பூனை கடித்தாலும் ரேபிஸ் வரும்!-Rabies may be obtained from Cat bite also

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,261
Likes
73,634
Location
Chennai
#1
பூனை கடித்தாலும் ரேபிஸ் வரும்!
அரசு மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் சங்குமணி இதுபற்றி கூறும்போது
'ரேபிஸ் என்பது ஒருவகை வைரஸ் தாக்குதலால் பாலூட்டிகளின் மூளையில் பாதிப்பை ஏற்படுத்துகின்ற ஒரு நோய். உடல் சோர்வு, காய்ச்சல், தலைவலி போன்றவை இதனுடைய ஆரம்பகால அறிகுறிகள். நோய் முற்றிவிட்டால், மூர்க்கத்தனம், தண்ணீரைக் கண்டு பயப்படுதல் போன்ற பல வினோதமான செயல்பாடுகள் பாதிக்கப்பட்டவருக்கு வந்துவிடும்.
இது நாய்க்கடியால் மட்டுமே பரவும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆடு, மாடு, குரங்கு, கழுதை, குதிரை, நரி, கீரி, பூனை, ஓநாய் என்று ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட எந்த ஒரு பாலூட்டி கடித்தாலும், ரேபிஸ் நோய் பரவிவிடும். ரேபிஸ் பாதித்த மனிதன் கடித்தால்கூட இன்னொரு மனிதனுக்கு அந்த நோய் பரவும். அதனால்தான் நோய் முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வரும் ரேபிஸ் நோயாளிகளை, தனி அறையில் வைத்து சிகிச்சை கொடுக்கிறோம். மூளைப் பாதிப்பு என்பதால், வெறி பிடித்ததுபோல் நடந்து கொள்வார்கள். அவர்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம். அமெரிக்காவில் நாய்க்கடியைவிடப் பூனைக்கடிக்குச் சிகிச்சை பெறுபவர்களே அதிகம். இந்தியாவைப் பொருத்தவரை பெரும்பாலும் நாய்க்கடி மூலமாகவே ரேபிஸ் வருகிறது.
ஒரு மருத்துவராக நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். ரேபிஸ் தாக்கிய விலங்கு வழக்கத்துக்கு மாறான செயல்களில் ஈடுபடும். இது தெரிந்த உடனேயே சம்பந்தப்பட்ட விலங்கை நாம் நெருங்கக் கூடாது. உங்களை எந்த விலங்கு கடித்தாலும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். நம்மைக் கடித்த விலங்கு ரேபிஸால் பாதிக்கப்பட்டு இருக்கிறதா என்று தெரியாது என்பதால், ரேபிஸ் தடுப்பூசி போடுவது மிக அவசியம். ரேபிஸைத் தடுக்க மட்டுமே மருந்து இருக்கிறது. வந்த பிறகு குணப்படுத்த இதுவரையில் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. நோய் முற்றிய (வைரஸ் கிருமி மூளைக்குச் சென்று பாதிப்பை ஏற்படுத்திய) பிறகு குணப்படுத்த சாத்தியமே இல்லை என்பது கசப்பான உண்மை. முற்றிய நிலையில் சிகிச்சைக்கு வந்த எவரும் இதுவரை உயிர் பிழைத்தது இல்லை. இவ்வளவு கொடூரமான நோயை நம் செல்லப் பிராணிகள்கூடப் பரப்பலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்'
உங்கள் வளர்ப்பு பிராணியை, வெறி நாய் மட்டும் அல்ல... சாதாரணத் தெரு நாய் கடித்தால்கூட உடனே தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது. மனிதர்களைப் போலவே நாய், பூனைக்கும் ரேபிஸ் தடுப்பூசி இருக்கிறது. நாய் கடித்த நாளை 0 என்று குறித்துக்கொண்டு அன்றைய தினம் ஒரு ஊசி போடுவோம். அடுத்து 3-வது நாள், 7-வது நாள், 14-வது நாள், 28-வது நாள் என்று வரிசையாக ஊசி போட வேண்டும். அதுவரையில் அந்த நாய் ஆபத்தானது என்பதால், அதைத் தொடவே கூடாது. கூண்டுக்குள் அடைத்து வைத்து அதற்கு உணவு கொடுப்பதே பாதுகாப்பானது. காரணம், அந்தப் பிராணி உங்களைக் கடிக்க வேண்டிய அவசியம் கூட இல்லை, அதன் எச்சில் உங்கள் கண்களிலோ, காயத்திலோ தெரித்துவிட்டால்கூட தொற்று ஏற்பட்டுவிடும்.
கூண்டுக்குள் இருக்கும் அந்தப் பிராணிக்கு நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் 15 நாட்களுக்குள் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்துவிடும். உடனே அதை நகராட்சி, மாநகராட்சி சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிடுவது உங்களுக்கும், உங்கள் ஊருக்கும் நல்லது. தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் 90 சதவிகிதம் பேர் நாயைத்தான் செல்லப்பிராணியாக வளர்க்கிறார்கள். 10 சதவிகிதம் பேர்தான் பூனையை வளர்க்கிறார்கள். பூனைக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். ஆனால், யாரும் இதைக் கடைபிடிப்பதில்லை'
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,183
Likes
83,751
Location
Bangalore
#3
Thanks for the info.
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,866
Likes
140,750
Location
Madras @ சென்னை
#4
TFS Kaa.

 

Attachments

shrimathivenkat

Yuva's of Penmai
Joined
Sep 30, 2012
Messages
8,456
Likes
17,261
Location
chennai
#5
thanks for sharing akka.
 

ilakkikarthi

Citizen's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 27, 2014
Messages
882
Likes
2,180
Location
delhi
#6
acho ippothan en poonai ellam veetah vitu oduchunga athungakitta vera niraya kadi vangirukken..........................
thanks to sharing fnd...........................
 

porkodit

Minister's of Penmai
Joined
Jul 15, 2011
Messages
3,162
Likes
8,910
Location
Tiruvannamalai
#7
Thanks for the info Selvi ka......
 

naanathithi

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Feb 3, 2012
Messages
5,156
Likes
25,882
Location
jAFFNA
#8
Ufff... Miidila.. Pets naale Naan 100 Steps Back :)


My Dear Natpe, @naanathithi Note Karo! :cool:
ஹி ஹி ஹீ நான்லாம் கரக்டா இன்ஜெக்ஷன் போட அழைச்சிட்டு போயிருவேன்!!! ;) குட்டி ரெக்ஸ் தன்னோட teeth strong ஆக என்னை யூஸ் பண்ணதால லாஸ்ட் இயர் நானும் போட்டேன் :bigsmile:
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,261
Likes
73,634
Location
Chennai
#9
Ufff... Miidila.. Pets naale Naan 100 Steps Back :)


My Dear Natpe, @naanathithi Note Karo! :cool:
Hi 5naan antha pakkame poka maatten!!!en frriends veettukku porathunnaa pudichu kattunaathaan ulleye poven!!!
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,261
Likes
73,634
Location
Chennai
#10
thanks friends.........
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.