி
ஓம் புருஷோத்தமனே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
ஓம் புரட்டாசி நாயகா போற்றி
ஓம் மகாவிஷ்ணுவே போற்றி
ஓம் மண்மலர் ஏற்றாய் போற்றி
ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
ஓம் மலையப்ப சுவாமி போற்றி
ஓம் மாயக் கண்ணனே போற்றி
ஓம் யசோதை கண்மணியே போற்றி
ஓம் ராமானுஜர் வாழ்வே போற்றி
ஓம் வகுளமாலிகா செல்வனே போற்றி
ஓம் விஜய ராகவனே போற்றி
ஓம் வில்லொடித்த வீரா போற்றி
ஓம் வீபிஷணன் வாழ்வே போற்றி
ஓம் வெண்ணெயுண்ட வாயா போற்றி
ஓம் வேங்கடத்துறைவா போற்றி
ஓம் வைகுண்டவாசனே போற்றி
ஓம் வையம் காப்பவனே போற்றி
ஓம் நமோ நாராயணனே போற்றி போற்றி.
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,501
Likes
84,479
Location
Bangalore
#9
Re: புரட்டாசி வழிபாடு!

அனைத்துப் பகிர்வுகளும் மிகவும் அருமை விஷ்ணு ஸ்ரீ . மிக்க நன்றி
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.