புழுக்கள் பலவிதம்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
புழுக்கள் பலவிதம்

கொக்கிப்புழுவும் (Hookworm) பரவக்கூடியதே. சுகாதாரமற்ற இடங்களில் நடக்கும்போது, கொக்கிப்புழுக்களின் முட்டைகள் காலில் ஒட்டிக்கொள்ளும். சருமத்தின் வழியாக ரத்தத்தில் கலந்து, குடலுக்குச் சென்றடைந்து வளரும். அங்கு, இனப்பெருக்கத்தில் ஈடுபடும்.

ஒரு நாளைக்கு ஒரு பெண் கொக்கிப்புழு கிட்டத்தட்ட 35 ஆயிரம் முட்டைகள் வரை இடும். இவை, சிறுகுடலில் கொக்கிபோல ஒட்டிக்கொண்டு, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சிக்கொண்டிருக்கும். இதனால், ரத்தசோகை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். எனவே, வயல்வெளி, மைதானம் போன்ற இடங்களில் வெறும் காலில் நடப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஊசிப்புழு (Pinworm) என்ற சின்னச்சின்னப் புழுக்கள் மலத்தில் காணப்படும். இவை, பெரும்பாலும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் பரவியிருக்கும். காற்றின் மூலமாகவும், தொடுதலின் மூலமாகவும் மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்பு உள்ள புழு இது. குழந்தைகளின் வயிற்றில் இந்தப் புழுக்கள் இருந்தால், அந்த வீட்டுப் பெரியவர்களுக்கும் இவை பரவும். குடும்பத்தில் அனைவரும் மருந்துகளை உட்கொண்டால் மட்டுமே, இவற்றைக் கட்டுப்படுத்த முடியும்.
ஆஸ்காரிஸ் (Ascaris) புழு, உணவுகளிலிருந்து நம் உடலுக்கு வருகின்றன. சுகாதாரமற்ற நீர் மற்றும் உணவுகளின் மூலம் பரவும் இந்தப் புழுக்கள் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தும்.

 
Last edited:

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.