மகிழ்ச்சியை தரும் பாரிஜாதம் பூ!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,663
Likes
18,542
Location
chennai
#1
மகிழ்ச்சியை தரும் பாரிஜாதம் பூ!

பவழமல்லிகைப்பூ, பாரிஜாதம், Night-flowering Jasmine போன்ற பெயர்களால் அழைக்கபடுகிறது.


பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் அன்னை ஆசிரமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர்கள் வளர்க்கப்படுகின்றன. மலர்கள் குறித்த பல தகவல்களைப் புத்தகங்களாகவே எழுதி வெளியிட்டு இருக்கிறார் அன்னை. இவர் மலர் குறித்துச் சொன்ன சில தகவல்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் அன்னை ஆசிரமப் பக்தரான விஜய கிருஷ்ணன்.

''மனிதர்கள் எப்போதும் மனநிலையைச் சமமாக வைத்துக்கொள்ளத் தெரியாமல் குழம்புகிறார்கள். அவர்கள் மலர்களோடு தங்கள் நேரத்தைச் செலவிடலாம். ஏனெனில், மலர்களுக்கு அமைதிப்படுத்தும் இயல்பு உண்டு. 'எனக்கு எவ்ளோ பிரச்னை தெரியுமா?’ என்று சின்ன விஷயத்துக்காகக்கூட அதிகமாக அலுத்துக்கொள்ளும் மனநிலையை மாற்றும் தன்மை ரோஜாவுக்கு உண்டு. புதிய சூழ்நிலைக்குத் தன்னை மாற்றிக்கொள்ள முடியாத மனநிலையை, வால்நட் மலர் மாற்றி அமைக்கும்.

'கோபத்தைக் குறைப்பதில் முதல் பரிசு தாமரைக்குத் தரலாம்’ என்கிறார் அன்னை. பரந்து விரிந்த மனநிலையை உருவாக்கும் சக்தி சூரியகாந்திப் பூவுக்கு உண்டு. துளசி, அர்ப்பணிப்புக் குணத்தை அதிகரிக்கும். மல்லிகை, பணிவைக் கூட்டும். பெகோனியா, ஆறுதல் கொடுக்கும். உதவும் குணத்தை அவரைப் பூ அளிக்கும். கொய்யாப் பூ அமைதி தரும். பாரிஜாதம், மகிழ்ச்சிக்கானது'' என்கிறார் விஜய கிருஷ்ணன்.

 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.