போலி மருத்துவர்

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,261
Likes
73,630
Location
Chennai
#1
ஒரு விசாரனைக்காக போலீஸ்காரர் (S.I) ஒருவர் என்னை பார்க்க வந்திருந்தார்.
கேஸ் இது தான் : ஒரு பெண், போலி மருத்துவரிடம் மருந்து சாப்பிட்டதால் மரணமடைந்து விட்டார். அவருடைய கணவன் குறிப்பிட்ட மருத்தவரின் மருந்தினால் தான் என் மனைவி இறந்து விட்டாள் அவர் பெயரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருக்கிறார்.
என்னை சந்தித்த எஸ். ஐ கேட்ட கேள்வி இவர் போலி மருத்துவர்ன்னு எதை வச்சு சார் நாங்க முடிவு செய்வது என்று. நான் அவரிடம், "சார், அவர் காலேஜில் படித்த சர்டிஃபிகேட் இருக்கா பாருங்க"ன்னு சொன்னதுக்கு ஒரு பெரிய ஃபைல் எடுத்து காமிச்சார், அதில் இருந்து ஒரு பேப்பரை உருவி, சார் நாங்க அவர்கிட்ட விசாரனைக்கு போன போது, தான் படித்திருப்பதா சொல்லி இந்த சர்டிபிகேட்டை காமிச்சார்ன்னு" குடுத்தார்.
அந்த சர்டிஃபிகேட் "அனுபவ முறை மருத்துவர்கள் பாதுகாப்பு சங்கம்" என்ற ஒரு அமைப்பினால் குடுக்கப்பட்டது. உங்களுக்கு சங்கம் பதிவது பற்றி தெரிந்திருந்தால் இது எவ்வளவு பைத்தியகாரதனமானது என்று புரியும். 1000 ரூ செலவில் 7 நபர்களின் அட்ரஸ் குடுத்து ஒரு சங்கம் பதிவு செய்து கொள்ளலாம். அந்த சங்கத்தின் மூலம் எதுக்கும் சர்டிபிகேட் குடுத்து கொள்ளலாம் என்றால்... ஓ மை காட்...
நான் அவர்கிட்டே இந்த விபரத்தை சொல்லி இது ஒரு டுபாக்கூர் சர்டிஃபிகேட்' சார், பொதுவா மருத்துவ கல்லூரில 51/2 ஆண்டுகள் படிக்கனும். படிச்சிட்டா மட்டும் மருத்துவத்தை பொது மக்கள் கிட்டே செய்ய முடியாது. அதுக்கு அப்புறமா தமிழக அரசின் மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்யனும். அதனால காலேஜில் படித்த சர்டிஃபிகேட், மற்றும் கவுன்சிலில் பதிந்த சர்டிஃபிகேட் இருந்தா மட்டுமே அவர் ஒரிஜினல் மருத்துவர். இவர் போலி தான் என்று சொன்னேன். அதுக்கு அவர் கேட்ட கேள்வி தான் என்னை மிரள வைத்தது.
அது என்ன கேள்வி என்றால்... "இந்த சங்கம் குடுக்கிற சர்டிபிகேட் செல்லாதுன்னு நான் எதை வச்சு முடிவு பண்றது? என்று கேட்டார்... மிரண்டுட்டேன்.. யார் முடிவு செய்றது?? அந்த சங்கத்துகிட்டே போய் கேட்டா ஒரு வேளை எனக்கு அதிகாரம் இருக்குன்னு சொன்னா... மறுபடி இல்லேன்னு யார் சொல்றது??
ஆக தவறா மருந்து குடுத்து ஒருத்தரை காலி பண்ணிட்டு ஏதாவது ஒரு சங்கம் அடிச்ச சர்டிபிகேட்டை குடுத்தா கூட நம்ம பியூரோக்ரஸி அதை வச்சுகிட்டு உருட்டி உருட்டி பார்த்துட்டே இருக்கும்ன்னு நல்லா தெரியுது...
இதுல மிக பெரிய காமடி, அந்த பெண் இறந்து, இந்த கம்ப்ளைன்ட் பதியபட்டு 6 வருடங்கள் ஆகிருச்சு, அந்த பெண் இறந்ததனாலேயும், இந்த கேஸ்ல FIR போட்டதனாலயும், அது கோர்ட்ல நிலுவைல இருக்கிறதாலயும், ஜட்ஜ் அடுத்த வாய்த்தாக்கு கேள்வி கேப்பாருங்கறாதாலயும் மட்டும் தான் அந்த SI இந்த கேஸ் கட்டை தூக்கிட்டு அலையறார்... புரிஞ்சதா??
அதனால உங்களுக்கு பாதுகாப்பு நீங்கள் மட்டுமே.. மட்டுமே ... மட்டுமே.... டன் டனா டன்..
- Dr.Sarav Urs
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,261
Likes
73,630
Location
Chennai
#3
Ipadiyum Irukkaangale.. :flame:
namma vithi.......
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,540
Location
Hosur
#4
என்னத்த சொல்றது... :sad2: நாடு உருபட்டா மாதிரி தான் :frusty:.
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,261
Likes
73,630
Location
Chennai
#5
என்னத்த சொல்றது... :sad2: நாடு உருபட்டா மாதிரி தான் :frusty:.
correct sumathi......
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,102
Likes
107,008
Location
Atlanta, U.S
#6
மூலைக்கு மூலை, யார் வேணும்னாலும் யாருக்கு வேண்டுமானாலும் டாக்டர் பட்டம் கொடுத்துக்கிட்டா இப்படித்தான்...!! விளங்கும்..!

இன்னும் அறுபது வருஷம் ஆனாலும், இந்த கேஸ் முடியாது... நிலுவையில் தான் இருக்கும்.
 

Mirage

Commander's of Penmai
Joined
Sep 17, 2014
Messages
1,078
Likes
6,580
Location
தார் பாலைவனம்
#7
விசாரிக்கிற ஜட்ஜ், வக்கீல் ஒரிஜினல் தான
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,261
Likes
73,630
Location
Chennai
#8
மூலைக்கு மூலை, யார் வேணும்னாலும் யாருக்கு வேண்டுமானாலும் டாக்டர் பட்டம் கொடுத்துக்கிட்டா இப்படித்தான்...!! விளங்கும்..!

இன்னும் அறுபது வருஷம் ஆனாலும், இந்த கேஸ் முடியாது... நிலுவையில் தான் இருக்கும்.
aamaam thenu........
 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,261
Likes
73,630
Location
Chennai
#9
விசாரிக்கிற ஜட்ஜ், வக்கீல் ஒரிஜினல் தான
ithu verayaa!!!!!!!!
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.