மஞ்சள் மகிமை

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
மஞ்சள் மகிமை


Turmeric latte எனும் மஞ்சள் மற்றும் மிளகு கலந்த பால் அமெரிக்க ரெஸ்டாரன்டுகளின் உணவுப் பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது. சளித்தொந்தரவுகளுக்கு உகந்ததாக நிரூபிக்கப்பட்டு அது விற்கப்படுகிறது.

மஞ்சள் மற்றும் மிளகை காலம் காலமாக நமது சித்த மருத்துவத்திலும், உணவுகளிலும் சேர்த்து வரும் நாம்தான் இதற்கு முன்னோடிகள். தங்கப்பால் என்றும் அழைக்கப்படும் மஞ்சள் மற்றும் மிளகு கலந்த பாலின் மகத்துவம் குறித்து சித்த மருத்துவர் திருநாராயணனிடம் கேட்டோம்...

‘‘சித்த மருத்துவம் மனித உடலை வாதம், பித்தம், கபம் என மூன்று வகையாகப் பிரிக்கிறது. அண்டத்தில் இருப்பதுதான் பிண்டத்திலும், பிண்டத்தில் இருப்பதுதான் அண்டத்திலும் என்பதுவே சித்த மருத்துவத்தின் கூற்று. அதன்படி ஐம்பூதங்களோடு நமது உடலைத் தொடர்புபடுத்திக் கொள்ள முடியும். காற்றும் ஆகாயமும் வாதம், நெருப்பு பித்தம், மண்ணும் நீரும் கபம். இதன் அடிப்படையில் பாலில் உள்ள லாக்டோஸ் எனும் இனிப்புச்சுவை கபத்தைப் பெருக்கக்கூடியது.

உணவுப் பொருட்களின் தன்மையை சத்துவகுணம், ரஜோதகுணம், தமோகுணம் என மூன்றாக பிரிக்கலாம். பசும்பால் மற்றும் வெள்ளாட்டுப்பால் சத்துவகுணம் எனும் நல்ல குணம் கொண்டது. எருமை மாட்டுப்பால் தமோகுணம் எனும் மந்த நிலையை ஏற்படுத்தக்கூடிய உணவாகும்.

‘பதார்த்த குண சிந்தாமணி’ எனும் சித்த மருத்துவ நூலில் அனைத்து வகையான பால்களுக்கும் உண்டான தன்மை கூறப்பட்டிருக்கிறது. சித்த மருத்துவத்தில் காராம்பசுவின் பால் நோயாளிகளின் மருந்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது.

ஏனெனில் இதன் பால் குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்கு எளிமையாக செரிக்கும். மஞ்சள் காமாலை வந்தவர்களுக்கான மருந்தை வெள்ளாட்டுப்பாலில் கொடுக்கச் சொல்வார்கள். மருத்துவ குணம்மிக்க பாலின் செரிமானத்தன்மை அதிகரிக்கவும், இனிப்புச்சுவையின் காரணமாக அதிகரிக்கும் கபத்தை கட்டுப்படுத்துவதற்காகவும் பாலில் மஞ்சள் மற்றும் மிளகு சேர்க்கப்படுகிறது.

வறட்டு இருமல் இருக்கும்போது அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடலாம். பாலில் உள்ள மெலட்டனின் எனும் பொருளுக்கு நல்ல உறக்கத்தை உண்டு பண்ணுகிற தன்மை இருக்கிறது. பாலில் புரதம், கொழுப்பு, மாவுச்சத்து ஆகியவை இருக்கின்றன’’ என்கிறார் திருநாராயணன்.
 

Similar threads

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.