பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண&

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும்

By
டாக்டர் அப்பன்மனிதன் – மனிதனுடைய நோய்களுக்கெல்லாம் அறிவியல்ரீதியாக மருந்துள்ள மருத்துவம், மருந்தில்லா மருத்துவம் என பற்பல மருந்துகள், பற்பல மருத்துவங்கள் மனிதன் கண்டு பிடித்து, மருத்துவ உலகம் இவ்வுலகில் எங்கும் பரந்து விரிந்து வருகின்றதே?

இறைவன் – பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும். மனிதா! ஏன்? பொருந்தாத பொய்யெல்லாம் மருத்துவம் எனும் பெயரில் உலகில் சொல்லிக் கொண்டு வருகிறாய்?

மனிதன் – ஆங்கில மருத்துவம், சித்தா, ஹோமொயோபதி, ஆயுர்வேதம், யுனானி, பாட்டி வைத்தியம், காளான் மருத்துவம், இன்னும் பிற மருந்துள்ள மருத்துவங்கள் மற்றும் மருந்த்தில்லா மருத்துவங்களான அக்குபஞ்சர், அக்கு பிரஷர் , பிராணிக் ஹீலிங், ரெய்கி தொடு சிகிச்சை, செல் தெரப்பி, அனாட்டமி தெரப்பி, சிரிப்பு மருத்துவம், கை தட்டல் மருத்துவம், வண்ண மருத்துவம், மலர் மருத்துவம், காந்த சிகிச்சை மருத்துவம், சிறுநீர் மருத்துவம், யோகா மருத்துவம், தியான மருத்துவம், இயற்கை மருத்துவம், பஞ்ச காவ்ய மருத்துவம், பஞ்ச பூத சிகிச்சை, செராஜம் மற்றும் பிற மருத்துவங்களை கண்டு பிடித்து, மனிதன் ஆரோக்கியமாக வாழக் கற்றுக் கொண்டது என்னே ஆச்சரியம்!

இறைவன் – மனிதனுக்கு மட்டும் இவ்வாறு எண்ணற்ற மருத்துவ முறைகள், மருந்துகள், மருத்துவ வல்லுநர்கள், மருத்துவமனைகள் நாளுக்கு நாள் உலகில் விரிந்து பரந்து வந்த போதிலும் மனிதன் நோயிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளானா? உலகில் ஒரு ஆரோக்கிய மனிதனை இன்றளவில் பார்க்க இயலுமா? உனது தாத்தாவிற்கு இருந்த ஆரோக்கியம், வலு உனக்கில்லை. உனக்கிருக்கும் ஆரோக்கியம் வலு உனது பிள்ளைகளுக்கு இல்லை. பேரன், பேத்தி, பூட்டன், பூட்டிகளுக்கு இல்லை. நாளுக்கு நாள் குறைந்து கொண்டே தான் வருகிறதேயொழிய, வளரவில்லை. இன்றைய நாளில், பச்சைக் குழந்தைகளுக்கே கடுமையான நோய்கள், கருவிலே நோய்கள் கருவிலேயே மருத்துவம் செய்யும் அளவிற்கு மனிதரது ஆரோக்கியம், வலு குன்றிக் கொண்டே வருகிறதே!

மனிதன் – அது எப்படி இறைவா? மனிதனது கல்வியறிவு, விஞ்ஞான வளர்ச்சி எந்தவொரு பிற உயிரனத்திற்கும் இல்லாத அளவிற்குப் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளதே!

இறைவன் – ஆம், மனிதன் விஞ்ஞான வளர்ச்சியில் வானளாவ உயர்ந்துள்ளான். ஆனால் மெய்ஞான வளர்ச்சி ஆக்க வளர்ச்சி!! அனைத்து மதவாதிகளுமே கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு பாமர நோயாளிகளைத் திசை திருப்புவது போல், அனைத்து மருத்துவர்களுமே மருந்து,மருத்துவம் பெயரைச் சொல்லிக் கொண்டு பாமர நோயாளிகளைத் திசை திருப்பி விடுகிறார்கள்.

மனிதரை விடக் கீழான உயிரினங்களான அனைத்து விலங்குகள், பறவைகள், ஊர்வன உயிரனங்கள், மற்றும் பிற உயிரினங்கள் எல்லாம் கல்வியறிவு இல்லாமல், விஞ்ஞான வளர்ச்சி இல்லாமல், மெய்ஞான வளர்ச்சி பெற்றுவருகின்றன; அதன் மூலம், உலகில் பின் வரும் நிகழ்வுகளை முன் அறிந்து தங்களை காப்பாற்றிக் கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களில் மனிதன் தான் இறந்து வருகின்றானே தவிர, பிற எந்தவொரு உயிரினமும் இறந்ததாக வரலாறில்லை. அதனால்தான், மனிதரிடையே இன்றும், ‘படித்தவன் பாட்டை கெடுத்தான்’; எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்’ எனும் பழமொழி இருந்து வருகிறது. மனிதரது கல்விமுறை, ‘குருகுலக் கல்வி’யேயாகும். ஆனால் இன்றைய நாளில், உலகில் எங்கும் குருகுலக் கல்வியே இல்லை; மாறாக அறிவியல் கல்வி எனும் பெயரில் கல்வி கற்று, உயர் பட்டங்கள் பெற்று, உயர் பதவிகளில் பணி கிடைத்து, உயர் ஊதியம் பெற்று, உயர் ஊதியத்தால் பொய்யான ஆடம்பர வாழ்வு வாழ்ந்து, பொய்யான சமைத்த உணவுகளை உண்டு, பொய்யான செயற்கை பாங்களை அருந்தி உடல் உழைப்பு சிறிதுமின்றி, இயற்கை வாழ்வு இல்லாமல், முற்றிலும் செயற்கை வாழ்வு வாழ்ந்து, உடல், உளப் பிணிகளுக்கு ஆளாகி, அதன் நிமித்தம் பொய்யான மருந்துகளை உடலில் ஏற்றி, நலிவடைந்த உறுப்புகலை வெட்டியெடுத்து, மாற்று உறுப்பைப் பொருத்தி, இயற்கையின் பேராற்றல், இயற்கை வாழ்வியல் – இறை வாழ்வியலின் மகத்துவமறியாது, பணம் விரையம் செய்து, தன்னையும், தனது மனித சமுதாயத்தையும், உலகையும் அழித்து வருகின்றவன் மனிதன் மட்டும்தான்!

மனிதரைவிடக் கீழான அனைத்து உயிரினங்களும், உலகில் அவ் உயிரினங்கள் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை, பல்லாயிரம் பல்லாயிரமாண்டுகளுக்கு மேலாக மெய்யான தனக்குரிய இயற்கையுணவை மட்டும் உண்டு, இயற்கை பானம் அருந்தி, இயற்கை உணவைத் தேடி பகல் முழுவதும் உடல் உழைத்து, இயற்கையோடியைந்த வாழ்வு வாழந்து வருவதால், அவற்றிற்உ எந்தவொரு உடல், உளப் பிணியுமில்லை. பொய்யான மருந்தை உடலில் ஏற்ற வேண்டிய அவசியமும் இல்லை. எந்தவொரு உறுப்பும் சிறிதும் நலிவடையாததால், அவற்றை வெட்டவோ, மாற்று உறுப்பு பொருத்தவோ அவசியமும் இல்லை. மருத்துவரில்லை, மருத்துவம், மருந்தும் இல்லை! இல்லை!! அவை தூங்காமல், தூங்கி சுகம் பெறுகின்றன. ஏன்? மனிதர் அளவிற்குக் கூட அவற்றிற்கு நரை, திரை, மூப்பு, சாக்காடு இல்லை. மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்து வருகின்றன.
ஆதலாம், அனைத்து கல்வியையும் கற்ற மனிதா, நீ உடற்கல்வி வாழ்க்கைக் கல்வி, உணவுக் கல்வி ஆகிய மெய்யான கல்வியை மட்டும் கற்று அறியாததால், நீ மட்டும் பொய்யான உணவு உண்டு, பொய்யான பானமருந்தி, பொய்யான மருத்துவத்தைப் பின்பற்றி, நரை, திரை, மூப்பு, சாக்காடுக்கு இடங்கொடுத்து வாழ்கின்றாய்! உன்னால் தூங்காமல் தூங்கி சுகம் பெற முடியவில்லை. சும்மா இருக்க இயலவில்லை.

சமையல் உணவிலும் மனிதன் வளர்கின்றான் என்றால், அது அழிவு வளர்ச்சி. இயற்கை உனவிலும் மனிதன் வளர்கின்றான் என்றால், அது ஆக்க வளர்ச்சி. எனவே, இனியாவது, இறை நிலைக்குச் செல்ல வேண்டிய மனிதா, உனது இயற்கையுணவாகிய, இறை உணவாகிய தேங்காயும், பழ வகைகளை மட்டும், பசித்த போதெல்லாம் இயன்ற போதெல்லாம் உணவாக உண்டு பழகுவாயாக. அது போல், தேவைப்படும் போது மட்டும், பச்சைத் தண்ணீர் அல்லது இயற்கை பானங்கள் மட்டும் அருந்தி வருவாய். ஓரளவாவது உடல் உழைப்பைச் செய். ஓரளவாவது இயற்கையோடு இயைந்த இயற்கை வாழ்வு வாழ முயலுவாய். உன்னிடம் உள்ள அனைத்து உடல், உளப் பிணிகள் எல்லாம் ஸ்கேன், எக்ஸ்ரே இன்றி மருந்தின்றி, மருத்துவமின்றி, அறுவைச் சிகிச்சை இன்றி, மாற்று உறுப்புப் பொருத்துதல் இன்றி, பக்க விளைவின்றி, விரைவில் இயற்கை இறை நலம் பெறுவாய். நீ நலமாக வாழ்வதுடன், உனது மனித சமுதாயமும், உலகிலுள்ள பிற உயிரினங்களும், தாவர சங்கமங்களும், உலகும் நலமாக இருக்கும்.

உடல், உளப் பிணிகளுக்கு மட்டுமல்ல, உள் விபத்து, வெளி விபத்து ஏற்பட்ட போதும் கூட, உனது இயற்கை உணவாகிய தேங்காய் மற்றும் அனைத்துப் பழ வகைகள் உணவை உண்டு, இயற்கை பானம் மட்டும் அருந்தி, இயற்கையோடியைந்து வாழ்வாயாக. இறை வாழ்வு வாழ்வாயாக. நரை, திரை, மூப்பு, சாக்காடு இல்லாமல் வாழ்வாயாக. இறை வாவு வாழ்வாயாக. உலகில் அமைதி, சாந்தி தவழும். மாதம் மும்மாரி மழை பொழியும். உடலில் எந்தவொரு வன் செயல்களும், தீச் செயல்களாக நிகழாது. இறை செயல்களே ஓங்கும். எனவே, பொய்யைச் சொன்னாலும் பொருந்தும் பொய்யைச் சொல்வாயாக!

மருத்துவத்தில் ஒன்றுமில்லை. ஆனால் மருத்துவத்தை நாடினால் உடலும், உயிரும் அழியும்! (Medication is nothing. But it is scandal and fatal).


 
Last edited:

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,625
Likes
140,722
Location
Madras @ சென்னை
#3
Re: பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வே&#29

TFS friend.

:thumbsup​
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.