மஞ்சள் பூசணிக்காய் குழம்பு - Yellow Pumpkin Kulambu

smahi

Guru's of Penmai
Joined
Apr 9, 2012
Messages
6,163
Likes
14,022
Location
Toronto
#1
மஞ்சள் பூசணிக்காய் குழம்புதேவையான பொருட்கள்:-
பெரிய துண்டுகளாக நறுக்கிய

பூசணிக்காய் --------------------- 1 கப்
வெங்காயம் ---------------------- 1
பெரிய தக்காளி -----------------1
இஞ்சி பூண்டு விழுது ------- 1 டீஸ்பூன்
புளி ---------------------------------- சிறிய எலுமிச்சம்பழ அளவு.
மஞ்சள் தூள் -------------------- 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் ------------------1 டீஸ்பூன்
தனியா தூள் -------------------- 3/4 டீஸ்பூன்
அரிசி மாவு ---------------------- 1 டீஸ்பூன்
வெல்லம் ------------------------ 1/4டீஸ்பூன்(விருப்பப்பட்டால் )
உப்பு தேவையான அளவு.


தாளிக்க:-
நல்லெண்ணெய் ---------- 4 டேபிள் ஸ்பூன்

கடுகு --------------------------- 1/2 டீஸ்பூன்
வெந்தயம் ------------------- 1/4 டீஸ்பூன்
கடலை பருப்பு ------------ 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் ------------- 1/4டீஸ்பூன்
கறிவேப்பில்லை சிறிதளவு.


செய்முறை:-
வெங்காயம் ,தக்காளி இவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
புளியை தண்ணீர் விட்டு கரைத்து வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கடுகு வெடித்ததும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி நறுக்கி வைத்துள்ள வெங்காயம் தக்காளி சேர்த்து மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு சேர்த்து தக்காளி பழம் குழையும் வரை வதக்கி நறுக்கி வைத்துள்ள பூசணிக்காய் துண்டுகளையும் சேர்த்து மீண்டும் வதக்கவும்.
பின் அதில் மிளகாய் தூள் ,தனியா தூள் சேர்த்து நன்றாக கலந்து புளி கரைசலை ஊற்றி அரிசி மாவை சிறிதளவு நீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கரைத்து அதனையும் குழம்பில் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு விருப்பபட்டால் வெல்லத்தையும் சேர்த்து கலந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும்.
சூடான சாதத்தில் சிறிது நெய் விட்டு கலந்து புளிப்பும் ,இனிப்பும் கலந்த வித்யாசமான சுவையுடன் கூடிய இந்த பூசணிக்காய் குழம்பை ஊற்றி கூட்டு, அப்பளம் (அ ) வடாம் இவற்றை சைட்டிஷ் ஆகா வைத்து சாப்பிட சூப்பர் சுவைதான்.
குறிப்பு :- புளிப்பு ,உப்பு ,காரம் இவற்றை அவரவர் ருசிக்கு ஏற்றவாறு கூட்டியோ (அ ) குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம்.
 

Attachments

Uma manoj

Guru's of Penmai
Joined
Feb 28, 2012
Messages
5,426
Likes
18,420
Location
Chennai
#5
அருமையான ரெசிப்பி மகி...நானும் ட்ரை பண்ணி பார்க்கிறேன்..தித்திப்பா இருக்குமே பூசனிக்காய் என்று நினைத்தேன்...செஞ்சு பார்க்கலாம்..புதுவிதமாவும் இருக்கு..தேங்க்ஸ்..
 

repplyuma

Guru's of Penmai
Joined
Mar 16, 2012
Messages
6,240
Likes
29,276
Location
Canada
#7
நன்றி மகேஸ்வரி ..நான் முயற்சி செய்றேன் ..

மஞ்சள் பூசணி குளிர்ச்சியா ..எனக்கு sinus பிரச்சனை இருக்கு ..சாப்பிடலாமா???
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.