புஷ்டியான குழந்தை அழகா? ஆபத்தா?

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
பீசா, பப்ஸ், பர்கர், நூடுல்ஸ், சிப்ஸ் போன்ற "பாஸ்ட் புட்' உணவுக்கு அடிமையாகி வரும் குழந்தைகள், வயதை மீறிய உடல்வாகுடன் வலம் வருகின்றனர். இதை உணராத பெற்றோர், தங்கள் குழந்தைகள் அதிக புஷ்டியாக வளர்வதாக மகிழ்கின்றனர் பெற்றோர் சிலர் இன்னும் ஒருபடி மேலே போய் "கொழுகொழு குழந்தை' போட்டிகளில் தங்கள் குழந்தைகளை பங்கேற்கச் செய்து பெருமைப்படுகின்றனர். இவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, "சிறு வயதில் வயதுக்கு மீறிய எடையுடன் உள்ள குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் இருதய நோய், சர்க்கரை நோய், சிறுநீரக கோளாறுகள் வர வாய்ப்புள்ளது' என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். வளரும் தலைமுறையை நோயாளிகளாக மாற்றி வரும் இன்றைய உணவு முறையின் அபாயம் பற்றி, கோவை, அவிநாசிலிங்கம் மகளிர் பல்கலையில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆய்வு குறித்து துறைத் தலைவர் பிரேமகுமாரி கூறுகையில், ""அதிகச் சத்து பிரச்னை, வசதியான பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகள் மத்தியில் மட்டுமே உள்ளது. சராசரி எடையை விட 10 சதவீதம் அதிக எடையுள்ள குழந்தைகள் "ஓவர் வெயிட்' குழந்தைகளாகவும், 20 சதவீதம் அதிக எடை உள்ள குழந்தைகள் "ஒபிசிட்டி' குழந்தைகளாகவும் கருதப்படுகின்றனர்,'' என்றார்.


சத்துக் குறைபாடுள்ள குழந்தைகள் குறித்து உலக சுகாதார கழகம் ஆய்வு நடத்தியது. இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வில் 12.4 சதவீத சிறுவர்கள் ஊளைச்சதை (ஒபிசிட்டி) பிரச்னையால் பாதிக்கப் பட்டுள்ளது தெரிய வந்தது. அவிநாசிலிங்கம் பல்கலையின் உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்துத் துறை பேராசிரியர்கள் கல்பனாவும் லட்சுமியும், கோவையில் 20 தனியார் பள்ளிகளில் படிக்கும் 10 முதல் 12 வயது வரையிலான 9,000 குழந்தைகளின் உணவுப் பழக்கங்கள் குறித்து அண்மையில் ஆய்வு நடத்தினர். இதில் 9 சதவீத குழந்தைகள் அதிக எடையுடனும், 7 சதவீத குழந்தைகள் "ஒபிசிட்டி' பிரச்னையுடன் தவிப்பதும் கண்டறியப்பட்டது.


இது குறித்து பேராசிரியர் கல்பனா கூறியதாவது: குழந்தைகளின் உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளுக்கு பெற்றோரே முழுக் காரணம். குழந்தை கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கின்றனர்; குழந்தைகளை தேர்வுக்கு தயார் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். பள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகளை விளையாட அனுமதிப்பதில்லை. "டிவி' பார்க்கும் தங்களை தொந்தரவு செய்யாமல் இருக்க, குழந்தைகளின் கைகளில் நொறுக்குத் தீனி திணித்து கம்ப்யூட்டர், வீடியோ கேம்ஸ் விளையாட்டுகளில் ஈடுபடுத்துகின்றனர். உடல் உழைப்பு இல்லாத இக்குழந்தைகள் வயதுக்கு மீறிய எடையுடன் வளர்கின்றனர். நடுத்தரக் குடும்பங்கள் மற்றும் வசதியான குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்குதான் இந்த பாதிப்பு அதிகமாக ஏற்படுகிறது. தினமும் குழந்தைகளை ஒரு மணி நேரம் சுதந்திரமாக விளையாட அனுமதிப்பதே இப்பிரச்னைக்கு தீர்வு. இவ்வாறு கல்பனா கூறினார்.
 

Attachments

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#3

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,625
Likes
140,722
Location
Madras @ சென்னை
#7
Nice Info

 

Attachments

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.