பெண்களுக்கு உண்டாகும் முதுகுவலி தடுக்க&#

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#1
பெண்களுக்கு உண்டாகும் முதுகுவலி தடுக்கும் முறைகள்

நெடு நேரம் நின்றபடி பணி செய்ய வேண்டி இருந்தால், கால்களை மாற்றி மாற்றி தரையில் ஊன்றி பணி செய்தால், அதிக வலி ஏற்படாது.

குதிக்கால் காலணி அணிவதை முற்றிலும் தவிர்க்கவும், உங்கள் கால்களுக்கு ஏற்ற வகையிலும், நடக்கும் போது உடல் எடை, கால் முழுவதும் சீராக பரவும் வகையிலும் செருப்பு அணிய வேண்டும்.

கைப் பையை ஒரே தோளில் தொடர்ந்து மாட்டிக் கொள்ளாமல், அடிக்கடி மாற்றிக் கொள்ள வேண்டும்.

இரு கைகளையும் பயன்படுத்தி, பாத்திரங்கள் தூக்குவது, பெருக்குவது, தரை துடைப்பது ஆகியவை முதலில் கடினமானவையாக தோன்றும். இந்த வேலைகளை பழக்கி கொண்டால் முதுகுத் தண்டு வடம் நல்ல முறையில் இயங்க இவை உதவும்.

உடலின் இரு பகுதிகளுக்கும் சமமாக வேலைகள் இருப்பது அவசியம். கர்ப்பிணிப் பெண்கள், குழந்தை பிறப்பதற்கு முன்னும், பிறந்த பிறகும் உடற்பயிற்சி செய்தால், முதுகுக்கு அதிக பிரச்சினை ஏற்படாது.

நாம் கடினமான வேலைகளைச் செய்யும் போது தசை பிடிப்பு, மூட்டுவலி, முதுகுவலி ஏற்படுகிறது.

மூட்டு நழுவுவதாலும் முதுகு வலி ஏற்படலாம். இதற்கு எளிமையான பயிற்சியின் மூலம் தீர்வு காணலாம். முதுகுப்புறம் தரையில் படும்படியாக படுத்துக்கொண்டு, குதிகால்களை மடக்கி, நாற்காலி மேல் வைத்துக்கொள்ள வேண்டும்.

குதிகால்களுக்கு தலையணை வைத்துக்கொள்ளலாம். இப்படி ஒன்று அல்லது இரண்டு நாள்களுக்கு செய்து வரவும்.

நீண்ட நேரம் இவ்வாறு செய்யாமல் சிறிது நேரம் நடந்து விட்டு பயிற்சி செய்யவும். மேலும் சூட்டு ஒத்தடம் 20-30 நிமிஷங்களுக்குக் கொடுத்தாலும் வலி குறையும்.

வலி குறைய உயரத்துக்கு ஏற்ற உடல் எடையைப் பராமரிப்பது அவசியம். உட்காரும் போதும் நிற்கும் போதும் தூங்கும் போதும் சரியான நிலைகளைக் கடைபிடிக்க வேண்டும்.

குனிந்து எந்த ஒரு அதிக சுமையுள்ள பொருளையும் தூக்க வேண்டாம். மாறாக முழுங்காலை ஊன்றி, பிறகு தூக்க வேண்டும்.

நீண்ட தூரம் கார்களை ஓட்டுவோர், விட்டு விட்டு ஓய்வுக்கு பின் பயணம் செய்வது நல்லது.

தரையில் மல்லாந்து படுத்துக் கொண்டு லேசாக இடது காலை மடக்கி, நெஞ்சுக்கு நேராகக் கொண்டு வரவும்.

ஐந்து வினாடிகள் அப்படியே இருக்கவும். பின் பழைய நிலைக்குக் கொண்டு வரவும். பின்பு வலது காலை மடக்கி இது போல் செய்யவும்.

இப்படியே மாறி மாறி 10 முறை செய்தால், முதுகு வலி குறையும். புத்துணர்வு கிடைக்கும்.
 

ashaaherb

Friends's of Penmai
Joined
May 29, 2011
Messages
275
Likes
336
Location
Dubai
#2
Re: பெண்களுக்கு உண்டாகும் முதுகுவலி தடுக்&#296

nice tip, will follow tht :)
 

srimathykrish

Friends's of Penmai
Joined
Sep 19, 2011
Messages
397
Likes
1,466
Location
sharjah
#3
Re: பெண்களுக்கு உண்டாகும் முதுகுவலி தடுக்&#296

thanks 4 giving nice tips.


bye
srimathykrish
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.