பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.77, டீசல் விலை

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,264
Likes
3,171
Location
India
இன்றைய (ஏப்.,24) விலை: பெட்ரோல் ரூ.77.43, டீசல் ரூ.69.56

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.43, டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.56 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஏப்.,24) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.43 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 19 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.69.56 காசுகளாகவும் உள்ளன. 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
இன்றைய (ஏப்.,27) விலை: பெட்ரோல் ரூ.77.43, டீசல் ரூ.69.56

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.43, டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.56 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஏப்.,27) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.77.43 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.69.56 காசுகளாகவும் உள்ளன.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
இன்றைய (மே-1) விலை: பெட்ரோல் ரூ.77.43, டீசல் ரூ.69.56

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.43, டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.56 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மே-1) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.77.43 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.69.56 காசுகளாகவும் உள்ளன. கடந்த 8 நாட்களாக(ஏப்., 24 முதல்) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் அதே விலையில் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germanyபெட்ரோல் விலை நிலவரம்


சென்னை77.43
(No change)
டீசல் விலை நிலவரம்

சென்னை69.56
(No change)
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
இன்றைய(மே-13) விலை: பெட்ரோல் ரூ.77.43, டீசல் ரூ.69.56

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.43, டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.56 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மே-13) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.பெட்ரோல், டீசல் விலை விபரம்:எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்றைய பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி இன்றும் அதே விலையே தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.77.43 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.69.56 காசுகளாகவும் உள்ளன. கடந்த 20 நாட்களாக (ஏப்., 24 முதல்) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் அதே விலையில் தொடர்வது குறிப்பிடத்தக்கது.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,264
Likes
3,171
Location
India
இன்றைய(மே-19) விலை: பெட்ரோல் ரூ.78.78, டீசல் ரூ.71.04

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.78.78 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.04 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மே-19) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.
பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 32 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.78.78 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 24 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.71.04 காசுகளாகவும் உள்ளன.
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,323
Likes
550
Location
chennai
9-வது நாளாக விலை உயர்வு - சென்னையில் உச்சத்தை தொட்டது பெட்ரோல் விலை

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு முன்பு சுமார் 20 நாட்கள் வரை பெட்ரோல் - டீசல் விலை உயராமல் இருந்தது. தேர்தலின் போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அது மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதி எண்ணெய் நிறுவனங்கள் விலை உயர்வை நிறுத்தி வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில், கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 12-ந்தேதி முடிந்தபிறகு அடுத்த 2 நாட்களில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்தி வருகின்றன.

அவ்வகையில் 9-வது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னையில் வரலாற்றிலேயே பெட்ரோல், டீசல் விலை உயர்வு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

சென்னையில் பெட்ரோல் விலை 32 காசுகள் உயர்ந்து ரூ 79.79 என நிர்ணயக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 28 காசுகள் உயர்ந்து ரூ 71.87 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் டெல்லியிலும் பெட்ரோல் விலை உச்சத்தை எட்டியது. ஒரு லிட்டர் பெட்ரோல் 76.57 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மும்பையில் ரூ.76.87, கொல்கத்தாவில் ரூ.79.53 என்ற நிலையில் பெட்ரோல் விலை உள்ளது
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,947
Likes
20,803
Location
Germany
பெட்ரோல், டீசல் விலை விரைவில் குறைக்கப்பட வாய்ப்பு!

பெட்ரோல், டீசல் விலை, ரூ.2 முதல் ரூ.4 வரை விரைவில் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், பெட்ரோலியப் பொருள்களைச் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்திவருகின்றன. இந்த நிலையில், கடந்த சில நாள்களி்ல் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.76.87 ஆகவும், டீசல் ரூ.68.08 ஆகவும் அதிகரித்தது. கடந்த 9 நாள்களில் பெட்ரோல் ரூ.2.24 யும், டீசல் ரூ.2.15 யும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை விரைவில் 2 முதல் 4 ரூபாய் வரை குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் பெட்ரோலியத் துறை அமைச்சர்கள், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அதன் பின்னர், இதுகுறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்படும் இழப்பை எண்ணெய் நிறுவனங்களும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைப்பது என்பது மத்திய அல்லது மாநில அரசுகள் வரியைக் குறைப்பதன் மூலமாகவும், டீலர்களின் கமிஷனை சற்று குறைப்பதன் மூலமாகவும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை திரும்பப் பெறுவதன் மூலமாகவும் செயல்படுத்தலாம். பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விற்பனையில் தற்போது 37-47 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படுகிறது. டீலர்களுக்கு 3.8 சதவிகிதம் முதல் 4.8 சதவிகிதம் வரை கமிஷன் வழங்கப்படுகிறது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துவருவது மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது ஆகியவற்றால், உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து, பெட்ரோலிய மற்றும் நிதி அமைச்சகத்திடம் உரிய ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்படும் என நிதி அமைச்சக அதிகாரி தெரிவித்தார்
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,264
Likes
3,171
Location
India
வரலாறு காணாத உச்சம்: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80-ஐ தாண்டியது

1527142645085.png

பெட்ரோல்-டீசல் விலையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் கடந்த 13-ந் தேதி வரையில் 19 நாட்கள் பெட்ரோல்-டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இதற்கு கர்நாடக சட்டசபை தேர்தல்தான் காரணம் என்ற கருத்து வெளிப்படையாக பரவியது.

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்ததை தொடர்ந்து, பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் ஏறுமுகத்தில் பயணிக்க தொடங்கியது.

கடந்த 14-ந் தேதி பெட்ரோல் ரூ.77.61-க்கும், டீசல் ரூ.69.79-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் பெட்ரோல் ரூ.79.79-க்கும், டீசல் ரூ.71.87-க்கும் விற்பனை ஆனது.

இதன்மூலம் 4 ஆண்டுகளுக்கு பிறகு பெட்ரோல் விலை புதிய உச்சத்தை எட்டியது. கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 14-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.79.55-க்கு விற்பனை செய்யப்பட்டு இருந்தது நினைவுகூரத்தக்கது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதாலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாலும், பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயரும் என்று கருதப்படுகிறது.

அந்த வகையில், வரலாறு காணாத உச்சமாக, பெட்ரோல் விலை நேற்று லிட்டருக்கு 32 காசுகள் உயர்ந்து 80 ரூபாயை தாண்டியது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.11-க்கும், டீசல் ரூ.72.14-க்கும் விற்பனையானது. (நேற்று டீசல் லிட்டருக்கு 27 காசுகள் உயர்ந்தது.)

கடந்த 14-ந் தேதி முதல் நேற்று வரை பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.50-ம், டீசல் லிட்டருக்கு ரூ.2.35-ம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர் விலை ஏற்றத்தால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,264
Likes
3,171
Location
India
பெட்ரோல் விலை நிலவரம்


சென்னை

Updated : 31-05-2018

81.35
0.55(+0.68%)
டீசல் விலை நிலவரம்

சென்னை

Updated : 31-05-2018

73.12
0.54(+0.74%)
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.