மகிழ மரத்தின் மருத்துவ குணங்கள்

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,557
Likes
12,987
Location
chennai
#1
மகிழ மரத்தின் வியக்கும் மருத்துவ குணங்கள்

பிறந்த நாள், புது வருடம் மற்றும் திருமண நாள் போன்ற நிகழ்வுகளில் வீட்டின் பெரியோர் மற்றும் மூத்தோரிடம் பெறும் ஆசீர்வாதமும், மனதிற்கு புத்துணர்வூட்டும் அவர்களின் நல்வார்த்தைகளும் நமக்கு உற்சாகத்தைத் தருவதுபோல, பசுமையான நறுமணம் கமழும் மலர்களைக் கொண்ட மரங்களைக் காணும்போதும், அவற்றின் அருகே செல்லும்போதும், நமக்கு இறை ஆசீர்வாதம் கிடைத்தது போன்ற உணர்வுகள் ஏற்படும் அல்லவா!

மரங்கள் பலவிதத் தன்மைகள் கொண்டவையாகத் திகழ்கின்றன, நமக்கு உயிர்காற்றைத் தடையின்றி வழங்கும் மரங்கள், நீர் வளத்தைக் காக்கும் மரங்கள், பயன்தரும் காய்கள் மற்றும் கனிகள் தரும் மரங்கள், நறுமணமூட்டும் மலர்களைத் தரும் மரங்கள், விவசாய உபகரணங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் தரும் மரங்கள் என்று, இப்படி எண்ணற்ற மரங்கள் நம் அருகாமையில் இருக்கின்றன.

சில மரங்களின் பயன்களை நாம் அடைய அவற்றைக் கல்லாலோ தடி கொண்டோ தாக்கி, அவற்றின் பயன்தரும் காய் கனிகளைக் கவர்கிறோம், சிலமரங்களின் பயன்களை அடைய நாம் அவற்றை வெட்டிப் பயன்படுத்துகிறோம்.ஆனாலும் மலர்களைக் கொண்ட மரங்கள் நம் அன்னையைப் போன்றவை, நம் தேவை அறிந்து அவள் தன் உழைப்பை, தன் அர்ப்பணிப்பைத் தருவது போல, நறுமணம் கமழும் மலர்களைக் கொண்ட அரிய மரங்கள், நமக்கு அந்த நறுமணம் தரும் மலர்களைக் கொய்ய, அவற்றைத் தடி கொண்டு தாக்க வேண்டியதில்லை, நாம் அவற்றின் அருகே சென்றாலே, நறுமண மலர்கள் எல்லாம், நம் வழிகளில், மரங்களின் கீழே புத்தெழிலுடன் பூத்துக் கொட்டிக்கிடக்கும். அப்படி ஒரு சிறப்பு வாய்ந்த மரம்தான், மகிழ மரம்.

மலர்கள் தரும் மரங்கள் எல்லாம், தெய்வீக ஆற்றலுடன் தொடர்புடையவை, மகிழ மரங்கள், திருத்தலங்களில் தல மரமாக மட்டும் இல்லை, அவை புனிதத்தில், நல் ஆற்றலில், மனிதர்க்கு கல்வி கேள்விகளில் ஞானம் தரும் ஞான மரமாக, குரு மரங்களாகத் திகழ்கின்றன.

வியாழக் கிழமைகளில் மகிழ மரத்தை வணங்கி வருவோருக்கு, அறிவுத்தெளிவு உண்டாகும் என பண்டைய சாத்திரங்கள் உரைக்கின்றன.

புத்தரின் வாழ்வில் தொடர்புடைய புனித மரங்களில் ஒன்றாக மகிழ மரம் திகழ்கிறது, சமண சமயத்துறவிகளில் சிலர், மகிழ மரத்தடியில் ஞானோதயம் அடைந்துள்ளனர். ஜைன மதத்திலும், புனித மரமாக மகிழ மரம் போற்றப்படுகிறது.

மகிழ மரம் :

நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் உறையும் திருவண்ணாமலை திருத்தலத்தின் தல மரமாக விளங்குவது, மகிழ மரமே! பல சிவன் கோவில்களில் தலமரமாக மகிழ மரம் இருந்தாலும், தனிச்சிறப்பாக, திருவண்ணாமலை மரம் என்றும் அழைக்கப்படுகிறது. மகிழ மரம் சிவனுக்கு உகந்த மரமாக மட்டுமல்ல, சூட்ட உகந்த மலர்களாகவும் மகிழ மலர்கள் திகழ்கின்றன, சிவபெருமானுக்கு உகந்த மலர்களாகத் திகழ்வதால், மகிழ மலர்களை, சிவ மல்லி மலர்கள் என்றும் அழைக்கின்றனர்.

தமிழ்க்கடவுள் முருகனுக்கும், பெருமாளுக்கும் உகந்த மலர்களாகவும் மகிழ மலர்கள் திகழ்கின்றன.

தமிழகத்தின் தொன்மையான மரமான மகிழ மரம், எல்லா இடங்களிலும் தளிர்த்து, செழித்து வளரும் இயல்புடையது. தமிழக மலைத்தொடர்களிலும் அதிக அளவில் வளர்கிறது. இலைகள், காய், கனி, மலர்கள் மற்றும் மரப்பட்டைகள் மனிதர்களுக்குப் பயன்கள் தருபவையாக அமைகின்றன.

மகிழ மரங்கள், வீடுகளில், பூங்காக்களில் மற்றும் சுற்றுலா மையங்களில், இவற்றின் அற்புத நறுமணத்துக்காகவும், அழகுக்காகவும், நிழல் தரும் தன்மைக்காகவும் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. மகிழ மரங்கள் வெப்பமான வெளிப்புறத்தை குளிர்ச்சியாக்கும் தன்மை மிக்கவை, காற்றில் உள்ள தூசு நச்சுக்களை வடிகட்டி, நல்ல காற்றை அளித்து, சுற்றுச்சூழலைக் காக்கும் ஆற்றல் மிக்கவை.

நறுமணத்தை முகர்ந்தாலே, மனதிற்கு அமைதியையும் உற்சாகத்தையும் வழங்கக்கூடிய மகிழ மலர்கள், உடல் வலிமைக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. உடலை குளிர்வித்து, உடல் நச்சுக்களைப் போக்கும் வல்லமை மிக்கது, மகிழ மரம்.
 
Last edited:

honey rose

Ruler's of Penmai
Joined
Aug 27, 2013
Messages
10,557
Likes
12,987
Location
chennai
#2
பல் வியாதிகள் தீர்வில் மகிழ மர இலைகள் :

கருவேலம் தூளில் தினமும் பல் துலக்கி, அதன் பின்னர், மகிழ மரத்தின் இலைகளைக் காய்ச்சிய நீரில், வாய்க் கொப்புளித்து வர, பல் தொடர்பான வியாதிகள் மற்றும் ஈறு பாதிப்புகள் அகலும். மகிழம் காயை வாயில் இட்டு மென்று துப்ப, பல் ஆட்டம் நீங்கும்.

மகிழ மலர் எண்ணைய் :

மகிழ மலர்களில் இருந்து, வாசனை எண்ணை மற்றும், வாசனைப்பொடி தயார் செய்யப்படுகின்றன. மகிழ எண்ணையுடன் சந்தன எண்ணையைக் கலந்து, உயர் மதிப்பு மிக்க, வாசனை திரவியங்கள் தயாரிக்கிறார்கள். இவை மலர் மருத்துவத்தில், மன நல பாதிப்புகளை சரி செய்யும் அற்புத மருந்துகளாக பயன்படுகின்றன.

மகிழ மலர்களில் இருந்து தயாரிக்கப்படும் வாசனை எண்ணை, நறுமணமிக்க ஊதுவத்திகளில், சாம்பிராணி போன்ற வாசனைப் பொடிகளில் சேர்க்கப்படுகின்றன. மகிழ மலர்ப்பொடி, தலைவலி போன்ற பாதிப்புகளைப் போக்க, மூக்கின் வழியே உள்ளிழுக்கும் மருத்துவ மூக்குப்பொடியாக, பயன் தருகிறது.வயிற்றுப் போக்கு :

மகிழ மரப் பழங்களைச் சாப்பிட, வயிற்றுப்போக்கு, கட்டுப்படும். மகிழ மர விதைகளை அரைத்து, வெண்ணையில் கலந்து சாப்பிட, உடல் சூடு குறையும்.

தூக்கமின்மை :

மகிழ மரத்தின் அடியில் கயிற்றுக் கட்டிலில் படுத்து வர, மனதுக்கு இதமளிக்கும் குளுமையான சூழலில், ஆழ்ந்த உறக்கம் வரும். உடல் அசதிகள் மற்றும் உடல் சோர்வு நீங்கி, மனம் புத்துணர்வாகும், மேலும், மகிழ மரத்தின் காற்று, உடலின் இயக்கத்தை சீராக்கும் தன்மைமிக்கது. இரவில் தூக்கம் வராதவர்கள், கீழ்க்கண்ட முறையைப் பின்பற்ற, நல்ல உறக்கம் வரும்.


மகிழம்பூ தே நீர் :

சிறிது மகிழம் பூக்கள் அத்துடன் சிறிது கொத்தமல்லி சேர்த்து, நீரில் இட்டு காய்ச்சி, வடிகட்டி, அந்த நீரை, தினமும் இரவு உறங்கும் வேளையில் பருகி வர, நிம்மதியான ஆழ்ந்த உறக்கம், உண்டாகும்.

மரங்களைக் காப்பதே, நம் வாழ்வின் பேரின்பம்!

மரங்கள், பல ஆண்டுகள் கடந்தும், கால பருவ நிலை மாற்றங்கள் தாங்கியும், இந்த உலகையும், உலகோர் வாழ்வையும் காத்து நிற்கும் மூத்தோர் வரங்களாகத் திகழ்கின்றன.

இன்று ஓங்கி உயர்ந்து நிற்கும் மரங்களின் ஆரம்பநிலைகளில், நம் முன்னோர் அவற்றை எப்படி கண்ணும் கருத்துமாக பராமரித்திருப்பர், எத்தனை எத்தனை சிறுவர் சிறுமியர் அவற்றுக்கு தினமும் நீர் ஊற்றி, வீட்டில் ஒரு உறவு போல அன்புடனும் உணர்வுடனும் வளர்த்திருப்பர், அதையெல்லாம் மனதில் இருத்தி, அவை இன்று வளர்ந்து நிற்பதை, முன்னோரின் வாழ்த்துக்களாக நாம் எடுத்துக் கொண்டு, அந்த மரங்களைக் காத்து வந்தால், அதுவே, நம் வாழ்வின் பேரின்பமாகும்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.