பெண்கள் ஏன் இப்படிப் பேசுகிறார்கள்?

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#1
திருமணமான புதிதில் இளம் தம்பதிகள் பேசும் பேச்சில் நேரம் போவதே தெரியாது. அந்த பேச்சில் அவ்வளவு சுவாரசியம் இருக்கும்.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், அவ்வளவு நேரம் என்ன பேசினோம் என்றே தெரியாவிட்டாலும் கூட, அவர்கள் தொடர்ந்து எதையாவது பேசிக்கொண்டே இருப்பார்கள்.

பெண்கள் பொதுவாக சுற்றி வளைத்துத்தான் பேசுவார்கள். ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டு வெளியே வேறு ஒன்றை பேசுவார்கள்.

பெரும்பாலும், `நான் கோபமாக இல்லை’ என்று பெண் சொன்னால், கண்டிப்பாக `நான் கோபமாக இருக்கிறேன்’ என்று அர்த்தம். `நான் வருந்துகிறேன்’ என்று அவள் கணவனிடம் சொன்னால், `நீயும் வருந்து’ என்று பொருள்.

`நீ என்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறாய்?’ என்று மனைவி கேட்டால், கணவனுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றை அவள் செய்திருக்கிறாள் என்று அர்த்தம். அதை கணவன் ஜீரணித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தே இப்படி கேட்கிறாள்.

எதற்காக இப்படி ஒரு பெண் எதற்கெடுத்தாலும் மறைமுகமாகவே பேசுகிறாள்? பெண்கள் எப்போதும் தங்களது தேவைகளை நேரடியாக சொல்வதில்லை.

இதைப்பற்றி ஆழமாக சிந்தித்துப் பார்த்தால், அதில் பல ரகசியங்கள் புதைந்து கிடக்கின்றன.

மற்றவர்களுடனான உறவை வளர்ப்பதற்கும், போர்க் குணம், எதிர்த்து நின்றல், பிடிவாதம் போன்றவற்றைத் தவிர்க்கவும் சுற்றிவளைத்து பேசுவது உதவுகிறது.

மேலும் கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கவும், மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தாமல் இணைந்து போகவும் செய்கிறது. சண்டை போடும் உணர்வு தோன்றாமல் இருக்கவும் இப்படி சுற்றி வளைத்துப் பேசுகிறார்கள்.

மறைமுகப்பேச்சை பெண்களுக்குள் பேசும்போது அவர்களுக்குள் புரிதல் ஏற்படுகிறது. பெண்கள் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்வதில் கெட்டிக்காரர்கள். ஆனால், இதையே ஆண்களிடம் அவர்கள் தெரிவிக்கும்போது எதிர்பார்த்து ஏமாந்து போகிறார்கள்.

பெண்கள் சுற்றி வளைத்துப் பேசுவதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் ஆண்களிடம் இல்லை. இதற்கு மற்றொரு முக்கியமான காரணமும் உண்டு.

ஆண்களின் மூளையானது வேட்டையாடுவது போல தனியொரு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. ஆனால், பெண்களின் மூளை அமைப்பு அப்படி இருப்பதில்லை. அவர்களால் ஒரே நேரத்தில் 5 விதமான சிந்தனைகளில் கூட சுலபமாக ஈடுபட முடிகிறது.

அதனால், ஆண்களுக்குப் பெண்களைப் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுகிறது. பெண்களின் பேச்சு ஒரு கட்டுக்கோப்பாக இல்லை, எந்த ஒரு நோக்கமும் அதில் இருப்பதில்லை என்பது போல ஒரு குழப்பத்தை ஆண்களுக்கு உண்டாக்கும்.

பெண்களின் மறைமுகப்பேச்சு தொழில் புரியும் இடத்தில் பிரச்சினைகளை உருவாக்கக்கூடும். அங்கு நேரிடையான விளக்கங்கள் தான் தேவை. அப்போதுதான் தகவல்கள் எந்த வித குழப்பமும் இன்றி தேவையானவர்களிடம் ஒழுங்காகப் போய்ச்சேரும்.

அதேபோல் ஒரு பெண் ஆணிடம் தொழில் சம்பந்தமாக ஏதாவது பேசினால், அந்த ஆணுக்கு அவள் என்ன பேசினாள் என்பது புரியாவிட்டாலும் கூட, அவன் புரிந்து கொண்டதைப் போலத் தலையாட்டி விடுகிறான். இதைப் பெண் உணர்ந்து கொள்ள வேண்டும்.
 
Joined
Nov 8, 2011
Messages
134
Likes
167
Location
Thenkasi
#2
தகவல் பெண்களுக்கு ஆதரவானதாக இருந்தாலும் உட்பொருளை பார்க்கும்போது சற்று நம் தலையில் தட்டி வைப்பது போல் தான் உள்ளது. பொதுவாகவே பெண்கள் சிந்திக்கும் போதோ வேலை செய்யும்போதோ அவர்களின் இருபக்க மூளையும் ஒரே நேரத்தில் செயல் படும்.ஆனால் ஆணால் ஒரு நேரத்தில் தன் ஒரு பக்க மூளையை மட்டுமே உபயோகப்படுத்த முடியும்.. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.

எல்லா பெண்களும் சுற்றி வளைத்து பேசுவதில்லை எப்பொழுதும், தன்னால் சொல்ல முடியாத சிலவற்றை மட்டுமே சுற்றிவளைத்து சொல்கிறாள், இத்தகவல் அனேகமாக நம் இந்திய பெண்களை மட்டுமே வைத்து தான் எழுதப்பட்டிருக்கும் என நினைக்கிறேன், ஏனெனில் பிற நாட்டு பெண்கள் எவ்விஷயத்திற்கும் தயங்குவதில்லை. நேரிடையாகவே சொல்லி விடுவர் எத்தைகய தகவலையும்.

பொதுவாகவே பெண் தான் சொல்ல வந்த விஷயத்தை சொல்லும்போது ஒரு ஆணை விட இன்னொரு பெண் எளிதில் புரிந்து கொள்வாள்.

அதே நிலை தான் ஆணுக்கும், அவனின் வார்த்தைகளும் அதற்கான அர்த்தங்களும் இன்னொரு ஆணுக்கு எளிதில் புரிந்து விடும்.ஆனால் இது காதல் சம்பந்தப்பட்ட உணர்வெனில் தலைகீழ் மாற்றம் தான்.ஆணின் ஒற்றை சொல்லோ , பெண்ணின் ஒற்றை பார்வையோ எதிர் பாலினருக்கு தான் முதலில் புரியும்.

நன்றி நிஷாஹமீதாவிற்கு, இத்தகவலை கொடுத்து எழுத தூண்டியதற்கு.
 

Nishahameetha

Ruler's of Penmai
Joined
Jul 5, 2011
Messages
18,266
Likes
28,602
Location
Trichy
#3
தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி சங்கமித்ரா. நான் இதை ஒரு புத்தகத்தில் படித்தேன்.

நான் இங்கு சொல்லியதை விட உங்கள் கருத்து தான் மிகவும் சரியாக இருக்கிறது

உங்களின் மேலான கருத்தை இங்கு பகிர்த்தமைக்கு மிக்க நன்றி தோழி.
 

anitha.sankar

Commander's of Penmai
Joined
May 28, 2011
Messages
2,263
Likes
2,739
Location
Salem
#4
hi nisha,
sangamithravin karuthai naanum aadharikkiren... neengal kodutha postingil ennai kavarndhadhu:

`நீ என்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறாய்?’ என்று மனைவி கேட்டால், கணவனுக்குப் பிடிக்காத ஏதோ ஒன்றை அவள் செய்திருக்கிறாள் என்று அர்த்தம். அதை கணவன் ஜீரணித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தே இப்படி கேட்கிறாள்.

ennai poruthavarai.... tholil idangalil pengal thelivaai dhaan irukkiraargal... kudumba soolalil sila karuthu verupadugalai, sandaigalai thavirka ippadi suthi valaithu pesuvadhu unmaye... idhai velai seiyum idangalil kandippaga kaatuvadhillai endre ninaikkiren.....
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.