பெண்களின் அழகு மோகம்- சர்வே

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#1
`லிப்ஸ்டிக்' என்ற உதட்டுப் பூச்சு நடிகைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றுபவர்கள், மேல்தட்டு மக்களுக்கானது என்ற நிலை யெல்லாம் தற்போது மாறிவருகிறது. நடுத்தர வர்க்கப் பெண்களும் `லிப்ஸ்டிக்' போட்டுக் கொள்ள விரும்புகிறார்கள். பொதுவாக இந்தியா வில் தற்போதைய நெருக்கடி நிலையைத் தாண்டி அழகு சாதனங்களின் விற்பனை அசத்தலாகவே இருக்கின்றன என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.


உலகிலேயே வேகமாக வளர்ந்துவரும் அழகு சந்தைகளுள் ஒன்று இந்தியா. அதாவது ஆண்டுக்கு 13 சதவீத வளர்ச்சி. மொத்த மதிப்பு உத்தேசமாகக் கூறினால் 30 ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல். உலக சந்தை வளர்வதைப் போல இருமடங்கு வேகத்தில் இந்திய அழகு சந்தை வளர்ந்து வருகிறது. இந்தியப் பெண்கள் தங்கள் அழகை மெரு கூட்ட அழகு சாதனப் பொருட்களின் உதவியை நாடுவதை இது தெளிவாகக் காட்டு கிறது. ஒரு கணக்கெடுப்பின்படி, இந்தியப் பெண்களில் 62 சதவீதம் பேர் தாங்கள் `மேக்கப்'புடன் தன்னம்பிக்கையாக இருப்பதாக கூறுகிறார்கள். ஒப்பனை விஷயங்களில் பெண்களின் உண்மையான கருத்து என்ன? இதோ, நாடளவில் நடத்தப்பட்ட ஓர் அழகு கருத்துக் கணிப்பு முடிவுகள்...



* எந்த வயதில் நீங்கள் `மேக்கப்' செய்துகொள்ள ஆரம்பித்தீர்கள்?


16 வயதுக்குக் கீழே- 6% பேர்
16-ல் இருந்து 20 வயதுக்குள்- 33%
20-ல் இருந்து 24 வயதுக்குள்- 61%


* உங்களின் சருமம் பாதிக்கப்படுவது பற்றி கவனிக்கிறீர்களா?


இல்லை- 29%
உரிய பூச்சு இல்லாமல் வெளியே கிளம்புவது இல்லை- 7%
கொஞ்சம் கவலைப்படுகிறேன்- 64%


* எவ்வளவு இடைவெளியில் நீங்கள் மேக்கப் போட்டுக்கொள்கிறீர்கள்?


தினசரி- 31%
விசேஷங்களுக்கு மட்டும்- 30%
தெரிந்தவர், உறவினர் வீடுகளுக்குச் செல்லும்போது மட்டும்- 39%


* ஓர் அழகுசாதனப் பொருளை எத்தனை நாட்களுக்குப் பயன்படுத்துகிறீர்கள்?


ஆறு மாதங்கள்- 16%
இரண்டு ஆண்டுகளுக்கு மேல்- 8%
தீரும் வரை- 23%
ஓராண்டுக்கு- 53%


* `மேக்கப்' இல்லாமலும் நீங்கள் அழகாக இருப்பீர்கள் என்று நினைக்கிறீர்களா?


இல்லை- 24%
ஆம்- 76%


* உங்களின் சருமத்தைப் பாதுகாப்பதில் தினசரி எவ்வளவு நேரத்தைச் செலவழிக்கிறீர்கள்?


அரைமணி நேரத்துக்கும் குறைவாக- 29%
ஒரு மணி நேரம், அல்லது அதற்கு மேலாக- 4%
10 நிமிடங்களுக்கும் குறைவாக- 67%


* மேக்கப் ஆலோசனைகளை நீங்கள் பெறுவது...


பிரபலங்கள் மூலம்- 8%
பிரபல `பிராண்ட்' விற்பனை நிலையங்களில்- 13%
குடும்பம் மற்றும் நண்பர்கள் மூலம்- 35%
பத்திரிகைகள் மூலம்- 43%
யாரிடமும் இல்லை- 1%


* ஒவ்வொரு மாதமும் நீங்கள் அழகுசாதனப் பொருட்களாக எவ்வளவு செலவழிக்கிறீர்கள்?


ஆயிரம் ரூபாய்க்கு மேல்- 31%
5 ஆயிரம் ரூபாய்க்குக் கீழ்- 16%
5 ஆயிரம் ரூபாய்க்கு மேல்- 5%
500 ரூபாய்க்குக் குறைவாக- 49%





* எப்போதும் உங்களிடம் தவறாமல் இருக்கும் அழகு சாதனம்?


லிப்ஸ்டிக்- 34%
ரூஜ்- 4%
சருமப் பூச்சு- 7%
ஐ லைனர்- 55%


* நீங்கள் அவசியமாகக் கருதும் சரும அழகுசாதனப் பொருள்?


கண்ணுக்குக் கீழ் பூசும் கிரீம்- 4%
பேஸ் வாஷ்- 23%
பாடி ஸ்க்ரப்- 12%
பேஸ் மாஸ்க்- 4%
மாய்சரைசர்- 57%


* எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை நீங்கள் முறையாக தலை அலங்காரம் செய்துகொள்கிறீர்கள்?


ஒவ்வொரு முறை தலை குளிக்கும்போதும்- 20%
வாரம் ஒருமுறை- 17%
எப்போதும் இல்லை- 2%
நிகழ்ச்சிகள், விசேஷங்களுக்கு மட்டும்- 61%


* உங்கள் தோற்றத்தில் செய்துகொள்ள நினைக்கும் மாற்றம்?


மூக்கைச் சீரமைப்பது- 17%
தோல் நிறத்தை மாற்றுவது- 10%
உதடுகளை ஒழுங்குபடுத்துவது- 6%
இடுப்பு அளவைக் குறைப்பது- 25%
எதுவுமில்லை- 4%
தொப்பையைக் கரைப்பது- 38%


***
 
Last edited:

reenu100

Friends's of Penmai
Joined
Aug 5, 2014
Messages
188
Likes
180
Location
pondicherry
#3
Very intresting info da............................
 

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#4

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#5

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#6
Joined
Apr 12, 2014
Messages
89
Likes
50
Location
trichy
#7

பெண்மைக்கு அழகு தரும் கார் கூந்தல்...

பெண்களின் அழகை அதிகரித்து காட்டுவதில் கூந்தலுக்கு முக்கிய பங்குண்டு. கூந்தலை சரியாக கவனிக்காவிட்டால் அவை உதிர்ந்து அடர்த்தி குறைந்து விடும். தலையில் பொடுகுத் தொல்லையும், பேன் தொல்லையும் சேர்ந்து மன உளைச்சலை ஏற்படுத்திவிடும். ஒருவரின் தலையில் இருந்து தினசரி குறைந்த பட்ச முடிகள் உதிர்வது இயல்பானதுதான் என்றாலும் அதிக அளவில் உதிரும் பட்சத்தில் தனி கவனம் செலுத்தவேண்டும் என்கின்றனர் அழகியல் நிபுணர்கள்.

பெண்களுக்கு கூந்தல் உதிர்வது தீராத பிரச்னையாக உள்ளது. கூந்தல் உதிர்வதற்கு உடலில் இரும்புச் சத்து குறைபாடு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமும் முக்கிய காரணமாகும். மன உளைச்சல், கோபம், படபடப்பு போன்றவைகளினால் கூந்தல் உதிர்கிறது. மேலும் அளவுக்கதிகமான வெயில், உப்புக் காற்று, குளோரின் கலந்த நீர் மற்றும் சுற்றுப்புற மாசு போன்றவையும் கூந்தலை பாதிக்கின்றன. அதேபோல் கூரிய முனைகள் கொண்ட சீப்பினால் தலை சீவுவது மற்றும் அழுக்கடைந்த சீப்பை பயன்படுத்துவது. கூந்தலுக்கு அடிக்கடி செய்கிற கலரிங், ஸ்ட்ரெயிட்டனிங், பெர்மிங் சிகிச்சைகள் போன்றவை கூந்தலை பாதிக்கின்றன.

முடி நன்கு வளர வேண்டுமானால், புரோட்டீன் சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இச்சத்து குறைவதால் தான் முடி உதிர்கிறது. முடி உதிர்வதை தடுக்க சில எளிய முறைகள் உள்ளன.

நரை முடி கருப்பாக :வாரம் ஒருமுறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாதகாலம் செய்து வந்தால், எந்த காரணத்தால் முடி கொட்டினாலும் நின்றுவிடும். அதோடு, இக்கீரை நரை விழுவதையும் தடுக்கும். முடியும் கருகருவென வளரும். பெரும்பாலானவர்களுக்கு சிறுவயதிலேயே நரைமுடி தோன்றி விடுகிறது. சிலருக்கு வம்சா வளியாகவும் நரை வருவதுண்டு. கவலை, மனச்சோர்வு, டீ, காபி அதிகம் குடித்தல் போன்றவற்றால் பித்த நரை உண்டாகும். வைட்டமின் பி12 நரையை போக்கவல்லது.

மருதாணி இலை :

கறிவேப்பிலையை ஒருநாள் விட்டு ஒருநாள் துவையல் அரைத்து சாப்பிட வேண்டும். காபி, டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், படிப்படியாக குறைத்து அறவே நிறுத்தி விடவேண்டும். மருதாணி இலையை நன்கு மைபோல் அரைத்து, அதில் எலுமிச்சம் பழச்சாறையும், வெந்தயம் பவுடர் இரண்டு ஸ்பூன் கலந்து கொள்ள வேண்டும். இக்கலவையை முதல் நாள் இரவே செய்து கொள்ள வேண்டும். காலையில் எழுந்ததும், இக்கலவையை அனைத்து முடிகளிலும் படும்படி நன்றாக தேய்த்து இரண்டு அல்லது மூன்று மணிநேரம் ஊறவைத்து பிறகு சிகைக்காய்த்தூள் தேய்த்து நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். குறிப்பாக மருதாணியை போடுவதற்கு முன், தலையில் எண்ணெய் பசை இல்லாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.
 

Attachments

jayakalaiselvi

Yuva's of Penmai
Joined
Aug 31, 2014
Messages
8,384
Likes
17,898
Location
India
#8
Thank u so much for the tips sir.....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.