மகாளய அமாவாசை - Mahalaya Amavasya

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
35,920
Likes
78,403
Location
Hosur
#1
மகாளய அமாவாசை


சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரை-குடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள்.

பொதுவாக மாதந்தோறும் வரும் அமாவாசையன்று இறந்து போன மூதாதையர்களுக்கு திதி கொடுத்தால் யாரை நினைத்து திதி கொடுக்கிறோமோ அவர் மட்டும் வந்து திதியை பெற்றுக்கொள்வார். ஆனால் மகாளயபட்ச காலத்தில் திதி கொடுத்தால் நம் மூதாதையர்கள் அனைவரும் ஒன்றாக வந்து திதியை பெற்றுக்கொள்வதாக ஐதீகம்.

மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் போனதாலோ தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசை தினத்தன்று திதி கொடுத்தால் அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும்.

இந்நாள் மிகவும் புண்ணியமான மகாளய அமாவாசை நாள். முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச் சிறந்த பலனை கொடுக்கும்.

கருடபுராணம், விஷ்ணு புராணம் போன் புராணங்களிள், “ ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும், முடியாதவர்கள் காகத்திற்கு அன்னம் வைக்கலாம்,. பசுவுக்கு அகத்திகீரை, பழம் கொடுக்க வேண்டும் என்கிறது.

இப்படி முன்னோர்களின் ஆத்மாவையும் சமீபத்தில் இறந்தவர்களின் ஆத்மாவையும் பூஜை மூலமாக திருப்திப்படுத்தினால் திருமணத்தடை விலகும், புத்திரபாக்கியம் கிடைக்கும். கடன்தொல்லை, மனக்கவலை, நவக்கிரக தோஷங்கள் போன்ற அனைத்து துன்பங்களும் விலகும் என்கிறது புராணங்கள்.

நமது முன்னோர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். பூமியில் வாழ்ந்து மடியும் நம் மூதாதையர்களின் பூத உடல் தான் மறைகிறது. ஆனால் ஆன்மாவானது தனது சூட்சும உருவில் இருந்து அருளாசி வழங்கி தன் குலத்தை காத்து வருகின்றார்கள். எனவே பித்ரு பூஜை நமது முன்னோர்களால் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டு வந்துள்ளது. முன்னோர்களின் மனவருத்தத்தை அடைந்த குடும்பத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது சாஸ்திரம். அதனால்தான் பகீரதன், மாபெரும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்கு வரவழைத்து தம் முன்னோர்களை சாந்தப்படுத்தினான்.

இந்த நாளில் ஏழை, எளியோர், இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வை தானம் செய்வதும் அன்னதானம் தருவதும் நலம் பயக்கும். காகத்துக்கு உணவிடுவது மிக சிறப்பானது. பசுமாட்டுக்கு கீரை, பழம் போன்றவற்றையும் யானைக்கு பழங்கள், கரும்பு, சர்க்கரை பொங்கல் ஆகியவற்றையும் அளிப்பதால் பாவங்கள், தோஷங்கள், தடை நீங்கி சுபிட்சம் உண்டாகும்.
நாமும் நம்மால் இயன்ற அளவு மகாளய அமாவாசை பூஜையும், தர்பணமும் முறையாகச் செய்து மூதாதையரின் ஆசியோடு ஆனந்த வாழ்வு அடைவோம்!
 

Attachments

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.