பெண்களுக்கு என்ன சாதகம்?

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
38,190
Likes
75,737
Location
Chennai
#1
பெ

ண்களைக் கவரும்விதமாக பட்ஜெட் போடும் உத்திகளை மத்திய, மாநில அரசுகள் பின்பற்றத் தொடங்கியிருக்கின்றன. மத்திய அரசின் 2018 பட்ஜெட்டிலும் அது எதிரொலித்தது.


[h=2]ஈபிஎஃப் குறைப்பு
[/h]பெண் ஊழியர்களை ஊக்கப்படுத்தும்விதமாகப் பெண்களிடம் பிடித்தம் செய்யப்படும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி 12 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார். தற்போது தொழிலாளார் வருங்கால வைப்பு நிதி (ஈபிஎஃப்) இருபாலருக்கும் 12 சதவீதம் பிடிக்கும் நடைமுறை இருந்துவருகிறது. இனி பணியில் சேரும் பெண்களுக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு 8 சதவீதம் மட்டுமே பிடித்தம் செய்யப்படும். இதன் மூலம் பெண்கள் தங்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் சம்பளத்தின் அளவு சற்று உயரும். இந்தத் திட்டம் புதிதாகப் பணியில் சேரும் பெண்களுக்கே பொருந்தக்கூடியது.
இந்திய அளவில் பெண் ஊழியர்களின் பங்கேற்பு 25 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்துவருகிறது. பெண் ஊழியர்களின் பங்கேற்பை அதிகப்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தொழில் நிறுவனங்கள், பொருளாதார நிபுணர்கள் தொடர்ந்து அரசுக்குக் கோரிக்கை வைத்துவந்தன. அதன் வெளிப்படாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
[h=2]இலவச சிலிண்டர்
[/h]கிராமப்புறங்களில் அடுப்படிப் புகையில் பாதிக்கப்படும் பெண்களை மீட்பதற்காக ‘பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா’ என்ற திட்டத்தை மத்திய அரசு ஏற்கெனவே செயல்படுத்திவருகிறது. இதன்படி பெண்களுக்கு இலவச வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்கள் வழங்கப்பட்டுவருகின்றன. முன்பு 5 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கு, தற்போதைய பட்ஜெட்டில் 8 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மிகமிக அத்தியாவசியமாகிவிட்ட காஸ் சிலிண்டர்களின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்துவருகிறது. அதன் விலையைக் குறைக்கவோ கட்டுப்பாட்டில் வைக்கவோ எந்த நடவடிக்கையும் பட்ஜெட்டில் சொல்லப்படவில்லை என்ற எதிர்க்குரலையும் கேட்க முடிகிறது.
[h=2]சுயஉதவிக் கடன்
[/h]சுயஉதவிக் குழுக்கள் மூலம் கடன் பெற்று இன்று ஏராளமான பெண்கள் சிறு சிறு தொழில்களைச் சொந்தமாகச் செய்துவருகிறார்கள். சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன் தொகை பட்ஜெட்டில் கணிசமாக அதிகரிக்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அந்தத் தொகை அதிகரிக்கப்பட்டிருக்கிறது. 2016-17ல் 42 ஆயிரம் கோடி ரூபாயாக வழங்கப்பட்ட கடன், 2018-19ல் 75 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
[h=2]பெண்களுக்குக் கடன்
[/h]முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் சிறுதொழில்கள், சுயதொழில்கள் செய்ய வங்கியிடமிருந்து கடன்பெறும் திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கடன் வழங்க 3 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பெண்களை ஈர்க்கவும் அரசு முயன்றுள்ளது. அதாவது, வங்கிகளில் 76 சதவீத வங்கிக் கணக்கு பெண்களுடையதாக இருக்கிறது. இதில் 50 சதவீத பெண்கள் எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களைக் கவரும்விதமாகவும் முத்ரா யோஜனா திட்டத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதியை ஒதுக்கியிருக்கிறது.
தவிர வயதான பெண்கள், மாற்றுத் திறனாளிகள், கணவனை இழந்தவர்கள் ஆகியோருக்குச் சமூகப் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.