மதியம் தூங்கணும்

Ganga

Minister's of Penmai
Registered User
Blogger
Joined
Jun 1, 2011
Messages
3,271
Likes
2,756
Location
Chennai
#1
மதிய நேரத்தில் தூங்கினால், உடல் எடை கூடும் என்று சொல்லப்படுகிறது. உண்மையா இது? வயிறு முட்ட உணவு உண்ட பின், கும்பகர்ணன் போல, அடித்தால் கூட எழுந்து கொள்ளாத அளவுக்குத் தூங்கினால் ஆபத்து தான். ஆனால், குட்டித் தூக்கம் நல்லது என, கண்டறியப்பட்டுள்ளது. நம் உடலே, தினமும் இரண்டு வேளைக்குத் தூங்கும் பழக்கம் கொண்டது தான். இரவு நேரத்தில், குறைந்தது ஆறு மணி நேரம் முதல் எட்டு மணி நேரம் வரை தூங்க வேண்டும். காலை முதல் மதியம் வரை, உடல் அல்லது மூளைக்குக் கடுமையான வேலை கொடுக்கும்போது, சற்று நேரம் ஆசுவாசப்படுத்திக் கொள்வது போல், மூளையோ, உடலோ தானாகவே ஓய்வு கேட்கும்.

அந்த நேரத்தில், வேலைகளை உடனே நிறுத்தி விட்டு, எல்லாவற்றையும் மறந்து, அரை மணி நேரம் கண்ணயர்ந்து விட்டால், உடலும், மூளையும் மீண்டும் சுறுசுறுப்பாகி விடுகின்றன என, மருத்துவர்கள் கூறுகின்றனர். அரை மணி நேரத் தூக்கம், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என நீடித்தால், உங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.
 

Kavibhanu

Commander's of Penmai
Joined
Feb 27, 2011
Messages
1,952
Likes
1,333
Location
Trichy
#2
உண்மைதான் கங்கா, உண்டபின் தூக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று பழமொழி சொல்வார்களே , அது போல பத்து நிமிடதிலருந்து, அரை மணி நேர தூக்கம் நாம் மூளைக்கு சற்று ஓய்வையும், உடலுக்கு சுறுசுறுப்பையும் தருகிறது. இரவு நேர தூக்கம் சரியாக இல்லாவிடினும் மதிய நேரத்தில் சிறிது ஓய்வெடுத்தால் நாம் உடல்நிலை சமன்பட்டுவிடும், சோர்வை தராது. அதிக நேரம் தூங்கி விடுவோமோ என்று எண்ணுவோர் alarm வைத்து விட்டு பத்து நிமிடம் தூங்கலாம். நல்லதொரு தகவலை தந்த கங்காவிற்கு பாராட்டுக்கள்.
 
Joined
May 26, 2011
Messages
87
Likes
50
Location
Chennai
#3
சரி தான்! மிகவும் நல்ல பகிர்வு..
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.