பெண்களுக்கான உடற்பயிற்சி பாடங்கள்

silentsounds

Guru's of Penmai
Moderator
Joined
Feb 5, 2011
Messages
6,347
Likes
13,490
Location
Chennai
#1
அலுவலகங்களில் பணியாற்றி, வீடுகளில் தங்கள் கடமைகளை மேற்கொண்டு, ஓய்வின்றி உழைக்கும் பெண்கள் தங்கள் உடல்நலம் பாதுகாக்கத் தவறி விடுகின்றனர். உணவுப் பழக்கத்தினைச் செம்மைப் படுத்துவதன் மூலமும், தொடர்ந்து எளிதாகச் சில உடற்பயிற்சியினை மேற்கொள்வதன் மூலமும், உடல்நலத்தை இவர்கள் ஓரளவுக்காவது பாதுகாக்கலாம்.
உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கும், உடம்பில் எந்த பகுதியில் பிரச்னை உள்ளதோ அதற்கான பயிற்சிகளையும் கற்றுத் தரும் இணைய தளம் ஒன்று இலவசமாக இயங்கி வருகிறது. இந்த தளத்தின் பெயர் Exercise Finder. இதன் முகவரி http://www.divine.ca/en/fitnessandnutrition/exercisefinder/c_266. இது பெண்களுக்கு மட்டுமே உடற்பயிற்சிகளைக் கற்றுத் தரும் தளமாகும். இந்த தளத்தைத் திறந்தவுடன், உடம்பில் எந்த பகுதிக்கான உடற்பயிற்சி தேவையோ அதனைக் கிளிக் செய்தவுடன், அதற்கான உடற்பயிற்சிகள் பல பிரிவுகளாகக் காட்டப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, வயிற்றை ட்ரிம் செய்திட விரும்புபவர்கள், பெண்ணின் படத்தில் வயிற்றுப் பாகத்தில் கிளிக் செய்தால், அடுத்த திரையில், வயிற்றின் மேல் பாகம், நடுப்பாக, ஓரங்கள் என கூடுதலாகச் சில பிரிவுகளுக்கான ஆப்ஷன் விண்டோ கிடைக்கிறது.
பின் அவற்றைத் தேர்ந்தெடுத்தவுடன், அதற்கான பல்வேறு பயிற்சிகள் காட்டப்பட்டு, அருகே விளக்கமும் தரப்படுகின்றன.
இந்த பாடங்களின் ஒரு சிறப்பு, தண்ணீரில் இருந்தவாறு எவ்வாறு உடற்பயிற்சியினை மேற்கொள்ளலாம் என்று ஒவ்வொரு பிரிவிலும் கூறப்பட்டிருப்பதுதான். ஒவ்வொரு பயிற்சி முறைக்கும், இதனை மேற்கொண்டவர்கள் தெரிவித்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. நீங்களும் கருத்தினைத் தெரிவிக்கலாம். இதில் காட்டப்படும் உடற்பயிற்சிகள் அனைத்துமே மிக எளிமையானதாகவும், எந்த இடத்திலும் மேற்கொள்ள� ��் கூடியதாகவுமாக உள்ளன. ஒருமுறை சென்று பார்த்தால், நிச்சயம் இதனை உங்கள் ஆசானாகக் கொள்வீர்கள்.
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#4
Thanks 4 sharing this Guna....
 

lathabaiju

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jun 6, 2011
Messages
3,730
Likes
9,411
Location
Tirupur
#5
Guna sir, Romba useful ana information kuduthirukkinga. Rombaaaaa Thanks...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.