பெண்கள் தூங்கும் போது உள்ளாடை அணியலாமா?

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பெண்கள் தூங்கும் போது உள்ளாடை அணியலாமா?சில பெண்கள் தூங்கும் போது பிரா அணிவதையும், வேறு சிலர் அவ்வாறு அணிந்து கொண்டு தூங்கினால் வரும் சுகாதார கேடுகள் பற்றியும் எண்ணிக் கொண்டிருப்பார்கள். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிரா மிகவும் இறுக்கமாகவோ, தடிப்பாகவோ இருக்கக் கூடாது. எனினும், தூங்கும் போது பிரா அணியலாமா, வேண்டாமா என்பது உங்களுடைய தனிப்பட்ட விருப்பம்.

ஆனால், தவறான சைஸ் பிராவை தேர்ந்தெடுத்தால் அதற்கேற்ற மோசமான பலனை அனுபவிக்க நேரிடும். கர்ப்பமாக இருப்பவர்கள் மற்றும் பாலூட்டும் பெண்கள் தங்களுக்கு வசதியாக இருக்கும் பிராவை அணிந்தால் அது அவர்களுக்கு உதவியாக இருக்கும். எப்படியாயினும், தூங்கும் போது இறுக்கமான மற்றும் வசதியற்ற பிராவை அணிவதால் சுகாதாரக் கேடுகள் ஏற்படும் என்பதை யாரும் மறுக்கப் போவதில்லை. இறுக்கமான பிரா அணிபவர்களின் இரத்த ஓட்டம் தடையற்ற வகையில் ஓடுவது தடைபடும்.

கீழ்பகுதியில் ஒயர் அல்லது எலாஸ்டிக் உள்ள இறுக்கமான பிராவை நீங்கள் அணியும் போது இந்த நிலை ஏற்படும். எனவே, விளையாட்டு வீராங்கனைகள் அணியும் ஸ்போர்ட்ஸ் பிராவை அணிந்து கொள்வது நன்மை தரும். நிறமிகள் உருவாதல் எலாஸ்டிக் இறுக்கமாக இருக்கும் பிரா உடலில் படும் இடங்களில் நிறமிகள் உருவாகும். தூங்கும் போது அல்லது பிராவை போட்டுக் கொள்வதா இந்த நிறமிகள் அதிகமாகும். எனவே, இது போன்ற விளைவுகளை தவிர்க்க விரும்பினால் மென்மையான மற்றும் தளர்வான பிராவை அணியவும்.

நீங்கள் இறுக்கமான பிராவை அணிந்து கொண்டால், அது ஏற்படுத்தும் வசதியற்ற நிலையால், தூக்கம் கலைந்து விடும். இறுக்கமான பிராவை அணிவது தோல் எரிச்சலை உண்டாக்கும். கீழே ஒயர்கள் இல்லாத பிராக்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஸ்போர்ட்ஸ் பிராக்களை இரவு வேளைகளில் அணிவதும் நல்லது.

உங்கள் மார்பகங்களுக்குத் தேவையான தாங்கும் சக்தியை அது தருவதுடன், சுகாதாரமாகவும் இருக்கும். தூங்கும் போது இறுக்கமான பிரா அணிவதால் அது தூங்கும் போது வசதியற்ற நிலையை ஏற்படுத்துவதால், தூக்கமின்மையால் நீங்கள் பாதிக்கப்படுவீர்கள். மேலும், கீழே ஒயர் உள்ள பிரா உங்கள் மார்பகத்திற்குள் ஆழமாக சென்று விடும். தொடர்ந்து நீங்கள் இறுக்கமான பிரா அணிந்து வந்தால் உங்களுக்கு நிணநீர் அடைப்பு (Lymphatic Blockage) ஏற்படும்.

இதன் காரணமாக இந்த அடைப்புடன் தொடர்புடைய வேறு பல அறிகுறிகளும் தோன்றும். மார்பகங்களில் ஏற்படும் எடிமா அல்லது நீர் வீக்கம்(Oedema – எடிமா) ஆகியவையும் இதில் உள்ளடங்கும். வியர்வை கோடை காலங்களில் இறுக்கமான பிராவை அணிந்து கொண்டு தூங்குவதால் நிறைய வியர்வை வெளியேறும். கடைகளில் விற்கும் ஃபேன்ஸி பிராக்கள் இந்த விளைவையே அதிகமாக செய்கின்றன. எனவே, பாலியஸ்டர் அல்லது சணல் போன்ற செயற்கை இழைகளால் உருவாக்கப்பட்ட பிராவிற்கு பதிலாக காட்டன் பிராவை தேர்ந்தெடுங்கள்.

தூங்கும் போது பிரா அணிவதால் புற்றுநோய் வருமா என்று ஒரு பெரிய விவாதம் நெடு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்திற்கு ஆதரவாகவும் மற்றும் எதிராகவும் பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. புற்றுநோய் அல்லாத கட்டிகள் நீர்க்கட்டிகள் மற்றும் தோல் கட்டிகள் நமது உடலில் எங்கு வேண்டுமானாலும் உருவாகும். இறுக்கமாக ஒடுங்கியிருக்கும் வகையிலான பிரா அணிவதால் எரிச்சல் ஏற்படும்.
 

anusuyamalar

Citizen's of Penmai
Joined
Oct 4, 2015
Messages
559
Likes
1,399
Location
batlagundu
#2
thanks 4 u shaering akka super .....................:yo:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.