புறா இறகு பாதம்! - அழகே அழகு!

yuvan_nan@yahoo

Friends's of Penmai
Joined
Feb 3, 2012
Messages
391
Likes
478
Location
coimbatore
#1
புறா இறகு பாதம்! - அழகே அழகு!
* கொஞ்சம் தயிரில் ஒரு மூடி எலுமிச்சை சாற்றைக் கலந்து கால் பாதம், விரல் இடுக்குகளில் தேய்த்து பத்து நிமிடம் ஊறியபின் வெந்நீரால் கழுவினால், கால் மென்மையாக இருக்கும்
* பியூட்டி பார்லர், டிபார்ட்மெண்டல் ஸ்டோர்களில் கிடைக்கும் காஸ்மெட்டிக் வாக்ஸை வாங்கி, கடுகு எண்ணெயைச் சூடுபடுத்தி, அதில் சிறிதளவு மெழுகைப் போட்டு உருகியதும் இறக்கி நன்றாகக் குழைக்கவும், தினமும் பாதங்களில் இதைத் தடவி வந்தால், பாதம் பூப்போல் மிருதுவாகி விடும்.
* சிலருக்கு பாதங்களில் அடிக்கடி அரிப்பு உண்டாகும். பெரிய வெங்காயத்தை அரைத்து சாறெடுத்து, பாதங்களில் தடவி, ஐந்து நிமிடம் மசாஜ் செய்யவும். எப்படிப்பட்ட அரிப்பும் குணமாகிவிடும்.
* ஓர் அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் சிறிதளவு உப்பு, எப்சம் உப்பு, ஒரு டீஸ்பூன் வாசனை எண்ணெய் விட்டு பாதங்களை கால்மணிநேரம் ஊறவிடவும். பின் சுத்தமான பிரஷ்ஷால் தேய்க்கவும். அதன்பின் துடைத்து, பாதங்களில் மாய்ஸ்சரைசர் தடவவும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால், இறந்த செல்கள் வெளியேறும். பித்தவெடிப்பும் வராது.
* சுத்தமான விளக்கெண்ணெயும், மஞ்சள் தூளும் சேர்த்து பேஸ்ட் போல செய்து, அதை இரவு படுக்கும் முன் காலில் பித்தவெடிப்பு உள்ள இடத்தில் தடவி வந்தால், பித்தவெடிப்பு நாளடைவில் நீங்கிவிடும்.
* எதையும் செய்ய நேரம் இல்லையா? தினமும் குளித்தபின், தேங்காய் எண்ணெய்(அ) லிக்விட் பாராஃபினைத் தேய்த்தால், கால் சுத்தமாகவே இருக்கும்.

 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.