மகளிர் தின வாழ்த்துகள்

UPPILI SRINIVAS

Friends's of Penmai
Joined
Jul 23, 2013
Messages
288
Likes
1,163
Location
thanjavur
#1
வணக்கம் என் ஓவியத்துடன், கவிதையுடன் நெஞ்சார்ந்த மகளிர் தின வாழ்த்துகள். வாழ்க வளமுடன் நலமுடன் என்றென்றும்

தமிழ் கண்ட பெண்

ஈற்று எதுகையாய் இனித்திடும்
இணையான உன் இதழ்கள்
மாற்றியும் மடக்கியும் எழுதும்
புதுக் கவிதைபோல்ஏற்ற இறக்கமாய்
அமைந்த இடை அழகு
அசை சீர் தொடை அழகாய்
அமைந்தால் மரபு கவிதைக்கு அழகு
அசையும் உந்தன் நடையால்
அழகுக்கே அழகு அழகு
கண்ணதாசனின் கவிதைபோல்
செப்பலோசையின் இனிமை
கைப் பேசியை காதினுள் வைத்து
கைக்குள் அடக்கமாக பேசிடும் நளினம்
ஹைக்கூ கவிதையும் மிஞ்சிடும் மெல்லினம்
வள்ளுவன் வடித்த மூன்றம்பாலாய்
அள்ளி தெளித்திட்ட உன் இளைமையிலே
முனிவரும் மயங்குவர் இளமயிலே
இல்பொருள் உவமை அணியாய்
ராத்திரியில் பூத்திருக்கும் தாமரையே
காசு மலர் பிறப்பு என்று ஈற்றில் முடிந்தால்
வெண்பாவாம் கன்னி தாய்மை முதுமை
என்று முடிவதும் பெண் பாவாம்
தமிழைப் பெண்ணாய்க் கண்டேன்
பெண்ணைத் தமிழாய்க் கண்டேன்
கவிதையைப் பெண்ணாய்க் கண்டேன்
பெண்ணைக் கவிதையாய்க் கண்டேன்
இரண்டிலும் இன்பம் கண்டேன்
இரண்டினையும் இணைத்தால்
இன்னும் இரண்டு மடங்காகும் இன்பம்
என்றே கண்டேன் தமிழ் கண்ட பெண்ணை

S6301121.jpg

அன்புடன்
முனைவர். உப்பிலி ஸ்ரீனிவாசன்
 
Last edited by a moderator:

vennila chandra

Minister's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Mar 4, 2012
Messages
2,862
Likes
18,218
Location
coimbatore
#4
பெண்மையைப் போற்றும் பெண்மை தளத்திற்கும், பெண்மையின் அனைத்து அங்கத்தினருக்கும் எனது மங்கையர் தின நல்வாழ்த்துக்கள்....

 
Joined
Oct 30, 2011
Messages
19
Likes
20
Location
Chennai
#5
கருதனில்
மங்கையராய்
பிறந்து,
வயற்றில்
குழந்தைகளை
சுமந்து,
மார்பில்
கணவனை
தாலாட்டி,
முதுகில்
குடும்ப சுமைகளைத்
தாங்கும்
மங்கையருக்கு,
மகளிர் தினம்
ஒரு இனிய சமர்பணம்..!


தோழிகள் அனைவருக்கும் இனிய "மகளிர் தின நல்வாழ்த்துக்கள்".
 

Sriramajayam

Supreme Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 19, 2012
Messages
95,467
Likes
140,711
Location
Madras @ சென்னை
#7
This LIFE has no existence without a strong ally in WOMAN in every stage
of life starting from Motherhood to Wife, Sister & finally a Daughter.
Happy Women’s Day !!

animation-happy-womens-day.gif


 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.