புருஷன் வீட்டில் வாழ போற பெண்ணே !!!

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,134
Likes
20,710
Location
Germany
#1
பெண்களுக்கு பதினாறிலும், ஆண்களுக்கு இருபதிலும் என முந்தைய தலைமுறை திருமணங்கள் முடித்து வைக்கப்பட்டபோது, அந்த வயதில் இருவருக்குமே அவரவர்க்கென பெரிய அளவில் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் வளர்ந்திருக்கவில்லை

இன்றைய சமூக, பொருளாதர மாற்றங்களால் பெண் ஆண் இருவருமே சுயசிந்தனை, சுதந்திரம், தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகள் என்றெல்லாம் அமைத்துக் கொள்கிறார்கள்.

அப்படி வெவ்வேறு துருவங்களாக இருக்கும் இருவர், மணவாழ்க்கையில் இணையும்போது முட்டி முளைக்கின்றன பிரச்னைகள். எனவே, மாலை சூடிக்கொள்ளும் முன்னர் அவர்களுக்கு திருமணம் பந்தம், வாழ்வியல் பற்றி ஆலோசனைகள் அவசியமாகிறது

திருமணம் என்பது சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது அல்ல; சரியான துணையாக இருப்பது' (Marriage is not selecting the right person, but being the right person) என்று ஒரு பழமொழி உண்டு.

பெற்றோர்களும், சுற்றத்தார்களும், நண்பர்களும் சூழ நின்று ஆசீர்வதித்து நடத்தி வைக்கும் திருமணத்தின் உண்மையான அர்த்தம், ஆண் - பெண் இருவரும் வாழ்ந்து காட்டுவதில்தான் இருக்கிறது!

ஒரு ஆத்மார்த்த இணையாக, துணையாக இருக்க ஒரு இல்லற மந்திரம்

வருங்கால துணையோடு பீச், கோயிலுக்குப் போவதில் தவறில்லை. அதேபோல அவர்கள் வீட்டுக்கும் ஒருமுறை விஜயம் செய்யுங்கள். கூச்சமா.? சரி, போனிலாவது மாமனார், மாமியார் நாத்தனார் என மற்ற உறவுகளோடு பேசிப் பழகுங்கள்.அது அந்நியத்தைக் குறைத்திருக்கும்.

ஒருவேளை நீங்கள் அவர்களின் வீட்டுக்கு வருவது, பேசுவது தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று அவர்கள் சொன்னாலோ, செய்கையால் உணர்த்தினாலோ 'டல்' ஆகாதீர்கள், அவர்களை 'பழைய பஞ்சாங்கம்' என நினைக்காதீர்கள். புன்னகையோடு ஏற்று சந்திப்பைத் தவிருங்கள்

தயக்கத்தின் காரணமாகக்கூட துணையின் உறவுகள் ஆரம்பத்தில் உங்களுடன் ஒட்டாமல் இருக்கலாம்.உடனே உங்களுக்குள் தீர்ப்பு எழுதி, அதே மன நிலையோடு அவர்களை அணுகாதீர்கள்.

கைக்குள்ள போட்டுக்க... முறுக்கா இரு' போன்றஅறிவுரைகள் எல்லாவற்றையும் கேட்டு எது சரி, எது தவறு என அமைதியாக யோசித்து சரியானதை 'டிக்' அடியுங்கள்.

துணையைப் பற்றிய எதிர்பார்ப்பை ஆரம்பத்திலேயே அதிகம் வளர்த்துக் கொள்ளாதீர்கள். முடிந்தவரை மனதை காலி பையாக வைத்துக் கொண்டு கிடைப்பதை அமைதியாகச் சேகரியுங்கள். பிடிக்காததை பிறகு தவிர்த்துவிடலாம்

இந்தக் கால கட்டத்தில் திருமண முறிவு, கல்யாணத்தன்று தகராறு போன்ற நெகட்டிவ் செய்திகளைக் கேட்கவோ, படிக்கவோ தவிர்த்துவிடுங்கள்.

கற்பனையில் டூயட் பாடுங்கள்.அதேசமயம், துணையின் வீட்டு உறவுகளோடு சந்தோஷமாக இருக்கும் பாச சீன்களையும் மனதில் ஓடவிடுங்கள்.

சாதாரண வேலை என்று நாம் நினைக்கும் எந்த வேலையுமே... பயிற்சிக்குப்பின்தான் சுலபமாக கைகூடும் திருமண பந்தத்தில் இணைய
மனதளவிலான பயிற்சிகள் அவசியம். அது சுயபயிற்சியாகவும் இருக்கலாம்... அனுபவம் வாய்ந்த பெரியோரின் வழிகாட்டுதல்களாகவும் இருக்கலாம். அல்லது குடும்பநல ஆலோசகர்களின் அறிவுரைகளாகவும் இருக்கலாம்.

துணையின் 'ஆத்மார்த்த' உறவாகிவிட வேண்டும் என்ற ஆசை சரிதான். ஆனால், திருமணம் நடந்த ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ அது நிகழ்ந்துவிடாது. அதற்கு அன்பு, நம்பிக்கை, பொறுமை, சகிப்புத்தன்மை, புரிதல் என பல விஷயங்கள் தேவைப்படுகின்றன. அவை நமக்குள் இருக்கிறதா என்பதை பரிசோதித்துக் கொள்வதும், இல்லாதவற்றை வளர்த்துக் கொள்வதும் முக்கியம்.

உங்கள் பக்க உறவுகளோடு நீங்கள் இருப்பது போன்ற அந்நியோன்யத்துடன் துணையால் இருக்க முடியாது. அப்படி எதிர்பார்ப்பதும் தவறு. அதுபோன்ற விஷயங்களுக்கு மனதைப் பழக்கிக் கொள்ளுங்கள்.

நீங்கள் நெடுங்காலமாக பின்பற்றும் பழக்கத்தை மாற்றிக் கொள்ளும் சூழ்நிலையும் ஏற்படலாம்.முரண்டு பிடிக்காமல், அட்லீஸ்ட் அதை தள்ளி வையுங்கள்.

குறிப்பாக, உங்களுக்குத்தான் உயிர் தோழி-தோழன். உங்கள் துணைக்கல்ல.

குடும்ப வாழ்க்கையின் அடித்தளம் இரண்டு விஷயங்கள்... அன்பு, நம்பிக்கை. இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றின் நூலிழை அறுந்தாலும் இன்னொன்றில் நூலிழை அதுவாகவே அறுந்துவிடும் என்பதால் எப்போதும் இவை இரண்டிலும் நேர்மையாக இருப்பது ஆரோக்கியமானது.

மந்திரங்கள் உங்கள் மணவாழ்க்கையில் மகிழ்ச்சியை நிரப்பட்டும்

ref vikatan,marriage awareness,
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.