பெண்களுக்கு ராஜஸ்தான் மாநில கல்வித்துற&#

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
107,792
Likes
22,715
Location
Germany
#1


பெண்கள், தரையை துடைத்தல் பெருக்குதல், உரல் பயன்படுத்துதல், பாத்திரங்களில் தண்ணீர் நிரப்புதல் போன்ற பணிகளை செய்தால், உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என கல்வித்துறை சார்பில் வெளியிடப்படும் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பு
ராஜஸ்தான் மாநில கல்வித்துறை சார்பில் மாதந்தோறும் கல்வி பத்திரிகை வெளியிடப்படும். இது பள்ளி ஆசிரியர்களுக்கு விநியோகம் செய்யப்படும். நவம்பர் மாத பத்திரிகையில் 32 ம் பக்கத்தில், விளையாட்டு, உடற்பயிற்சி, சத்தான உணவு உள்ளிட்ட உடல் ஆரோக்கியம் குறித்த குறிப்புகள் இடம்பெற்றிருந்தன.


விளையாட்டு


உடல் ஆரோக்கியமாக இருக்க நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், குதிரையேற்றம், நீ்ச்சல் மற்றும் விளையாட்டு குறித்த குறிப்புகளை தொடர்ந்து, பெண்கள் வீட்டை கையால் துடைத்தல் மற்றும் பெருக்குதல், தினசரி வீட்டு வேலைகளை செய்வதன் மூலமும் ஆரோக்கியத்தை பேண முடியும். தங்களது குழந்தைகளுடன் விளையாடுதல், தினசரி 10 முதல் 13 நிமிடங்கள் சத்தமாக சிரிப்பதன் மூலம் ஆரோக்கியத்தை காக்கலாம்.

உடல் ஆரோக்கியத்திற்கு பாஸ்ட் புட், மதுபானம், புகையிலை , பெப்சி, கோகோ கோலா போன்றவற்றை உட் கொள்ளக்கூடாது என கூறப்பட்டுள்ளது.அதிர்ச்சிஇந்த பத்திரிகை கல்வித்துறையில் ஊழியர்கள், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் என 30 ஆயிரம் பேரிடம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள் குறித்த கருத்து, பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்திய பின்னர் கருத்து தெரிவிப்பதாக மாநில கல்வி அமைச்சர் வசுதேவ் தேவ்னானி கூறியுள்ளார்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.