ப்ளட் குரூப் டயட்

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
ப்ளட் குரூப் டயட்
*உங்க ரத்த குரூப் ‘ஓ’வா, அப்படீன்னா, வறுத்த வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு, பட்டர் பீன்ஸ், மீன், டோபு, ரோஸ்ட் சிக்கன், ரோஸ்ட் பீப், குறைந்த கொழுப்பு யோகர்ட், சோயா பால், மீன் வகைகளை ஒரு பிடி பிடிப்பீர்கள். சரியா?

*சாம்பாரில் ஆரம்பித்து சட்னி, துவையல், பருப்பு பொடி, நார்த்தங்காய் ஊறுகாய், வற்றல், வடகம், அப்பளம் என்று சைவ உணவை பார்த்துப் பார்த்து, சூப்பராய் மூக்கு பிடிப்பவரா நீங்கள், அப்படியானால் நீங்கள் ‘ஏ’ குரூப் ரத்தவாசி.

*இவர்களுக்கு எல்லா வகை உணவுகள் பிடித்தமானவைதான். இருந்தாலும், பால், பால் பொருட்களில் அதிக ஈடுபாடு இருக்கும். ஆம், இவர்கள் ‘பி’ குரூப் ரத்தத்துக்கு சொந்தக்காரர்கள். ஐஸ்கிரீமில் ஆரம்பித்து புதுப்புது பால் உணவுகளில் சூப்பர் டேஸ்ட் பிரியர்கள்.

*சைவ உணவுகள், பால் பொருட்களில் சரிசமமாக ருசி பிடிப்பவர்கள் ‘ஏபி’ குரூப் ரத்தத்தின் உடன்பிறப்புகள்.என்னது, ரத்த குரூப்பில் கூடவா இந்த வித்தியாசம் உள்ளது... என்று நீங்கள் வியக்கலாம். இந்த கம்ப்யூட்டர் காலத்தில், ரத்த குரூப்புக்கு ஏற்ற டயட்களே வந்தாச்சு.

அவங்கள பார்த்துதான்

*நடை, உடை, பாவனை என்று சகலத்தையும் யாரிடமிருந்து கற்கிறோம்? நமக்குப் பிடித்தமான சினிமா நட்சத்திரங்களிடமிருந்துதானே? அந்த வகையில் இப்போதுலேட்டஸ்ட் ஆக தொற்றிக் கொள்ளப்போவது என்ன தெரியுமா?
*ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை வந்துவிட்ட பழக்கமான ‘ப்ளட் குரூப் டயட்’. அங்கே லிஸ் ஹர்லி, டெமி மூர் என்றால்,பாலிவுட்டில் அக்ஷய் குமார், சஞ்சய் தத் என்று ஒரு பட்டியலே இந்த பிரியர்கள் பட்டியலில் உள்ளனர்.

அதென்ன ப்ளட் குரூப் டயட்?

*உங்கள் வயது, உடல் பருமன் ஆகியவற்றை கணக்கிட்டு, ப்ளட் குரூப்பை அடிப்படையாக வைத்து புரோட்டீன், குறைந்த கொழுப்பு, கார்போ உணவு வகைகளில் எவற்றைஎடுத்துக்கொள்ளலாம் என்று நிர்ணயிப்பதுதான் இந்த ப்ளட் குரூப் டயட்.

*இந்த புது டயட் முறை வந்ததும், அமெரிக்காவில் பலரும் அசைவத்தில் இருந்து சைவத்துக்கு, இயற்கை உணவுகளுக்கு தாவி விட்டனராம். ரத்த அழுத்தத்தில் இருந்து கேன்சர் வரை இந்த டயட்டால் எதுவும் அண்டாது. இதில் டேஸ்ட் கண்டு விட்டால், சாக்லெட், பிட்சா, பர்கரில் நாட்டம்செல்லவே செல்லாது.

*ஒவ்வொரு ப்ளட் குரூப்பை சேர்ந்தவர்களுக்கும் தனித்தனி ஆன்டிஜன் உள்ளது. இந்த ரசாயன பொருள்தான் உடலின் எதிர்ப்பு சக்தியை நிர்ணயிக்கிறது. ப்ளட் குரூப்டயட்கள், இந்த ஆன்டிஜனில்தான் கைவைக்கின்றன. இந்த ஆன்டிஜன் உள்ள ப்ளட் குரூப் ஆசாமிகளுக்கு இந்த வகை உணவு சாப்பிட்டால், எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கிறார்கள்நிபுணர்கள்.

குண்டு குறையும்

*இந்த வகை ப்ளட் குரூப் டயட்களை பின்பற்றினால், முதலில் ஒபிசிட்டி போய்விடும். இதுபற்றி அமெரிக்க நிபுணர் பீட்டர் ஆடம் ஒரு புத்தகமே போட்டுள்ளார். ‘ஈட் ரைட் 4 யுவர் டைப்’என்பது இந்த நூலின் பெயர்.

*அமெரிக்காவில் பலரிடம் இந்த டயட் புத்தகம், வேதபுத்தகமாக உள்ளது.இந்தியாவில் இந்த ப்ளட் குரூப் டயட் நுழைந்து விட்டது. இப்போதைக்கு ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மட்டும் உள்ளது. அதிலும், நடிகர்களிடம் உள்ள இந்த பழக்கம், மும்பை பணக்காரர்களிடமும் தொற்றி உள்ளது.

*தெற்கு பக்கம் இந்த காற்று இன்னும்அடிக்கவில்லை.நமக்கு காய்கறி தானுங்க இப்போதுதான் அமெரிக்கா போன்ற பணக்கார நாட்டு மக்களுக்கு உடலுக்கு மருந்தாகும் உணவு வகைகள் பற்றி தெரிகிறது. ஆனால், நம்ம பாட்டி காலத்தில் இருந்து நாம் கடைபிடிக்கும்காய்கறி, தானிய, பருப்பு, கடலை வகை உணவுகளுக்கு ஈடு எங்கும் இல்லை.

*இப்போது பாட்டிகள் சொன்னதுதான் இயற்கை உணவாக வலம் வருகிறது. ‘பாட்டி சொல்லை தட்டாதே’ என்று சொல்ல, எந்த வீட்டிலும் பாட்டிகள் இல்லை; முதியோர் இல்லத்துக்குதான் போய் பார்க்க வேண்டும். ஆனால், அவர்கள் சொன்னதையே, மாத வகுப்பு எடுக்கும் கோச்சிங் கிளாசில் கற்றுஅல்லது ‘நெட்’ வழியே தெரிந்து கொள்ள வேண்டிய நிலையில்தான் நாம் உள்ளோம்.

மொத்தத்தில், ப்ளட் குரூப் டயட் என்று ஒரு சூப்பர் வியாபாரம் வலம் வரப்போவது மட்டும் நிச்சயம்.
 
Last edited:

Mary Daisy

Guru's of Penmai
Registered User
Blogger
Joined
Dec 28, 2011
Messages
5,048
Likes
12,482
Location
Ever green city
#2
intrstng . . .. . .

also unknwn info . .. .
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.