பூசணிக்காய் காராமணி கூட்டு

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,847
Likes
2,765
Location
Bangalore
#1
பூசணிக்காய் காராமணி கூட்டு:


தேவையானவை:
பூசணிக்காய் - 300 கிராம்.
காராமணி - 150 கிராம்.
தேங்காய்த் துருவல் - 1/2 கிண்ணம்
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி.
தனியா - 3 மேசைக்கரண்டி.
இஞ்சி - சிறிய துண்டு.
பூண்டு - 5 பல்.
அரிசி மாவு - 3 தேக்கரண்டி.
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி.
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் - சிறிதளவு.
கறிவேப்பிலை - சிறிதளவு.


செய்முறை:
தேங்காய்த் துருவல், தனியா, இஞ்சி, பூண்டு இவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். காராமணியுடன் தேவையான அளவு நீர் சேர்த்து வேகவிடவும். பாதி வெந்ததும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய பூசணிக்காயை சேர்த்து வேக விடவும். கலவை நன்கு வெந்ததும் மசாலா விழுது, அரிசி மாவு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும். நன்கு கொதித்து வாசனை வந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.
 

sumitra

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
25,704
Likes
35,077
Location
mysore
#2
Great recipe. Health benefits are enormous. thank you
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.