பெர்ஃப்யூம்... தேர்ந்தெடுப்பது, பயன்படுத&#

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,670
Likes
18,657
Location
chennai
#1
பெர்ஃப்யூம்... தேர்ந்தெடுப்பது, பயன்படுத்துவது எப்படி?


பெண்களின் `பியூட்டி கிட்’டில் பெர்ஃப்யூமுக்கு முக்கிய இடம் உண்டு. அதைத் தேர்வு செய்யும்போதும், பயன்படுத்தும்போதும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி சொல்கிறார், சேலம் ‘சியாமிஸ் பியூட்டி பார்லர்’ பியூட்டிஷியன் ஷியாமளா தேவி.

பெர்ஃப்யூம் வாங்கும்போது பேக்கிங் பார்த்து மயங்கக்கூடாது. தரமான பிராண்ட் மற்றும் எக்ஸ்பயரி டேட் செக் செய்து வாங்கவும்.

பெர்ஃப்யூம் ஃப்ராக்ரன்ஸை ஸ்மெல் டெஸ்ட் செய்து வாங்கவும். முதல் முறையாக வாங்கும் பிராண்ட், ஃப்ராக்ரன்ஸ் எனில் மணிக்கட்டு பகுதியில் ஸ்பிரே செய்து 2 நிமிடங்களில் எரிச்சலோ, அலர்ஜியோ ஏற்படாதபட்சத்தில் வாங்கவும். அதாவது, PH அளவு 5-6 வரையில் இருப்பது நம் தோலை பாதிக்காது.

மைல்டான தன்மைகொண்ட பாடி ஸ்ப்ரேயை உடம்பில் நேரடியாகப் பயன்படுத்தலாம். PH அளவு அதிகமாக இருக்கும் பெர்ஃப்யூமை நேரடியாக உடலில் பயன்படுத்தக் கூடாது, அதில் உள்ள ஆசிட்டின் இயல்பு, சருமத்தை பாதிக்கும். எனவே, ஆடை அணிந்த பின்னரே பயன்படுத்த வேண்டும். கூடவே... சரிகை, சம்கி வேலைப்பாடுகளை அது கறுத்துப்போகச் செய்யும் என்பதையும் கவனிக்கவும்.

பொதுவாக, எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்களுக்கு இயற்கையாகவே பெர்ஃப்யூம் செயல்பாடு நீண்ட நேரம் தாங்கும். வறண்ட சருமம் உள்ளவர்கள் மாய்ஸ்ச்சரைசர் தடவிய பின் உபயோகிக்கலாம்.

பெர்ஃப்யூம் பயன்படுத்திய பின் அந்த இடத்தை தேய்த்துவிட்டால் அதில் உள்ள மூலக்கூறுகள் உடைந்து, காற்றில் எளிதில் கரைந்துவிடும் என்பதால் அதைத் தவிர்க்கவும்.

சாக்லேட், ஆரஞ்சு, ஜாஸ்மின், ரோஸ் என பிடித்த ஃப்ராக்ரன்ஸையும், நார்மல், டிரை, ஆயிலி ஸ்கின் என ஸ்கின் டைப்புக்கு ஏற்ற வகையிலும் பெர்ஃப்யூம் தேர்வு செய்யவும்.
 
Last edited:

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,938
Location
Chennai
#3
Re: பெர்ஃப்யூம்... தேர்ந்தெடுப்பது, பயன்படுத&a

Aaha useful tips ji :thumbsup
 

rlakshmi

Friends's of Penmai
Joined
Apr 7, 2013
Messages
187
Likes
125
Location
rajapalayam
#4
Re: பெர்ஃப்யூம்... தேர்ந்தெடுப்பது, பயன்படுத&a

useful tips:cheer:
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.