மண் செய்யும் மாயம்!

chan

Ruler's of Penmai
Joined
Mar 26, 2012
Messages
17,654
Likes
18,539
Location
chennai
#1
மண் செய்யும் மாயம்!

ரிலாக்ஸ் ப்ளீஸ்!

சிறியவர் முதல் பெரியவர் வரை மன அழுத்தத்துக்கு உள்ளானவர்களே மக்கள் தொகையில் பெரும் பகுதி வகிக்கின்றனர். இதுவரை மருந்துகளே இதற்கான தீர்வாக இருந்தன. இம்மருந்துகள் மன அழுத்தத்தைக் குறைத்தாலும், பக்க விளைவுகளை உண்டாக்குபவை. பிறகு? மன அழுத்தத்தை இயற்கையாக எப்படி சரி செய்வது?இயற்கை வைத்தியம் என்பது காலம் காலமாக நாம் பின்பற்றக்கூடியது. நம் பெரியோர் கடைபிடித்த சில விஷயங்களுக்கு காரணம் தெரியாமல் இருக்கலாம். ஆனால், அதில் ஏதாவது பலன் இருக்கும். நம் மன அழுத்தத்தை போக்கும் மருந்து மண்ணில் உள்ளது என்றால் நம்புவீர்களா? ஆம்... இது நம் வீட்டில் உள்ள தோட்டத்தில்தான் புதைந்து உள்ளது!


Mycobacterium vaccae என்ற பாக்டீரியாவை சமீபத்தில் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது மாட்டுச் சாணத்தில் கண்டறியப்பட்டதால், அதை தழுவி பெயரிடப் பட்டுள்ளது. இவ்வகை பாக்டீரியா நரம்பணுக்களில் புகுந்து, மனச்சோர்வுக்கு எடுத்துக் கொள்ளும் மருந்து ஏற்படுத்தும் அதே மாற்றத்தை உண்டுபண்ணும் திறமை பெற்றது. இவை Serotonin என்னும் வேதிப்பொருளை நம் உடலில் தூண்டி எழுப்பச் செய்கிறது, இதனால் மனதில் அமைதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

Serotonin குறைவதாலேயே மன அழுத்தம், படபடப்பு உண்டாகிறது. இவ்வகை பாக்டீரியாவை எலிகளுக்கு ஊசி மூலமாகச் செலுத்தியும், உட்கொள்ள வைத்தும் ஆராய்ந்ததில், இவை அறிவாற்றலை பெருகச் செய்கிறது என்றும், படபடப்பைக் குறைத்து, செய்யும் செயல்களில் அதிக கவனத்தை ஏற்படுத்துகிறது என்றும் கண்டறிந்துள்ளனர்.சிலருக்கு தோட்ட வேலை செய்வது அதிக சந்தோஷத்தை அளிப்பதைப் பார்த்து இருப்போம்.

அது நல்ல உடற்பயிற்சி என்றாலும், அந்த மகிழ்ச்சிக்குக் காரணம் மேற்கூறிய பாக்டீரியாவே. நம் கைகளால் மண்ணைத் தொடும்போது இந்த பாக்டீரியாக்கள் நாம் சுவாசிக்கும் காற்று மூலமாகவோ, ஏதாவது வெட்டுக் காயம் மூலமாகவோ நம் ரத்தத்தில் கலந்து விடுகிறது. பிறகு செரட்டோனின் அளவை அதிகரித்து மனதுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்கள் கூட, சிறிய மண்சட்டிகளில் / பேக்குகளில் செடி வளர்த்து, தினமும் கைகளால் மண்ணைக் கிளறுவதன் மூலம் இப்பயனை பெறலாம்!சிலருக்கு தோட்ட வேலை செய்வது அதிக சந்தோஷத்தை அளிப்பதைப் பார்த்து இருப்போம். அது நல்ல உடற்பயிற்சி என்றாலும், அந்த மகிழ்ச்சிக்குக் காரணம் மேற்கூறிய பாக்டீரியாவே!
 
Last edited:

ahilanlaks

Ruler's of Penmai
Joined
Mar 16, 2015
Messages
12,408
Likes
20,875
Location
Chennai
#2
Nice sharing. Good suggestions for stress relief. Thanks ji
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.