பொன்னுருக்கல் விழா !

Durgaramesh

Minister's of Penmai
Joined
Sep 12, 2015
Messages
3,258
Likes
5,369
Location
Puducherry
#1
தமிழர்களின் சடங்குகளும் திருவிழாக்களும் !

பொன்னுருக்கல் விழா !


திருமண விழாவில் மிக முக்கிய பங்கினை வகிப்பது திருமாங்கல்யம் ஆகும். திருமாங்கல்யம் என்பது சுமங்கலியின் சின்னம் ஆகும். திருமாங்கல்யத்தை பாதுகாக்கப் படவேண்டியது அவசியமாகும். பெண் பார்த்தல் மற்றும் நிச்சயதார்த்தம் சடங்கு முடிந்த பிறகு ஒரு சுப நாளில் மணமகன் இல்லத்தில் அல்லது பொற்கொல்லர் வீட்டில் பொன்னுருக்கல் நடைபெறும். இந்த சடங்கில் மணப்பெண்ணை தவிர பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள், மணமகனின் உறவினர்கள் அனைவரும் கலந்து கொள்வர். இந்த சடங்கில் பெண் வீட்டிலிருந்து ஏதேனும் இனிப்பு அல்லது கொழுக்கட்டை செய்து வருவது சம்பிரதாயம் ஆகும்.

உறவினர்கள் கூடிய பிறகு குறித்த நாளில் மணமகன் வீட்டு வாசலில் நிறைகுடம், குத்துவிளக்கு, பன்னீர்தட்டு மற்றும் குங்குமம், சந்தனம் போன்றவற்றை வைத்துவிட்டு, வீட்டினுள் பொன்னுருக்கும் இடத்திலும் ஒரு நிறைகுடம், குத்துவிளக்குகள், தேங்காய், மாவிலைகள், பாக்கு, வெற்றிலை, வாழைப்பழம், மஞ்சள் துண்டு, அருகம்புல் மற்றும் குங்குமம், சந்தனம், விபு+தி எடுத்துக் கொள்ள வேண்டும்.

திருமாங்கல்யம் செய்ய தேவையான தங்க நாணயங்களை ஆலயத்தில் வைத்து பு+ஜை செய்து, ஒரு தட்டில் தங்க நாணயம், வெற்றிலை, பாக்கு, மங்சள், குங்குமம், பு+ பழத்துடன் வீட்டின் பு+ஜை அறையில் வைத்து வழிபட வேண்டும். பின் அந்த தட்டில் உள்ள தங்கத்தை மணமகனின் பெற்றோர் அல்லது பெரியவர்களின் கையில் கொடுத்து மணமகனிடம் கொடுக்க வேண்டும். மணமகன் அதை பொற்கொல்லரிடம் கொடுத்து உருக்க வேண்டும்.

பொற்கொல்லர் கும்பம் வைத்து விளக்கேற்றி தீபம் காட்டி வெற்றிலை, பாக்கு வாழைப்பழம் வைத்து தேங்காய் உடைத்து பு+ஜை செய்து பின் பொன்னுருக்கல் நடைபெறும். உருக்கியபின் தாய்மாமன் தேங்காய் உடைத்துப் பு+ஜை செய்து அந்த இளநீரை உருக்கிய தணலில் ஊற்றி தீயை தணிப்பார். பின் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு, பழம், பு+, மஞ்சள், குங்குமம் வைத்து வெற்றிலை மேல் உருக்கிய தங்கத்தையும் வைத்து மணமகனிடம் பொற்கொல்லர் கொடுப்பார். பின் வீட்டில் உள்ள அனைவருக்கும் காண்பித்து உரிய தட்சணை அளித்து திருமாங்கல்யம் செய்ய ஒப்படைக்கப்படும்.

இந்த சடங்குகள் முடிந்தபின் உறவினர்கள் அனைவரும் விருந்தில் கலந்து கொண்டு மகிழ்வர். மணமகன் வீட்டில் இருந்து தோழி விருந்தில் ஒரு பகுதியை மணமகளின் வீட்டிற்குச் சென்று மணமகளிடம் கொடுப்பர். பின் இரு வீடுகளிலும் திருமணத்திற்குரிய பலகாரங்கள் செய்யத்தொடங்குவார்கள். முதன் முதலாக இனிப்புப் பலகாரங்கள் செய்ய தொடங்குவர். இந்த நாள் முதல் மணமகள் மற்றும் மணமகன் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூடாது என்று பழங்காலத்தில் கடைபிடித்து வந்தனர், தற்போது அந்த சம்பிரதாயம் படிப்படியாக மறைந்துவிட்டது.
 

Sriramajayam

Lord of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
100,035
Likes
142,216
Location
Madras @ சென்னை
#2
Nice info friend.

:thumbsup​
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.