மக்களே உஷார்! - Vegetarian Foods that are Actually Non-Veg

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,244
Likes
73,630
Location
Chennai
#1
நாம் சைவம் என்று நினைத்து சாப்பிடும் சில அசைவ உணவுகள் - மக்களே உஷார்!

ஒரு குறிப்பிட்ட தினங்களில் மக்கள் அசைவ உணவுகளை சாப்பிடமாட்டார்கள். நீங்கள் அப்படிப்பட்டவராயின், இக்கட்டுரையை கண்டிப்பாக படியுங்கள். ஏனெனில் நாம் சைவம் என்று நினைத்து சாப்பிடும் சில உணவுகள் உண்மையில் அசைவ உணவுகளே. என்ன நம்ப முடியவில்லையா?

உண்மையிலேயே நாம் கடைகளில் சைவ உணவுகள் என்று நினைத்து சாப்பிடும் உணவுப் பொருட்களில் மிருகங்களின் கொழுப்புக்கள் அல்லது இறைச்சிப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இங்கு அப்படி சைவ உணவுகள் என்று விற்கப்படும் அந்த அசைவ உணவுகள் எவையென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து இனிமேல் உஷாராக இருங்கள்.

சூப் இந்தியர்களுக்கு சூப் என்றால் பிடிக்கும். அதிலும் உங்களுக்கு வெஜிடேபிள் மேன்சௌ சூப் பிடிக்குமானால் கவனமாக இருங்கள். ஏனெனில் அது அசைவ உணவு தான். ஹோட்டல்களில் தயாரிக்கப்படும் சூப்புக்களில் சேர்க்கப்படும் சாஸ் மீனில் இருந்து தயாரிக்கப்படுபவை. எனவே அடுத்த முறை ஹோட்டல்களில் சைவ உணவை ஆர்டர் செய்யும் முன் யோசித்துக் கொள்ளுங்கள்.நாண் வட இந்தியாவில் நாண் மிகவும் பிரபலமான ஒன்று. தற்போது தென்னிந்தியாவிலும் பலரால் இது அதிகம் உண்ணப்படுகிறது. ஆனால் நீங்கள் சைவம் என்று நினைக்கும் இந்த நாண், உண்மையில் அசைவம் என்பது தெரியுமா? ஆம், நாண் மென்மையாக இருப்பதற்கு, அதை செய்வதற்கு தயாரிக்கப்படும் மாவில் முட்டை சேர்க்கப்படுகிறது.

சீஸ் தற்போது பல உணவுகளில் சீஸ் சேர்க்கப்படுகிறது. ஆனால் சீஸ் உண்மையில் ஓர் அசைவப் பொருள் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உண்மையில் சீஸில் விலங்குகளின் குடலில் இருந்து பெறப்பட்ட நொதிகள் கலக்கப்பட்டுள்ளது. 

selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,244
Likes
73,630
Location
Chennai
#2
எண்ணெய் பலரும் எண்ணெய்களெல்லாம் சைவம் என்று நினைக்கிறார்கள். ஆனால் சில எண்ணெய்கள் மற்றும் ஜூஸ்களில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ளது என்று சொல்வார்கள். இதற்கு அந்த எண்ணெயில் மீனில் இருந்து பெறப்பட்ட எண்ணெய் சேர்க்கப்பட்டிருப்பது தான். அதேப் போல் சில ஜூஸ்களில் வைட்டமின் டி அதிகம் உள்ளது என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அந்த ஜூஸில் செம்மறி ஆடுகளில் இருந்து பெறப்பட்ட லினோலின் சேர்க்கப்பட்டிருக்கும்.
சர்க்கரை சர்க்கரை எப்படி அசைவ உணவைச் சேரும் என்று யோசிக்கிறீர்களா? இயற்கையான கார்பன் பயன்படுத்தி சுத்திகரிக்கப்படும். சரி, இயற்கையான கார்பன் எதிலிருந்து பெறப்படுகிறது? கருகிய எலும்புகளில் இருந்து தான் கார்பன் பெறப்படுகிறது. இந்த கருகிய எலும்புகள் விலங்குகளுடையது. அப்படியெனில் நீங்கள் அன்றாடம் உட்கொள்ளும் சர்க்கரை சைவமா? அசைவமா? என்பதை நீங்களே கூறுங்கள்.

பீர் மற்றும் ஒயின் பீர் மற்றும் ஒயினை தயாரிப்பவர்கள், அதனை தெளிவுப்படுத்துவதற்கு மீன்பசைக்ககூழ் அல்லது மீனின் நீர்ப்பைகளைப் பயன்படுத்துவார்கள். அதிலும் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பீர் மற்றும் ஒயினில் மீன்பசைக்ககூழ் தான் பயன்படுத்தப்படுகிறது.

ஜெல்லி ஜெல்லி செய்வதற்கு முக்கிய பொருள் ஜெலட்டின். இது விலங்குகளில் இருந்து பெறப்படுகிறது. எனவே ஜெல்லி இனிப்பு பொருள் மட்டுமின்றி, அசைவப் பொருளும் கூட.

உருளைக்கிழங்கு சிப்ஸ் உங்களால் நம்ப முடியாது தான். இருந்தாலும் உருளைக்கிழங்கு சிப்ஸ் அசைவ உணவுப் பொருள். மேலும் நிறைய சிப்ஸ்கள் குறிப்பாக பார்பிக்யூ ப்ளேவரில் சிக்கன் கொழுப்பு சேர்க்கப்பட்டிருக்கும். எனவே அடுத்த முறை பாக்கெட் சிப்ஸ் வாங்கி சாப்பிடும் முன், அந்த பாக்கெட்டின் பின் குறிப்பிட்டுள்ள பொருட்களை சரிபாருங்கள்.
 
ponschellam

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Mar 8, 2013
Messages
7,037
Likes
29,954
Location
CVP
#3
அக்கா ..............அப்ப என்ன தான் சாப்பிடுவது ............மீ பாவம் ல
 
selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,244
Likes
73,630
Location
Chennai
#4
அக்கா ..............அப்ப என்ன தான் சாப்பிடுவது ............மீ பாவம் ல
இதெல்லாம் பெரிசா எடுத்துக்காம உள்ளே தள்ளுங்க!!!!!
 
Mirage

Commander's of Penmai
Joined
Sep 17, 2014
Messages
1,078
Likes
6,580
Location
தார் பாலைவனம்
#5
சைவமே அது பொய்யடா
அசைவமே அதில் மெய்யடா
அசைவத்திலும் மெய்யென்பது பொய்யடா
இதை முற்றும் அறிந்தவன் இங்கே எவனடா?
 
selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,244
Likes
73,630
Location
Chennai
#6
பரிமாறுபவரையும் சமைப்பவரையும் நம்பி சாப்பிடவேண்டியதுதான்!!!!!!
 
RathideviDeva

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Sep 2, 2014
Messages
4,126
Likes
14,733
Location
California
#7
அக்கா ..............அப்ப என்ன தான் சாப்பிடுவது ............மீ பாவம் ல
ஏன் பொன்ஸ் சிஸ்,
செல்வி அக்கா என்ன எல்லா சாப்பாட்டையுமா சொல்லிட்டாங்க. ஒரு நாலஞ்சு தானே சொன்னாங்க. அதுக்கேவா இம்புட்டு நொந்து போவீங்க.

செல்வி சிஸ்,
பிரெஞ்சு பிரைஸ் தொட்டுக்க சாப்பிடற Mayonnaiseல கூட முட்ட இருக்கு.

இங்க எல்லாத்துக்கும் மாற்று இருக்கு, vegan diet இங்க கொஞ்சம் பிரபலமாகிட்டு வர்ரனால. இங்க உணவகத்துல கேட்டா கூட மறைக்காம சொல்லிடுவாங்க. vegan dietல பால், சீஸ், வெண்ணை , முட்டை...... இப்படி விலங்குல இருந்து வந்த எதுவுமே கிடையாது.
 
ponschellam

Guru's of Penmai
Penman of Penmai
Blogger
Joined
Mar 8, 2013
Messages
7,037
Likes
29,954
Location
CVP
#8
ஏன் பொன்ஸ் சிஸ்,
செல்வி அக்கா என்ன எல்லா சாப்பாட்டையுமா சொல்லிட்டாங்க. ஒரு நாலஞ்சு தானே சொன்னாங்க. அதுக்கேவா இம்புட்டு நொந்து போவீங்க.

செல்வி சிஸ்,
பிரெஞ்சு பிரைஸ் தொட்டுக்க சாப்பிடற Mayonnaiseல கூட முட்ட இருக்கு.

இங்க எல்லாத்துக்கும் மாற்று இருக்கு, vegan diet இங்க கொஞ்சம் பிரபலமாகிட்டு வர்ரனால. இங்க உணவகத்துல கேட்டா கூட மறைக்காம சொல்லிடுவாங்க. vegan dietல பால், சீஸ், வெண்ணை , முட்டை...... இப்படி விலங்குல இருந்து வந்த எதுவுமே கிடையாது.
நான் சாப்பிடுற எல்லாம் வந்துடுச்சு ............இலை ,தழை தான் வரல ..............அதையே மருந்தா நினைச்சு முழிங்கிடுவேன்
 
selvipandiyan

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Nov 2, 2011
Messages
36,244
Likes
73,630
Location
Chennai
#9
ஏன் பொன்ஸ் சிஸ்,
செல்வி அக்கா என்ன எல்லா சாப்பாட்டையுமா சொல்லிட்டாங்க. ஒரு நாலஞ்சு தானே சொன்னாங்க. அதுக்கேவா இம்புட்டு நொந்து போவீங்க.

செல்வி சிஸ்,
பிரெஞ்சு பிரைஸ் தொட்டுக்க சாப்பிடற Mayonnaiseல கூட முட்ட இருக்கு.

இங்க எல்லாத்துக்கும் மாற்று இருக்கு, vegan diet இங்க கொஞ்சம் பிரபலமாகிட்டு வர்ரனால. இங்க உணவகத்துல கேட்டா கூட மறைக்காம சொல்லிடுவாங்க. vegan dietல பால், சீஸ், வெண்ணை , முட்டை...... இப்படி விலங்குல இருந்து வந்த எதுவுமே கிடையாது.
இங்கே கேட்டாலும் சொல்ல மாட்டாங்க, என்னென்னெ கலந்துருக்குன்னு யாருக்குமே தெரியாது!!!
 
Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.