'ப்ருக்ஸிஸம்' (Bruxisam)

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,127
Likes
20,710
Location
Germany
#1
தூக்கத்தில் பற்களைக் கடிப்பதை 'ப்ருக்ஸிஸம்' (Bruxisam) என்பார்கள். மன அழுத்தத்துக்கு வடிகால் இல்லாததுதான் இந்தப் பிரச்னைக்கு முக்கிய காரணம். வெறுப்பு, கோபம், இயலாமை, ஏமாற்றம் என பல்வேறு மன அழுத்தங்களுக்கு தீர்வு காணாமல், மனதுக்குள்ளேயே போட்டு புதைத்துக் கொண்டால், அவை தூக்கத்தின்போது இப்படி வெளிப்படுகின்றன.

பொதுவாக டீன்-ஏஜ் பருவத்தினர்தான் இதில் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இவர்களின் மன அழுத்தத்துக்கு தேர்வு பயம் முக்கியக் காரணம்.

பற்கள் நறநறவென அரைபடுவதால் நாளடைவில் கீழ்த்தாடையின் முன்பற்கள் தேய்ந்து, கூச ஆரம்பித்துவிடும். இனிப்பையும், சூடான மற்றும் குளிர் உணவுகளையும் சாப்பிட முடியாமல் போகும். வெகு நாட்களாக இந்தப் பிரச்னை தொடர்ந்தால், தாடைச் சதைகள் இறுகி முகத்தின் சீரமைப்பே குலைந்து போகலாம். மண்டை ஓட்டில் தாடை எலும்பு இணைந்திருக்கும் மூட்டுப் பகுதியில் வலியும் வரலாம்.


இப்படி பற்கள் அரைபடுவதைத் தவிர்க்க தற்காலிகமாக, 'Soft Splint' என்ற கிளிப்பை பயன்படுத்தலாம். உறங்கும்போது மட்டும் இதைப் பொருத்திக் கொள்வதன் மூலம் கீழ்த்தாடையும் மேல்தாடையும் ஒட்டாமல், உரசாமல் தடுக்கலாம்.

ஆனால், இது நிரந்தரத் தீர்வு அல்ல. மன அழுத்தத்துக்கு காரணம் தேடி, அதைக் களைந்த பிறகே இந்தப் பிரச்னையிலிருந்து முழுவதுமாக விடுபட முடியும். யோகா, தியானம் போன்ற ஆன்மிக வழிமுறைகளையோ, நல்ல மனநல ஆலோசகரின் அறிவுரைகளையோ முயற்சித்துப் பாருங்கலாம். . நிச்சயம் நிவாரணம் கிடைக்கும்.'
 

sudhar

Commander's of Penmai
Joined
Apr 4, 2011
Messages
2,044
Likes
1,023
Location
chennai
#2
its new information about health......thanks 4 sharing...viji...
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.