பேசும் படம் - 29/10/2017

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,725
Location
Chennai
#51

இங்கிலாந்து நாட்டில் பெண்களுக்கு வாக்குரிமை கோரி பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்ட புகழ்பெற்ற தொழிற்சங்கத் தலைவர் மில்லிசென்ட் ஃபாவ்செட்டின் சிலை நாடாளுமன்ற வளாகத்தில் சில நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. பெண் தலைவர் ஒருவரின் நினைவாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் திறக்கப்பட்ட முதல் சிலை இது.
கடந்த வாரம் உள்ளூர் முதல் உலகம்வரை பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. துயரமும் மகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்த உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது:

சென்னை ஐஐடியில் நண்பர் ஒருவருடன் இருந்த மாணவியைத் தவறான கண்ணோட்டத்தில் ஒளிப்படம் எடுத்த தொழில்நுட்ப ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நிர்வாக அலுவலகத்தின் முன்பு மாணவர்கள் சமீபத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து அந்த நபர் எடுத்த ஒளிப்படம் அழிக்கப்பட்டது.

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 117 வயதான நபி தச்மா உடல்நல குறைவு காரணமாகச் சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்தார். இவர் உலகின் அதிக வயதுடைய பெண்மணியாகக் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தார்.


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வாக்குச்சாவடி அருகே ஐஎஸ் தீவிரவாதிகள் கடந்த திங்கள்கிழமை நடத்திய மனித வெடிகுண்டுத் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 57 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே சோகத்துடன் காத்திருக்கின்றனர்.

ஆசிய படகுப் போட்டியில் கலந்துகொள்வதற்காக நடத்தப்பட்ட பாய்மரப் படகு தேர்வுப் போட்டியில் மத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள போபால் தேசிய பாய்மரப் படகு பயிற்சிப் பள்ளியைச் சேர்ந்த ஏக்தா யாதவ், ஷைலா சார்லஸ் இருவரும் முதலிடத்தைப் பிடித்தனர்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,725
Location
Chennai
#52

பிரச்சினை எல்லாம் என்றுதான் தீருமோ சாமி.
ஒளிப்படங்கள் எடுத்தவர்: ஆர். ராஜ் குமார், பயண ஒளிப்படக் கலைஞர், திருவண்ணாமலை.

வயல்வெளிக்கு மத்தியில் டிராக்டர் பயணம்.


ஆரம்பம்: ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒளிப் படங்கள் எடுக்கத் தொடங்கினேன். இன்று பயண ஒளிப்படக் கலைஞராக மாறியிருக்கிறேன்.

விவசாயியின் இளைப்பாறல்.

கேமரா: கேனான் 1200டி.

நிஜக் காளைகள்.

ஆர்வம்: பயணகள் சார்ந்து ஒளிப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம்.

பழசும் புதுசும்

இது வானம் பார்த்த பூமி அல்ல.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,725
Location
Chennai
#53

PUDUCHERRY, 02/05/2018: Transgenders purchasing at the makeshift shops selling thali and bangles near Koothandavar temple at Koovagam in Villupuram district. Photo: T. Singaravelou

ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்யவிக்கில் நடைபெற்ற உலகக் கோப்பை சாட்டிலைட் ஃபென்சிங் சாம்பியன்ஷிப்பில் அமெரிக்க வீராங்கனை அலெக்சிஸ் பிரவுன் தங்கப் பதக்கத்தையும் இந்தியா சார்பில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

உலக நடன நாளையொட்டி சென்னை செட்டிநாடு வித்தியாஷ்ரம் பள்ளியில் 130 பெண்கள் கலந்துகொண்ட நடன நிகழ்ச்சி நடந்தது. இதில் 25 வயது முதல் 80 வயதுவரை உள்ள பெண்கள் நடனமாடினார்கள்.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் மலர் ஏற்றுமதி நிறுவனம் சார்பில் அமெரிக்கா, ஐரோப்பா போன்று நாடுகளுக்கு வீட்டு வாசலை அலங்கரிக்கும் மலர் வளையங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

கர்நாடகத்தில் தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், ராய்ச்சூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு மிக மேசமான நிலையை எட்டியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிக நீண்ட தொலைவு பயணித்துத் தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,725
Location
Chennai
#54

நீட் தேர்வின்போது சோதனை என்ற பெயரில் மாணவர்கள் துன்புறுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அதேபோல் தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களில் மையம் ஒதுக்கப்பட்டது தொடர்பாகத் தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசுக்கும் சிபிஎஸ்இ அமைப்புக்கும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.
கடந்த வாரம் உள்ளூர் முதல் உலகம்வரை பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. துயரமும் மகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்த உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது:

கதுவா சிறுமி படுகொலை வழக்கை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பதான்கோட் மாவட்ட விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த வழக்கை எந்த ஒத்திவைப்புமின்றி தினசரி நடத்த வேண்டும் எனவும் அது உத்தரவிட்டுள்ளது.ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற தெற்காசிய ஜூனியர் தடகளப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை பிரியதர்ஷினி சுரேஷ், நீளம் தாண்டுதல் போட்டியில் 12.90 மீட்டர் தாண்டி புதிய சாதனை படைத்துத் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த திருநங்கை சூர்யாவும் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய திருநம்பி இஷானும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதோடு அதைச் சட்டப்படி கடந்தவாரம் பதிவும் செய்துகொண்டனர்.

உலக அளவில் புகழ்பெற்ற அமெரிக்க பாப் பாடகியான ஜேனெட் ஜாக்சன், இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருந்தான பில்போர்டு ஐகான் விருதை இந்த ஆண்டு பெறுகிறார்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,725
Location
Chennai
#55
புதுக் கூடு


புதுக் கூடு: குவஹாத்தி பகுதி பிரம்மபுத்திரா ஆற்றங்கரையையொட்டி கூடு கட்டுவதற்காக சின்னகொக்கு ஒன்று குச்சிகளைத் தேடிப் பறக்கிறது. ஆண்டின் இந்தப் பருவத்தில் நூற்றுக்கணக்கான சின்னக்கொக்குகள் குவாத்தியில் கூடு கட்டுவது வழக்கமாக உள்ளது. - THE HINDU

இணக்கமான இரை தேடல்: மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள வன் விஹார் தேசியப் பூங்காவில் புள்ளிமான் கூட்டத்துடன் சேர்ந்து இரை தேடும் மயில்கள். - THE HINDU

இணக்கமான இரை தேடல்


மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள வன் விஹார் தேசியப் பூங்காவில் புள்ளிமான் கூட்டத்துடன் சேர்ந்து இரை தேடும் மயில்கள்.
படம்: ஏ.எம்.ஃபரூகி
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,725
Location
Chennai
#56

மண்பானைகள். படம்: ஆர். ரகு

டந்த வாரம் உள்ளூர் முதல் உலகம்வரை பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. துயரமும் மகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்த உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது.சர்வதேச இலக்கிய விருதான ‘மேன் புக்கர்’ விருதை போலந்து நாட்டு எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய ‘Flights’ நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

சீனாவில் தேசிய மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு நிதி சேகரிப்பதற்காக காது கேளாத, பேச இயலாத பெண்கள் புகழ்பெற்ற ‘ஆயிரம் கைகள்’ நடனத்தை ஆடினார்கள்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆர்.எஸ். புரா பகுதியில் சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவம் ஷெல் குண்டுகளை வீசியது. இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்தனர். தங்கள் பகுதியில் விழுந்த ஷெல் குண்டின் ஒரு பாகத்தைக் காண்பிக்கிறார் ஒரு பெண்.

நிபா வைரஸால் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். நிபா வைரஸால் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சையளித்த செவிலியர் லினி ஷாஜிஷ், நிபா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் அவருடைய இரண்டு குழந்தைகளுக்கு கேரள அரசு பத்து லட்சம் ரூபாயை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ததுடன், அவருடைய கணவருக்கும் அரசு வேலை வழங்கியிருக்கிறது.

லினி
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,725
Location
Chennai
#57Navneet Kaur (C) of India celebrates after scoring a goal during the women's field hockey match between India and England at the 2018 Gold Coast Commonwealth Games on the Gold Coast on April 8, 2018. / AFP PHOTO / Anthony WALLACE - AFP

GOLD COAST, AUSTRALIA - APRIL 12: Navneet Kaur of India battles for the ball with Ashlea Fey and Stephanie Kershaw of Australia during Women's Semifinal hockey match between Australia and India on day eight of the Gold Coast 2018 Commonwealth Games at Gold Coast Hockey Centre on April 12, 2018 on the Gold Coast, Australia. (Photo by Dean Mouhtaropoulos/Getty Images) - Getty Images

71st Cannes Film Festival - Photocall for the film "Rafiki" in competition for the category Un Certain Regard – Cannes, France, May 9, 2018. Director Wanuri Kahiu, cast members Sheila Munyiva and Samantha Mugatsia. REUTERS/Stephane Mahe - REUTERSடந்த வாரம் உள்ளூர் முதல் உலகம்வரை பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. துயரமும் மகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்த உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது:

கொரியாவில் ஐந்தாவது ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கிப் போட்டி நடைபெற்றுவருகிறது. அதன் தொடக்க ஆட்டத்தில் ஜப்பான் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய மகளிர் அணி் வீழ்த்தியது. இந்திய வீராங்கனை நவ்நீத் கவுர், சிறப்பான ஆட்டத்தால் வெற்றிக்கு வித்திட்டார்.
தன்பாலின உறவாளர்கள் குறித்து, கென்யாவைச் சேர்ந்த இயக்குநர் வனூரி கஹியூ இயக்கிய ‘ரஃபிகி’ திரைப்படம் கென்யாவில் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மதிப்புமிக்க கான் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. விழாவில் இயக்குநர் வனூரி கஹியூ (இடமிருந்து முதல்) படத்தில் நடித்த நடிகைகள் ஷீலா முனிவா, சமந்தா முகாசியா ஆகியோருடன்.
பாலஸ்தீனப் பகுதிக்கு உட்பட்ட கெரீம் ஷாலோம் எல்லைப் பகுதியை இஸ்ரேல் ராணுவம் மூடியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனத்தில் போராட்டம் நடத்திவருபவர்களில் இரண்டு பெண்கள்.
தாமிரபரணி ஓடும் திருநெல்வேலியும் தண்ணீர்ப் பஞ்சத்துக்குத் தப்பவில்லை. திருநெல்வேலியை அடுத்த வன்னிக்கோனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தண்ணீர் கேட்டு, காலிக் குடங்களுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,725
Location
Chennai
#58
சிங்க ராஜாவின் காடு
ஒளிப்படங்கள் எடுத்தவர்: துரை பழனிச்சாமி, பள்ளிபாளையம், ஈரோடு.

படங்கள்: கென்யா மசாய் மாரா தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டவை.ஆரம்பம்: சிறு வயதிலிருந்தே ஒளிப்படங்கள் எடுக்க மிகவும் பிடிக்கும். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் முறைப்படி ஒளிப்படங்கள் எடுக்கத் தொடங்கினேன்.


கேமரா: நிக்கான் 5டி.


ஆர்வம்: பயணம் சார்ந்த, காட்டுயிர்கள் சார்ந்த ஒளிப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம்.


P
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,611
Likes
73,725
Location
Chennai
#59

சவுதி அரேபியாவில் பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கான உரிமம் வழங்கப்பட்டது. ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் பெண் என்ற மகிழ்ச்சியில் திளைக்கும் கல்லூரிப் பேராசிரியர் தஹானி அல்டாஸ்மனி.
கடந்த வாரம் உள்ளூர் முதல் உலகம்வரை பெண்கள் சார்ந்து பல சம்பவங்கள் நடந்துள்ளன. துயரமும் மகிழ்ச்சியும் பெருமிதமும் நிறைந்த உணர்வுகளின் கலவையான ஒளிப்படத் தொகுப்பு இது:

‘பயோமெட்ரிக் பதிவு’ மூலம் மாணவர்களின் வருகையைப் பதிவுசெய்யும் திட்டம் இந்தக் கல்வி ஆண்டு முதல் தமிழக அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கொடுங்கையூர் அரசுப் பள்ளியில் முதன்முறையாகப் பயோமெட்ரிக் முறையில் வருகையைப் பதிவுசெய்யும் மாணவிகள்.


சென்னையில் நடைபெற்ற மாநில சப் ஜூனியர் நீச்சல் போட்டியில் மூன்று தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என ஐந்து பதக்கங்களைக் குவித்து கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பவிகா துர்கா சாதனை படைத்துள்ளார்.


சிம்லாவில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதால், மக்கள் அவதிப்பட்டுவருகிறார்கள். மக்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்க வேண்டுமென சிம்லா நகராட்சிக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - AFP

மகளிருக்கான இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடைபெற்றுவருகிறது. வியாழக்கிழமை அன்று நடைபெற்ற போட்டியில் இலங்கையுடன் இந்திய மகளிர் அணி மோதி வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய வீராங்கனை மித்தாலி ராஜ் டி20 போட்டியில் இரண்டாயிரம் ரன்கள் எடுத்த முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.