போலி முட்டை- Beware of Fake Eggs

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,946
Location
Atlanta, U.S
#1
உஷார்,உஷார், உஷார்...


எலக்ட்ரானிக்ஸ் பொருட்களில் தன்னுடைய ‘கைத்திறமை’ யைக் காட்டி வந்த சீனா, தற்போது கோழி முட்டை தயாரிப்பிலும் கைத்திறமையைக் காட்டி வருகிறது. கோழி முட்டையை கோழி மட்டும் தான் போட வேண்டும் என்பது இயற்கையின் நியதி. ஆனால் சீனாவில் போலி கோழி முட்டைகளை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டனர். அதுகுறித்த விவரம் தான் இது.


போலி முட்டை தயாரிக்க 7 வித ரசாயணங்களை பயன்படுத்துகிறார்கள் சீனர்கள். அதில் கால்சியம் கார்பனேட், ஸ்டார்ச், ரெசின், ஜெலட்டின், அலும் மற்றும் சில ரசாயணங்கள் அடக்கம்.

இந்தப் படத்தில் போலி முட்டை தயாரிக்க உதவும் கால்சியம் கார்பனேட் ஒரு பாத்திரத்திலும், மஞ்சள் கருவுக்கு நிறம் சேர்க்க மஞ்சள் வண்ணக்கலவையும், மஞ்சள் கரு மற்றும் வெள்ளை ப் பகுதி உருவாக்கும் மோல்டுகள் அருகருகே வைக்கப்பட்டுள்ளன.ரசாயணங்களைக் கலந்து போலியாகத் தயாரிக்கப்பட்ட மஞ்சய் கரு மோல்டில் ஊற்றப்படுகிறது.


மஞ்சய் கருவின் மேலே கால்சியம் கார்பனேட் மற்றும் சில ரசாயணங்கள் உதவியால் வெள்ளைக்கரு உருவாக்கப்படுகிறது. சற்று நேரத்தில் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைப்பகுதி தயார். பின்னர் இது ஒரு மணி நேரம் காய வைக்கப்படுகிறது.பாரபின் மெழுகில் தோய்த்தெடுக்கப்படும் போலி முட்டை.

பிறகு, அதன்மேல் செயற்கை ஓடு பொருத்தப்படுகிறது.


நிஜ முட்டையும் போலி முட்டையும்.

நிஜ கோழி முட்டையின் ஓட்டைவிட எளிதாக உடையக் கூடியது இந்த போலி முட்டை ஓடு. ஆனால் அதைப் பற்றிய கவலை சீன வாடிக்கையாளர்களுக்கு இல்லை. நிஜ முட்டைக்கும் போலி முட்டைக்கும் சுவையில் பெரிய வித்தியாசமில்லை என்று சொல்வதை விட போலி முட்டையின் சுவை அதிகமாக இருப்பதாகப் பேச்சு. ஆப் பாயில் போடும் போலி முட்டையின் அழகு தெரிய வருகிறது. மஞ்சள் கரு கொஞ்சம்கூட சிதறாமல் பந்துபோல் முழுதாக நிமிர்ந்து நிற்கிறதாம். மேலும், வெள்ளைக்கரு பரவும்போது நுரையும் அதிகமாக எழுகிறது.போலி முட்டையை உண்பதால் உடலில் மெது மெதுவாக விஷம் ஏறுகிறது என்றும் இதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள் உணவுத்துறை அறிஞர்கள்.


ஆனாலும் சீன போலி முட்டைத் தயாரிப்பாளர்கள் அடங்குவதாகத் தெரியவில்லை. காரணம் காசு! ஒரு கிலோ கோழி முட்டை 60 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதுவே போலி முட்டை ஒரு கிலோ தயாரிக்க 6 ரூபாய் தான் செலவாகிறது. ஏன் தயாரிக்க மாட்டார்கள்.உணவு கலப்படம் மற்றும் போலி உணவுகளால் உடல் நலம் பாதிக்கப்பட்டு சீனாவில் இறப்பவர்கள் எண்ணிக்கை சமீப காலத்தில் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
~~~ இணையத்தில் இருந்து எடுத்த ஷாக் தகவல்...!!
 

jv_66

Super Moderator
Staff member
Super Moderator
Joined
Dec 2, 2011
Messages
32,163
Likes
83,717
Location
Bangalore
#2
இதையும் விட்டு வைக்கலியா அவங்க ....அடக்கடவுளே:violin:
 

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,712
Likes
76,535
Location
Hosur
#3
முட்டை மட்டுமல்ல அரிசியையும் விட்டுவைக்கவில்லை சீனர்கள்.

கீழ இருக்கிற லிங்கை கிளிக் பண்ணி பாருங்க பிரெண்ட்ஸ்.

http://www.penmai.com/forums/health/89443-china-makes-fake-rice-plastic-%91-%94-302-a.html


நீங்க எல்லாம் நல்லா வருவீங்கடா!!! :frusty::flame:
 

Uma manoj

Guru's of Penmai
Joined
Feb 28, 2012
Messages
5,422
Likes
18,409
Location
Chennai
#5
தினமும் ஒரு முட்டை சாப்பிடுங்கன்னு அரசு சொல்கிறது...அவசரத்திற்கு முட்டையை தான் அதிகம் உபயோகிக்கிறோம்...பக்கத்து ஊரில் என்னடானா காய்கறிகளில் அதிக விஷத்தன்மை உரம்...காயும் சாப்பிட முடிலை..nonveg ரெண்டையும் சாப்பிட முடிலை....பாவிங்க..ஒன்னையும் விட்டு வைக்கலை..மனுஷன் எப்படி தான் வாழ்வது????
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,946
Location
Atlanta, U.S
#6
முட்டை மட்டுமல்ல அரிசியையும் விட்டுவைக்கவில்லை சீனர்கள்.

கீழ இருக்கிற லிங்கை கிளிக் பண்ணி பாருங்க பிரெண்ட்ஸ்.

http://www.penmai.com/forums/health/89443-china-makes-fake-rice-plastic-%91-%94-302-a.html


நீங்க எல்லாம் நல்லா வருவீங்கடா!!! :frusty::flame:அரிசியுமா.....!! கஷ்டம்டா சாமி....!
இதெல்லாம் எங்கே போய் முடியுமோ....!!
 

thenuraj

Silver Ruler's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Jul 19, 2012
Messages
32,083
Likes
106,946
Location
Atlanta, U.S
#7
தினமும் ஒரு முட்டை சாப்பிடுங்கன்னு அரசு சொல்கிறது...அவசரத்திற்கு முட்டையை தான் அதிகம் உபயோகிக்கிறோம்...பக்கத்து ஊரில் என்னடானா காய்கறிகளில் அதிக விஷத்தன்மை உரம்...காயும் சாப்பிட முடிலை..nonveg ரெண்டையும் சாப்பிட முடிலை....பாவிங்க..ஒன்னையும் விட்டு வைக்கலை..மனுஷன் எப்படி தான் வாழ்வது????


பழங்காலத்துக்கு மாறிட வேண்டியது தான் உமா...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.