மகப்பேறு மருத்துவமனையில் தேவையான வசதிக&

nlakshmi

Minister's of Penmai
Joined
May 21, 2011
Messages
2,787
Likes
3,821
Location
US
#1
மகப்பேறு மருத்துவமனையில் இருக்க வேண்டிய 5 அத்தியாவசிய வசதிகள்.
  • Neo natal intensive care Unit(NICU) - எதிர்பாராமல் உங்கள் குழந்தை குறை பிரசவத்தில் பிறந்தாலோ, அல்லது உங்கள் குழந்தைக்கு பிறந்தவுடன் மருத்துவ சிகிச்சை தேவை பட்டாலோ உங்கள் குழந்தைக்கு சிறப்பு குழந்தை சிகிச்சை அவசியம். அதற்கு உங்கள் மகப்பேறு மருத்துவ மனையில் Neo natal intensive care Unit(NICU) இருக்கிறதா என்று அறிதல் அவசியம்.
  • இரத்த சேமிப்பு வங்கி - பிரசவம் நடக்கும் போதோ அல்லது நடந்த பின்னோ எதிர்பாராத விதமாக அதிகமான இரத்த போக்கு ஏற்பட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்க, இரத்த வங்கி நீங்கள் செல்லும் மருத்துவமனையில் உள்ளதா அல்லது விரைவாக இரத்தம் கிடைக்க உங்கள் மருத்துவமனையில் வழி உள்ளதா என்றும், தேவை யான இரத்தம் வங்கியில் இருப்பு இருக்கிறதா என்றும் அறிதல் அவசியம்.
  • சுத்தம்- ஒரு நல்ல மருத்துவமனையின் அடையாளம் மருத்துவமனையின் உள்ள இடங்கள், சுவர்கள், பணியாளர்கள்,மருத்துவ உபகரணங்கள், கழிப்பிடங்கள் போன்றவைகள் தூய்மையாக இருத்தலே. நீங்கள் செல்ல வேண்டிய மருத்துவமனையில் சுற்றி பார்க்கும் பொழுது இது எல்லாம் தூய்மையாக இருக்கிறதா என்று கவனித்தல் அவசியம்.
  • # அந்த மருத்துவமனையில் தினமும் படுக்கை விரிப்பை மாற்றுகிறார்கள?
# மருத்துவ மனையில் தாயரிக்க படும் சாப்பாடு சுகாதாரமாக உள்ளதா?
# தினமும் மருத்துவமனையில் உள்ள அறைகளை சுத்தம் செய்கிறார்களா?
# எல்லா மருத்துவமனை உபகரணங்களும் ஸ்டெரிலைஸ் செய்கிறார்களா?
# மருத்துவ மனையில் உள்ள கழிப்பிடங்கள் சுத்தமாக உள்ளதா?(ஏன் என்றால் நோய் ஒட்டுதல் இல்லாமல் இருக்கும்)
# மருத்துவ பணியாளர்கள் சரியான விதமாக கை கழுவி, சுத்தமாக இருகிறார்களா?
  • ஆம்புலன்ஸ் சேவை - உங்கள் மருத்துவ மனையில் அவசர ஆம்புலன்ஸ் சேவை உள்ளதா என்று அறிந்து வைத்து கொள்ளுங்கள். ஏன் என்றால் பிரசவ நேரத்தின் பொழுது எதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் உடனே கொஞ்சம் பெரிய மருத்துவ மனைக்கு மற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இருபத்தி நாலு மணி நேர ஆம்புலன்ஸ் சேவை காலம் தாமதிக்காமல் செயல் படுவது அவசியம்.
  • துணை மின்சாரம்- மின்வெட்டு அதிகமாக இருக்கும் இந்நாள்களில் உங்கள் மருத்துவமனியில் ஜெனரேடர் அல்லது மின்சார காப்பு இருக்கிறதா என்று அறிதல் மிக அவசியம். ஏன் என்றால் மருத்துவ மனையில் விளக்கு, பேன், மின்தூக்கி போன்ற வற்றிற்கு மின்சாரம் அவசியம். மட்டுறம் incubator க்கு தொடர் மின்சாரம் அவசியம்.பல மருந்துகள் மற்றும் இரத்தம் போன்றவற்றை குளிர் சாதான பேட்டியில் பராமரிப்பது மிக அவசியம் . மற்றும் தண்ணீர் பற்றாகுறை இல்லாமல் இருக்கிறதா என்றும் பார்த்து கொள்ளல் அவசியம்.
 
Last edited:

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.