பெண்கள் யோகா செய்தால் சுகப்பிரசவம்:

vidhyalakshmi15

Commander's of Penmai
Joined
Oct 12, 2017
Messages
1,461
Likes
714
Location
Switzerland
#1
[h=1]பத்மஸ்ரீ விருது பெற்ற கோவை பாட்டி கருத்து[/h]
யோகா பாட்டி நானம்மாளுக்கு பரிசு வழங்கிப் பாராட்டிய பாஜக மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசன் மற்றும் பல்வேறு மகளிர் அமைப்பினர்.

பெண்கள் யோகா பயிற்சி செய்தால் சுகப்பிரசவம் நடக்கும் என்று, பத்மஸ்ரீ விருது பெற்ற யோகா பாட்டி நானம்மாள் கூறினார்.
பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட யோகா பாட்டி நானம்மாளுக்கு கோவையில் பாராட்டு விழா நடைபெற்றது.


கோவை மாநகரில் உள்ள அனைத்து மகளிர் அமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, மூத்தோர் தடகளச் சங்க நிர்வாகி சிவகாமி தலைமை வகித்தார். சிஐஐ அமைப்பின் மகளிர் பிரிவு தலைவர் அருணா தங்கராஜ் முன்னிலை வகித்தார்.

பாஜக மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசன், டாக்டர் நிவேதிதா, சமூக ஆர்வலர் டிம்பிள் லூலு, டாக்டர் தரணி, மங்கையர் மங்கலம் அமைப்பின் அறங்காவலர் சாருமதி அஷோக் உள்ளிட்டோர் நானம்மாளுக்குப் பரிசு வழங்கிப் பாராட்டினர்.
இதில் நானம்மாள் பேசியதாவது: நான் ராகி, சாமை, கோதுமை, கம்பு, வரகு, குதிரைவாலி அரிசி போன்றவற்றைத் தான் சாப்பிடுவேன். தினமும் காலை 5 மணிக்கு எழுந்து யோகாசனம் செய்வேன். பேரன், பேத்தி உள்ளிட்ட அனைவருக்கும் யோகா கற்றுக்கொடுப்பேன். பெண்கள் யோகா பயிற்சி செய்தால் கை, கால் வலி வராது. சுகப்பிரசவம் நடக்கும். யோகா பயிற்சி செய்தால் நலமுடன் வாழலாம் என்றார்.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.