புற்று நோயும் சில ஆலோசனைகளும்

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,134
Likes
20,710
Location
Germany
#1
புற்று நோயும் சில ஆலோசனைகளும்

தமிழ் சினிமாவின் உபயத்தாலும், சீரியல்களின் தாக்குதல்களாலும், புற்று நோய் என்ற வார்த்தையைக் கேட்டாலே பொதுமக்கள் நடுநடுங்கிப் போகிறார்கள். புற்றுநோய் வந்துவிட்டால் நிச்சயம் மரணம் என்ற செய்திதான் பரவலாக மக்களின் மனத்தை ஆக்கிரமித்திருக்கிறது. ஆனால், அது வராமலும் தற்காத்துக் கொள்ள முடியும்; ஆரம்ப நிலையிலேயே அதைக் கண்டுபிடித்து விட்டால், நிச்சயம் அதன் பிடியிலிருந்து மீண்டு வர முடியும்.

நம் அனைவரது உடலிலுமே கான்சர் செல்கள் கட்டாயம் இருக்கும். பல பில்லியன்களாக அவை பெருகும் வரை அவற்றின் தாக்கத்தை உணர முடியாது. பல்வேறு பரிசோதனைகளைச் செய்து பார்த்தால் மட்டுமே ஒருவரது உடலில் புற்றுநோயின் செல்கள் பரவியிருப்பதை மருத்துவரால் கண்டுபிடிக்க முடியும். ஒருவரது உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால், புற்றுநோய் செல்கள் தானாகவே அழிந்து, அது பரவாமல் கட்டியாக மாறாமல் இருக்கும்.

புற்றுநோய் செல்களை வெல்ல ஒரு வழியை மருத்துவ ரீதியாகச் சொல்ல வேண்டுமென்றால் அந்த செல்களைப் பட்டினி போட வேண்டும். அவை பெருகாமல் இருக்க, அதிக சர்க்கரை சேர்த்த உணவையும், பாலும் அளிக்காமல் இருக்க வேண்டும். ஆம், இனிக்கும் சர்க்கரையை - கசக்கும் cancer feeder என்றே சொல்வோம். ஆக, சர்க்கரையைக் குறைத்து mucus உண்டு செய்யும் பாலையும் குறைத்து, மதுவையும், புகைபிடித்தலையும் தவிர்த்து, ரசாயனம் சேர்த்த உணவை ஒழித்து வாழ்ந்தால் புற்றுநோய் புறமுது கிட்டு ஓடிவிடும். வாங்க புற்று நோய் நிபுணரான டாக்டர் ரவி சொல்லும் ஆலோசனைகளைக் கேட்போம்.

உடம்புக்குள் ஏற்படும் மாற்றங்களால், மாசுபட்ட சுற்றுப்புறச் சூழலால், பூச்சிக் கொல்லிகள், ரசாயனங்கள், சூரியனின் கதிரிலிருந்து வரும் புறஊதாக் கதிர்களால், சுத்தமில்லாத தண்ணீர், வண்டிகள் உமிழும் புகை, மது, வைரஸ்கள் இப்படி எல்லாமாகச் சேர்ந்து புற்றுநோயைக் கொடுக்கிறது. மேலும், எந்த உணவையுமே கருக்கிச் சாப்பிடக் கூடாது. மோர் மிளகாய், வத்தல், வடாம் இதெல்லாம் சிலர் சுவைக்காகக் கருக்கிச் சாப்பிடுவார்கள். அது gastric cancer தோன்ற வழிவகுக்கும். தினம் குறைந்தபட்சம் இரண்டு வகையான பழங்களையாவது சாப்பிட வேண்டும்.

வெள்ளரிக்காய், பாகற்காய், கோஸ், காளிஃப்ளவர், ப்ரோக்கோலி, வெங்காயம், பூண்டு எல்லாமே புற்று நோய் வராமல் தடுக்கக் கூடியவை. மஞ்சளில் anti cancerous properties அதிகம் இருப்பதால் அதை உணவில் கட்டாயம் சேர்த்துக் கொள்வது நல்லது. நெல்லிக்காய் anti aging, anti cancerous கொண்டது என்பதால் அதை கட்டாயம் சாப்பிட வேண்டும்.

அனைத்து வயதினருக்கும் உடல் உழைப்பு அவசியம். இன்றைய கால கட்டத்தில் அது இல்லாததால் பல உபாதைகள் வருகின்றன.

திடீரென உடல் மெலிவது, திடீரென வரும் ரத்தச் சோகை, உடம்பின் ஏதாவது ஒரு பகுதியிலிருந்து ரத்தக்கசிவு தோன்றுவது, குரலில் மாற்றம், நடையில் தடுமாற்றம், உணவை விழுங்குவதில் சிரமம், பசியே இல்லாத நிலை, தொடர்ந்து வரும் இருமல், தோலில் மாற்றம் (மச்சம், மருவில் திடீரென வரும் மாறுதல்), மலம் போவதில் சிக்கல், தொடர்ந்து வயிற்றுவலி, தொடர்ந்து ஜுரம், விடாத தலை வலி... இவையெல்லாமே பத்து நாட்களுக்கு மேல் இருந்தால் புற்றுநோய் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது. முதல் இரண்டு ஸ்டேஜ்களிலேயே புற்று நோயைக் கண்டுபிடித்துவிட்டால் அதை நிச்சயம் சரி செய்திட முடியும்,"

புற்று நோய் பரப்பும் பிளாஸ்டிக்!

உலக அளவில் புகைபிடிப்பவர்களுக்கே அதிகமாக புற்று நோய் வருகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. lung cancer, stomach cancer, liver cancer, colorectal cancer, oesophagus cancer ... இவை ஆண்களைத் தாக்கும் முக்கியமான ஐந்து வகையான கான்சர்கள். பெண்களைத் தாக்கும் முக்கியமான ஐந்து புற்றுநோய்கள்
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.