மஞ்சள் பூசணிக்காய்

vidhyalakshmi15

Commander's of Penmai
Joined
Oct 12, 2017
Messages
1,634
Likes
991
Location
Switzerland
#1
[h=1](பரங்கிக்காய்)[/h]
மார்கழியை நினைவுபடுத்துகிற முக்கியமான அடையாளங்களில் ஒன்று கோலங்களை அலங்கரிக்கிற பரங்கிப்பூ. அதிகாலையில் வாசல் தெளித்து மெழுகி, பெரிய பெரிய கோலங்கள் இட்டு, நடுவில் சாணம் வைத்து, அதில் பரங்கிப்பூவை செருகி வைப்பது வழக்கம். சாணம் என்பது கிருமிநாசினி. அதன் நடுவில் வைக்கப்படுகிற மஞ்சள்நிற பரங்கிப்பூவானது மங்கல அடையாளம். மலர்ச்சியை வரவேற்கும் வழி என்பது நம்பிக்கை. பரங்கிப்பூவைப் போலவே பரங்கிக்காய்க்கும் நல்ல குணங்கள் உள்ளன. ‘மஞ்சள் பூசணி’ என்று அழைக்கப்படுகிற பரங்கிக்காயின் அருமை பெருமைகளை அள்ளி வழங்குகிறார் டயட்டீஷியன் ஷைனி சுரேந்திரன்.

என்ன இருக்கிறது? (100 கிராம் அளவில்)

ஆற்றல் - 26 கிலோ கலோரி
புரதம் - 1 கிராம்
கொழுப்பு - 0.1 கிராம்
கொலஸ்ட்ரால் -0 கிராம்


மலையாளிகள் சமூகத்தில் ‘மஞ்சள் பூசணிக்காய் எரிசேரி’ என்பது மிகவும் பிரபலமான ஓர் உணவு. வெளிர் ஆரஞ்சு நிறமுள்ள இந்த பதார்த்தம் பண்டிகை நாட்களின் ஸ்பெஷல் தயாரிப்பு. இது மிகவும் சுவையாக இருக்கும். பிராமண வீடுகளில் தயாரிக்கப்படும் பரங்கிக்காய் சாம்பார் மிகவும் சுவை நிரம்பியது. இந்த காயின் வெளிர் ஆரஞ்சு நிறம் பீட்டா கரோட்டீன் கொண்டது. இது நம் உடலுக்குத் தேவைப்படும் போது கல்லீரலுக்கு வைட்டமின் ஏ-வாக மாற்றிக் கொடுக்கும்.

தோற்றம்

• பரங்கிக்காயின் பூர்வீகம் வட அமெரிக்கா. பரங்கி என்பது ஒரு தாவரத்தின் பெயர். சமையலுக்கு மட்டுமல்ல... விதையாகவும் எண்ணெயாகவும் கூட இது பயன்படுகிறது.

குணங்கள்

• பரங்கி பரவலாக விளையக்கூடிய ஒரு காய். இது அளவிலும் நிறத்திலும் வடிவத்திலும் வேறுபட்டது. மெகா சைஸ் பரங்கிக்காய் 4-6 கிலோ எடை கூட இருக்கும். இது பொதுவாக ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்கு இப்படியொரு நிறத்தைக் கொடுப்பது, அதன் தோல் மற்றும் உள்ளே உள்ள சதைப் பகுதி. இதன் தோல் பகுதி அழுத்தமாகவும் எடையற்றதாகவும் இருக்கும்.

• ஆழமான இதன் உள் பகுதியில், சின்ன சின்ன வெள்ளை நிறமுடைய விதைகள் ஒன்றோடு ஒன்று வலைபோலப் பின்னிப் பிணைந்திருக்கும்.

பயன்கள்

• மிகக்குறைவான கலோரி கொண்ட காய் இது. 100 கிராம் காய் 26 கலோரிகள் கொண்டது. இதில் கொழுப்பும் (Fat), கொலஸ்ட்ராலும் இல்லை. இதில் செரிமானத்துக்கான நார்ச்சத்து, ஆன்டிஆக்சிடென்ட், தாதுச்சத்து மற்றும் வைட்டமின் ஆகியவற்றைக் கொண்டது. குறிப்பாக இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை அதிகம்.

• வைட்டமின் ஏவை அபரிமிதமாகக் கொண்ட இது, உடலுக்குத் தேவையான இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட்டாக செயல்படுகிறது. சரும ஆரோக்கியத்தையும் சளி சவ்வுப் பகுதிகளையும் (Mucous Membrances) பாதுகாக்கிறது. பார்வைத்திறன் மேம்படவும் உதவுகிறது.

• இது ஆல்ஃபா, பீட்டா கரோட்டின், லூட்டின் மற்றும் ஸியாக்ஸான்தின் ஆகியவற்றைக் கொண்டது.

• Zeaxanthin என்பது இயற்கையான ஆன்ட்டி ஆக்சிடென்ட். இது வயது முதிர்ந்த காலத்தில் ஏற்படும் தசை நோய்களைத் தடுக்கிறது.

• பரங்கியில் கெராட்டினாயிட்ஸ் (Carotenoids) அதிகம் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவுகிறது.

• ஃபோலேட், நியாசின், வைட்டமின் பி6, தையாமின் மற்றும் பான்டோதெனிக் அமிலம் போன்ற பி-காம்ப்ளெக்ஸ் வைட்டமின்கள் இதில் அதிகம்.

• தாமிரம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவற்றை சிறந்த அளவில் உள்ளடக்கிய காய்.

• பரங்கி விதைகளில் நார்ச்சத்தும், ஒற்றை - நிரம்பாத கொழுப்பு அமிலமும் (Monounsaturated fatty acid) உள்ளன. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் ட்ரிப்டோஃபன் எனப்படுகிற அமினோ அமிலம் உள்ளது. 1 டீஸ்பூன் பரங்கி விதையை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது முழு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம். இதில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து மலச்சிக்கலை விரட்டுகிறது.

• பரங்கியில் நமது சருமத்துக்குத் தேவையான நல்ல கொழுப்பு அமிலமும் உள்ளது. சருமப் பளபளப்புக்குக் காரணமான வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் மக்னீசியமும் உள்ளது.

• பரங்கியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சருமத்தில் உள்ள செல்கள் புதுப்பிக்கப்படுவதுடன் மேலும் பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப் போராடவும் செய்கிறது. பரங்கியில் உள்ள வைட்டமின் ஈ, சருமக் குறைபாடுகளை சரி செய்கிறது.

• பரங்கியில் எல்லா விதமான மருத்துவ குணங்களும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் வாயு தொந்தரவு, செரிமான கோளாறு மற்றும் அல்சர் ஆகியவையும் சரி செய்யப்படுகிறது.

எப்படித் தேர்ந்தெடுப்பது? பத்திரப்படுத்துவது?

• பரங்கி வருடம் முழுவதும் எளிதாக கிடைக்கக் கூடியது. அது வெட்டுப்பட்டுள்ளதா, நிறம் மாறுபட்டுள்ளதா, ஏதேனும் கோடுகள் உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

• வெட்டி வைக்கப்பட்ட பரங்கியை குளிர்பதனப் பெட்டியில் வைத்தால் சில நாட்கள் வரை பாதுகாக்கலாம்.
 

sumitra

Silver Ruler's of Penmai
Registered User
Blogger
Joined
Jul 26, 2012
Messages
25,716
Likes
35,091
Location
mysore
#2
Coimbatore side they call it as Arasaanikkai. Very good. Thank you
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.