பொடுகுத் தொல்லையா ..? - Remedies for Dandruff

narayani80

Commander's of Penmai
Joined
Jun 9, 2010
Messages
1,720
Likes
2,575
Location
Bangalore
#1
பொடுகைக் குணப்படுத்த பவித வைத்தியங்கள் கீழே தரப்பட்டுள்ளன. உங்களுக்கு இயன்றதை செய்து பலனடையலாம்.
1. கற்பூரத்தை தேங்காய் எண்ணெய்விட்டு குழைத்து தலைக்கு தேய்த்து நன்றாக ஊறியதும் , குளிக்கணும்.
2. பொடுதலைக் கீரையை தண்ணீர் விட்டு மைய்ய அரைத்து தலைக்கு தேய்த்து நன்றாக ஊறியதும் குளிக்கணும்.
3. மருதாணி இலையையும் பூவையும் சம அளவு சேர்த்து தண்ணீர் விட்டு மைய அரைத்து அத்துடன் எலுமிச்சம்பழச்சாறு கலந்து குழைத்து தலைக்கு தேய்த்து நன்றாக ஊறியதும் குளிக்கணும்.
4. வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து மைய அரைத்து, அதனுடன் தயிர், எலுமிச்சம்பழச்சாறு கலந்து குழைத்து தலைக்கு தேய்த்து நன்றாக ஊறியதும் குளிக்கணும்.
5. கடுக்காய் கொட்டையை மோரில் ஊறவைத்து மைய அரைத்து தலைக்கு தேய்த்து நன்றாக ஊறியதும் குளிக்கணும்.
6. சிறு பயறு, வெந்தயம் இவ்விரண்டையும் சம அளவு சேர்த்து தூளாக்கி தண்ணீர் விட்டு மைய குழைத்து தலைக்கு தேய்த்து நன்றாக ஊறியதும் குளிக்கணும்.
7. உளுந்தையும் கடுகையும் சம அளவு சேர்த்து தண்ணீர் விட்டு மைய அரைத்து தலைக்கு தேய்த்து நன்றாக ஊறியதும் குளிக்கணும்.
7. வேப்பிலையையும். மஞ்சளையும் சம அளவு சேர்த்து தண்ணீர் விட்டு மைய அரைத்து இரவு படுக்கப் போவதற்கு முன் தலைக்கு தேய்த்து, மஸாஜ் செய்து மறுநாள் காலையில் குளிக்கணும்.
8. வசம்பு, குப்பைமேனி இலை, மிளகு இம்மூன்றையும் சம அளவு சேர்த்து தண்ணீர்விட்டு மைய அரைத்து தலைக்கு தேய்த்து நன்கு ஊறியதும் குளிக்கணும்.
9. நாட்டு நெல்லிக்காயுடன் சிறிது எலுமிச்சம்பழச் சாரைக் கலந்து குழைத்து இரவு படுக்கப் போவதற்கு முன் தலைக்கு தேய்த்து மஸாஜ் செய்து மறுநாள் காலையில் குளிக்கணும்.
10. வாரம் ஒரு முறை அரை கப் தயிருடன் ஒரு எலுமிச்சம்பழச் சாறைக் கலந்து குழைத்து அழுத்தமாக தலைக்கு தேய்த்து மஸாஜ் செய்து நன்றாக ஊறியதும் குளிக்கணும்.
11. வாரம் இரண்டு முறை ஒரு கப் தயிருடன் இரண்டு ஸ்பூன் பயத்தமாவைக் கலந்து குழைத்து அழுத்தமாக தலைக்கு தேய்த்து மஸாஜ் செய்து நன்றாக ஊறியதும் குளித்து வந்தால், பொடுகு குணமடைவதுடன் முடியும் பிசுபிசுப்பான தன்மை நீங்கி பளபளப்பாக ஜொலிக்கும்.
12. வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெயுடன் முட்டை, எலுமிச்சம்பழச்சாறு இரண்டைக் கலந்து குழைத்து அழுத்தமாக தலைக்கு தேய்த்து மஸாஜ் செய்து நன்றாக ஊறியதும் குளித்து வந்தால், பொடுகு சொல்லிக் கொள்ளாமல் ஓடும்.

Moderator's Note:This Article has been published in Penmai eMagazine November 2015. You Can download & Read the magazines HERE.
 
Last edited by a moderator:

sriju

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Dec 6, 2012
Messages
6,781
Likes
15,675
Location
coimbatore
#3
Romba useful one :)

Ithoda nanum onnu add panren...

Chinna vengayam + veppilai serthu arachi potta result kidaikum.. :)

But onion smell poga romba naal aagum.. shampoo use pannikonga :p
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.