மந்திரமும் மகிமையும் !!

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,117
Likes
3,169
Location
India
#51
நலம் சேர்க்கும் நட்சத்திர காயத்ரி மந்திரம்

1526622753803.png

மந்திரங்களில் உயர்ந்தது காயத்ரி மந்திரம் என்று புராணங்கள் சொல்கின்றன. அத்தகைய காயத்ரி மந்திரங்களை மக்களுக்குத் தந்தவர் விசுவாமித்திரர். ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒவ்வொரு காயத்ரி மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரங்களை உச்சரித்து வழிபாடு செய்தால் அனைத்து நன்மைகளையும் அடையலாம்.

தெய்வங்களைப் போலவே, நட்சத்திரங்களுக்கும் கூட காயத்ரி மந்திரங்கள் இருக்கின்றன. அவரவர் ஜாதகப்படி, எந்த நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறோமோ, அந்த நட்சத்திரத்திற்கு உரிய காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபாடு செய்து வந்தால் உரிய பலன்களைப் பெறலாம்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு உரிய காயத்ரி மந்திரங்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

அஸ்வினி

ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

பரணி

ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்

கார்த்திகை

ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

ரோகிணி

ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹிணி ப்ரசோதயாத்

மிருகசீரிஷம்

ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்

திருவாதிரை

ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்

புனர்பூசம்

ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்

பூசம்

ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்

ஆயில்யம்

ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்

மகம்

ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மக ப்ரசோதயாத்

பூரம்

ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்

உத்திரம்

ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்

ஹஸ்தம்

ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்

சித்திரை

ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்

சுவாதி

ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்

விசாகம்

ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்

அனுஷம்

ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்

கேட்டை

ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்

மூலம்

ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்

பூராடம்

ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்

உத்திராடம்

ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்

திருவோணம்

ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்

அவிட்டம்

ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்

சதயம்

ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்

பூரட்டாதி

ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்

உத்திரட்டாதி

ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோத யாத்

ரேவதி

ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#52
பலன் தரும் ஸ்லோகம்!


தலைவலி மருத்தீடு காமாலை சோகைசுரம்
விழிவலி வறட்சூலை காயாசு வாசம்வெகு
சலமிகு விஷப்பாக மாயாவி காரபிணி ...... யணுகாதே
தலமிசை யதற்கான பேரோடு கூறியிது
பரிகரி யெனக்காது கேளாது போலுமவர்
சரியும்வ யதுக்கேது தாரீர்சொ லீரெனவும் ...... விதியாதே
உலைவற விருப்பாக நீள்காவின் வாசமலர்
வகைவகை யெடுத்தேதொ டாமாலி காபரண
முனதடி யினிற்சூட வேநாடு மாதவர்க ...... ளிருபாதம்
உளமது தரித்தேவி னாவோடு பாடியருள்
வழிபட எனக்கேத யாவோடு தாளுதவ
உரகம தெடுத்தாடு மேகார மீதின்மிசை ...... வரவேணும்
அலைகட லடைத்தேம காகோர ராவணனை
மணிமுடி துணித்தாவி யேயான ஜானகியை
அடலுட னழைத்தேகொள் மாயோனை மாமனெனு ...... மருகோனே
அறுகினை முடித்தோனை யாதார மானவனை
மழுவுழை பிடித்தோனை மாகாளி நாணமுனம்
அவைதனில் நடித்தோனை மாதாதை யேஎனவும் ...... வருவோனே
பலகலை படித்தோது பாவாணர் நாவிலுறை
யிருசர ணவித்தார வேலாயு தாவுயர்செய்
பரண்மிசை குறப்பாவை தோள்மேவ மோகமுறு ...... மணவாளா
பதுமவ யலிற்பூக மீதேவ ரால்கள் துயில்
வருபுனல் பெருக்காறு காவேரி சூழவளர்
பழநிவ ருகற்பூர கோலாக லாவமரர் ...... பெருமாளே.

(திருப்புகழில் உள்ள இத்துதியை பாராயணம் செய்து வந்தால் அனைத்து நோய்களும் சூரியனைக் கண்ட பனி போல் விலகும்,.)'
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#53
குருவின் திருவருள் கிட்ட..

1526702530372.png

அனந்த ஸம்ஸார ஸமுத்ரதாரா
நௌகாயி தாப்யாம், குருபக்தி தாப்யாம்
வைராக்ய ஸாம்ரஜ்யத பூஜநாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம்

பொருள்:

எல்லையற்ற வாழ்க்கையெனும் கடலைத் தாண்டுவிக்கும் படகாயும், குருவிடம் பக்தியைத் தரக்கூடியதாகவும், வைராக்யம் என்ற சாம்ராஜ்யத்தைக் கொடுக்கிறதாயும், பூஜிக்கத் தகுந்ததாயும் உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!

(இதை பிரதி தினமும் பாராயணம் செய்வதால் குரு பக்தி கைகூடும். குருவின் அருளைப் பெற்று, இகபர லாபங்களை அடையலாம்.)
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,117
Likes
3,169
Location
India
#54
குடும்பத்தில் குழப்பங்கள் தீர, நிம்மதியுடன் வாழ...

1526722149202.pngபலன் தரும் மந்திரம் : (குடும்பத்தில் குழப்பங்கள் தீர, நிம்மதியுடன் வாழ...)

2013-12-11@ 16:00:48

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்; வைகலும்
எண்ணில், நல்லகதிக்கு யாதும் ஓர் குறைவு இலை;
கண்ணில் நல்லஃது உறும்; கழுமல வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

திருஞானசம்பந்தர்.

பொதுப்பொருள்: கழுமல வளநகர் எனும் சீர்காழியில் ஸ்திரசுந்தரியோடு திருவருள்புரியும் தோணியப்பரைப் பணிவோமானால், மண்ணில் சந்தோஷமாக நிம்மதியாக வாழலாம். மனதிலும், சிந்தையிலும், சொல்லிலும் நற்கதிக்கு ஒரு குறைவும் வாராது. கண்களில் நல்லதே தென்படும்.

(இத்துதியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பாராயணம் செய்தால் குருவருளோடு திருவருளும் சேர்ந்து குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் எல்லாம் தீரும்; நிம்மதி சூழும்.)
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,117
Likes
3,169
Location
India
#55
சர்வ மங்களங்களும் உண்டாக.
1526883324044.png

ஆதெள ராம தபோவனாதி கமனம்
ஹத்வா ம்ருகம் காஞ்சனம்
வைதேஹி ஹரணம் ஜடாயு மரணம்
ஸுக்ரீவ ஸம்பாஷணம்
வாலீ நிக்ரஹணம் ஸமுத்ரதரணம்
லங்காபுரி தஹனம் பச்சாத் ராவண
கும்பகர்ணஹனனம் ஏதத்திதி ராமாயணம்.
ஏக ஸ்லோகீ ராமாயணம்

பொதுப் பொருள்:

முதலில் ராமர் கானகம் சென்று சீதை ஆசைப்பட்டதால் பொன் மானைக் கொன்று ராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடி மரணிக்கும் தருணத்தில் இருந்த ஜடாயுவிற்கு மோட்சமளித்து சுக்ரீவனை நண்பனாய்க் கொண்டு, வாலியை வதைத்து அனுமனால் இலங்கையை அடைந்து ராவண கும்பகர்ணனை அழித்தார். இதுவே சுருக்கமான ராமாயணம்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,117
Likes
3,169
Location
India
#56
லலிதா நவரத்தின மாலை பாடல்

1526968233747.png

ஆக்கும் தொழில் ஐந்தன் ஆற்ற நலம்
பூக்கும் நகையாள் புவனேஸ்வரி பால்
சேர்க்கும் நவரத்தின மாலையினைக்
காக்கும் கணநாயக வாரணமே

ஐந்து அறங்களையும் கடைமையாக செய்பவளும், நலத்தினை தன் புன்னகையால் பேணுபவளுமாகிய புவனேஸ்வரி அன்னையின் மீது பாடப்படுவது இந்த நவரத்தின மாலை நூல்.

இந்த நூல் நன்கு அமைய கணங்களின் நாயகனாகிய கணபதி காக்க வேண்டும்.
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

1. வைரம்

கற்றும் தெளியார் காடே கதியாய்
கண்மூடி நெடுங்கன வானதவம்
பெற்றும் தெளியார் நிலையென்னில் அவம்
பெரும் பிழையேன் பேசத்தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க்கு எமனாய் எடுத்தவளே
வற்றாத அருட்சுனையே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

கற்க வேண்டிய நூல்கள் பலவற்றை பிழையில்லாமல் கற்றவர்கள் தெளிவு பெறவில்லை. உலக இன்பங்களை ஒதுக்கிவிட்டு காட்டிற்குச் சென்று கண்மூடி தவத்தினைச் செய்வதே கதி என்று இருந்து தவலிமை பெற்றவர்களும் தெளிவு பெறவில்லை. அவர்கள் நிலை இப்படி இருக்கும் போது மிகத்தாழ்ந்த, பிழைகள் புரிந்தவர்கள் ஏதாவது பேச முடியுமா?. மிகவலிமையான பகைவர்களை அழிக்க வயிரத்தால் செய்த படைவாளினை எமனாக பற்றி எடுத்தவளான அன்னையே! உன்னை வணங்கும் அடியவர்களுக்கு எல்லாம், வற்றாத சுனையைப் போல அருள்புரியும் அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

2. நீலம்

மூலக் கணலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத்திரு மேனியிலே நினைவாய்
நினைவெற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மூலாதாரம் என்னும் சக்கரத்தில் ஒளிரும் குண்டலினி என்னும் சக்தியே உன்னை சரணடைகிறேன்.முதலும் முடிவும் ஆனவளே உன்னை சரணடைகிறேன். அழகியே கிளி போன்றவளே உன்னைச் சரணடைகிறேன். குன்றாத ஒளியின் கூட்டாமாகத் திகழ்பவளே உன்னைச் சரணடைகிறேன். உன்னுடைய நீல நிறமான திருமேனியை நினைத்து தியானித்து மற்ற நினைவுகள் இன்றி அடியேன் நின்றேன். பாலா திரிபுரா சுந்தரி எனும் வாலை குமரி எனக்கு காட்சி அளிப்பாய். அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

3. முத்து

முத்தே முத்தொழில் ஆற்றிடவே
முன்னிற்று அருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவாசினியே சரணம்
தத்தேறிய தனயன் தாய் நீ
சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறு தத்திக்கினை வாழ்வனையேன்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்று தொழில்களையும் குறைவறச் செய்யும் வண்ணம் கடவுளர்களுக்கு அருள் செய்த முதலான தெய்வமே, முத்தினைப் போன்றவளே உன்னை சரணடைகிறேன். எல்லாவற்றிற்கும், எல்லோருக்கும் காரணமானவளே உன்னைச் சரணடைகிறேன்.
வேதங்கள், உபநிடதங்கள் என எல்லாவற்றிலும் நிலைத்து வாழ்பவளே உன்னைச் சரணடைகிறேன். நீயே தஞ்சம் என்று சரணடைந்த உன் மகனான எனக்கு தாயாகிய நீ என்றும் அழியாத வரத்தைக் கொடு. மத்தில் அகப்பட்ட தயிரைப் போல் அங்கும் இங்கும் அலையும் வாழ்வு இல்லாமல் என்றும் அழியாத வாழ்வை எனக்கு அருள வேண்டும். அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

4. பவளம்

அந்தி மயங்கிய வானம் விதானம்
அன்னை நடஞ் செய்யும் ஆனந்த மேடை
சிந்தை நிறம் பவளம் பொழி பாரோர்
தேன் பொழிலா மீது செய்தவள் யாரோ
எந்தையிடத்தும் மனத்தும் இருப்பாள்
எண்ணுபவர்க்கு அருள் எண்ணம் இருந்தாள்
மந்திர வேத மயப் பொருள் ஆனாள்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

அந்தியாகிய மாலைப்பொழுது வானம் அன்னை நடனஞ் செய்யும் ஆனந்த மேடையாகும். சிந்தையாகிய மனம் மகிழும்படி வளம் பொழிந்து இந்த உலகத்தை ஒரு தேன் காடாக இங்கே செய்தவள் யாரோ?. அன்னையே, என்தந்தையாகிய இறைவனான சிவபெருமானின் இடப்பாகத்திலும், என் மனதிலும் இருக்கின்றாய்.
உன்னை எப்போதும் எண்பவர்களுக்கு என்றும் மிகுதியான அருளைப் பொழிகின்றாய். மந்திரங்கள், வேதங்கள் இவற்றின் உட்பொருளினைக் கொண்டுள்ள அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

5. மாணிக்கம்

காணக் கிடையா கதி ஆனவளே
கருதக் கிடையாக் கலை ஆனவளே
பூணக் கிடையாப் பொலிவு ஆனவளே
புனையாக் கிடையாப் புதுமைத்தவளே
நாணித்திரு நாமமும் நின் துதியும்
நவிலாதவரை நாடாத அவளே
மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

எளிதில் காண்பதற்கு கிடைக்காத நற்கதியிவீனை உடையவளே. எண்ணத்தில் எளிதில் கருத முடியாத கலையின் வடிவானவளே. அணிவற்கு அரிதான அழகு அணியானவளே. கற்பனைக்கும் எட்டாத புதுமையானவளே. உன்னுடைய திருநாமத்தையும், துதிகளான பாடல்களையும் பாடமுடியாமல் குறைபடுபவர்களை நீ என்றும் நாடமாட்டாய். மாணிக்கத்தின் ஒளிக்கதிரினைப் போன்றவளே. அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

6. மரகதம்

மரகத வடிவவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதி லயமே இசையே சரணம்
அரஅர சிவ என்று அடியவர் குழும
அவர்அருள் பெற அருள்அமுதே சரணம்
வர நவநிதியே சரணம் சரணம்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

மரகத பச்சை நிறத்தினை உடையவளே உன்னை சரணடைகிறேன். தேன் பொழியும் உன்னுடைய திருவடிகளைச் சரணடைகிறேன். தேவர்களின் தலைவனான இந்திரன் உன்னுடைய பாதங்களை பணிய திகழ்ந்திருக்கும் அம்மையே உன்னை சரணடைகிறேன். சுதி, ஜதி, லயம் போன்ற இசையின் உறுப்புகளாகி, இசையின் வடிவாக திகழ்பவளே உன்னை சரணடைகிறேன். அரஅர சிவ என்று பாடிக் கொண்டு வரும் அடியவர் களுக்கு இறைவனின் அருள் பெறும்படி அருள்புரியும் அமுதமானவளே உன்னை சரணடைகிறேன். ஒன்பது விதமான செல்வங்களுக்கு அதிபதியே உன்னை சரணடைகிறேன். அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

7. கோமேதகம்

பூமேவிய நான் புரியும் செயல்கள்
போன்றாது பயன் குன்றா வரமும்
தீமேல் இடினும் ஜெய சக்தி எனத்
திடமாய் அடியேன் பொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே
குழல்வாய் மொழியே வருவாய் தருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

இந்த புவியில் நான் புரியும் எல்லாச் செயல்களும், எந்த வித குறைகள் இல்லாமல் எல்லா பயன்கள் குறைவின்றி கிடைக்க வரத்தினை அருளுபவளே. தீயிலிட்டு என்னைப் பொசுக்கினாலும் ஜெயசக்தி என்று உன்னை அடியேன் சொல்லக்கூடிய வீரத்தை தாயே நீ அருளுவாய். கோமேதகமே, வானத்தில் இருக்கும் குளிர்ந்த நிலவே, குழலைப் போன்று இனிய வாய்மொழியினை உடையவளே, மாமேரு மலையில் வாழும் கிளியாகிய அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

8. பதுமராகம்

ரஞ்சனி நந்தினி அங்கணி பதும
ராக விகாச வியாபனி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத சொரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு சிருங்க நிவாசினி
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

இன்பத்தினை அருளுபவளே, இன்பத்தின் வடிவானவளே, அழகிய கண்களை உடையவளே, பதுமராகத்தின் ஒளியில் நிறைந்தவளே அம்மையே. நிலையில்லாத மனநோய்களை நீக்குபவளே. அனைத்து கலைகளையும் அறிந்தவளே. சம்புவின் சக்தியான சாம்பவியே. பிறைச்சந்திரனை அணிந்தவளே. தலைவியாக விளங்குபவளே. கருநிறத் திருமேனியைக் கொண்டவளே. எல்லா விதமான அணிகலன்களும் அணிந்து இருப்பவளே. மரணமில்லா பெரு வாழ்வின் உருவே. என்றும் மங்கலகரமானவளே. அழகிய மேருமலையின் சிகரத்தில் நிலைத்து வசிக்கும் அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

9. வைடூர்யம்

வலைஒத்த வினை கலைஒத்த மனம்
மருளப் பறையா ஒலிஒத்த விதால்
நிலையற் எளியன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையற்ற அசைவற்ற அனுபூதி பெறும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய்
மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே

நான் செய்த முன்வினைப் பயன்களோ வலையை ஒத்தது. என் மனமோ மானைப் போன்றது. அந்த மான் மருளும்படி அறையும் பறை போன்றவை இந்த உலகத்தின் இன்பதுன்பங்கள். இப்படி உலகின் இன்ப துன்பங்களால் மானைப் போன்று என் மனம் நிலையற்று அலைகழிக்கப்படுகிறது.இந்த துன்பத்தால் நான் அழிந்து போகலாமா?. என்னை அலைகழிக்கும் துன்பங்கள் தூளாகப் போகும்படி எனக்கு வரத்தினை அருளுவாய். மனஅலைக்கழிப்பு இன்றி அசைவற்று இறை அனுபவம் பெறும் அடியவர்களன் திருமுடியில் வாழும் வைடூரியமே.ம‌லையத்துவச‌ பாண்டியனின் மகளான மீனாட்சியே வருவாய். அன்னையான லலிதாம்பிகையே உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

பயன்

எவர் எத்தினமும் இசைவாய் லலிதா
நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தி எல்லாம் அடைவார்
சிவரத்தினமாய் திகழ்வார் அவரே (மாதா)

எல்லா நாட்களிலும் இந்த நவரத்தின மாலையைப் பாடித் துதிப்பவர்கள் எல்லா நலன்களையும் கிடைக்க பெறுவர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,117
Likes
3,169
Location
India
#57
தடைகளை நீக்கும் அம்மன் காயத்ரி மந்திரங்கள்

1527057778715.png

காயத்ரி - சகல காரியங்கள் வெற்றி அடைய

ஓம் பூர்புவஸ்ஸுவஹ் தத்ஸ விதுர்
வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோனஹ் ப்ரசோதயாத்

துர்கை:

(ராகுதோஷ நிவர்த்திக்காக)
ஓம் காத்யாயனாய வித்மஹே
கன்யகுமரி தீமஹி
தன்னோ துர்கிஹ் ப்ரசோதயாத்
ஓம் சிம்மத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்
அன்னபூரணி தேவி
(நித்தியான்ன பிராப்திக்காக)
ஓம் பக்வத்யைஹ் வித்மஹே
மஹேஸ்வர்யைஹ் தீமஹி
தன்னோ அன்னபூர்ண ப்ரசோதயாத்

சிவதூதி:

ஓம் சிவதூத்யை ச வித்மஹே
சிவங்கர்யைச தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்

பாலா:

ஓம் திருபுரசுந்தரீ வித்மஹே
காமேஸ்வரீ ச தீமஹி
தன்னோ பாலா ப்ரசோதயாத்
அம்ருதேஸ்வரி தேவி
(ஆயுள் ஆரோக்கியம் பெற)
ஓம் சௌஹ் த்ரிபுரதேவி ச வித்மஹே
சக்தீஸ்வரீ ச தீமஹி
தன்னோ அம்ருத ப்ரசோதயாத்

காளிகா தேவி:

(கேட்ட வரம் கிடைக்க)
ஓம் காளிகாயை ச வித்மஹே
ஸ்மசான வாசின்யை தீமஹி
தன்னோ கோரா ப்ரசோதயாத்

கவுமாரி தேவி:

(சக்தி பெற)
ஓம் சிகித்வஜாயை வித்மஹே
வஜ்ர (சக்தி) ஹஸ்தாயை தீமஹி
தன்னோ கௌமாரீ ப்ரசோதயாத்

சாமுண்டி:

ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி
தன்னோ காளி ப்ரசோதயாத்
ஓம் சாமுண்டேஸ்வரி வித்மஹே
சக்ரதாரிணி தீமஹி
தன்னோ சாமுண்டிஹ் ப்ரசோதயாத்
 

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,293
Likes
545
Location
chennai
#58
மூகாம்பிகைக்கு உகந்த மூல மந்திரம்

1527074550359.png

ஐம் கௌரி ஐம் கௌரி ஐம் கௌரி
பரமேஸ்வரி ஐம் ஸ்வாஹா!

மூலமந்திரத்தில் ‘ஐம்’ என்ற சொல் 4 முறை வருவதை அர்த்தகாம மோட்சம் எனவும் அறம்பொருள் இன்பம் வீடு - எல்லாப்பேறுகளையும் தருபவள் எனப்பெரியோர் கூறு கின்றனர்.

‘ஐம்’ ஆனது பால மந்திரம் சப்தசதீ மந்திரம் ‘மகாஷோடசமந்திரம்’ ஆகிய மந்திரங்களின் பெருமைபெற்றது. இதை ஜபித்தால் மூகாம்பிகையின் அருளால் பெறுதற்கரிய பேறு பெற்று வாழ்வில் சுகமான வாழ்வு பெறலாம்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#59
எதிரிகளை வெல்ல---!
சௌந்தர்யலஹரி
1527106743695.png


விரிஞ்சி பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதம்
விநாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம்
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித - த்ருசா
மஹா - ஸம்ஹாரே அஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸௌ.


பிரளயத்துக்குச் சாட்சியாக இருப்பவளும், பிரளயத்துக்குப் பிறகு பிரபஞ்சத்தை மீண்டும் படைப்பவளுமாகிய ஆதிசக்தி அவள். ஆயிரமாயிரம் திருநாமங்கள் கொண்ட அம்பிகையின் அளப்பரிய சக்தியானது நம்முடைய உள்ளும் புறமும் உள்ள எதிரிகளை இல்லாமல் செய்துவிடுகிறது.

எனவே, அம்பிகையின் திருவடிகளைச் சரண் அடைந்து, இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை தினமும் 27 முறை பூரண நம்பிக்கையுடன் பாராயணம் செய்யலாம்.
 

vijigermany

Lord of Penmai
Joined
Jul 5, 2011
Messages
104,892
Likes
20,791
Location
Germany
#60
எதிரிகளை வெல்ல---! 2

அபிராமி அந்தாதி

1527107054057.png

தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்- வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர்- பார் எங்குமே.'அபிராமி அம்பிகையே! உன்னுடைய புகழைப் பாடி, உன்னை வணங்காவிட்டாலும்கூட பரவாயில்லை. ஆனால், மின்னலைப் பழிக்கும் ஒளியுடன் பிரகாசிக்கும் உன்னுடைய அருள் வடிவத்தை ஒரு நொடிப் பொழுதாவது நினைக்காதவர்கள், தாங்கள் பெற்றிருக்கும் செல்வம், வள்ளல்தன்மை, குலச் சிறப்பு, உயர் கல்வி ஆகிய அனைத்தையும் இழந்து, வாழ்க்கையில் மிகுந்த கஷ்டத்தை அனுபவிப்பார்கள்'

அம்பிகையை நினைக்காத மனதில்தான் பொறாமை, பேராசை, சுயநலம் போன்ற உள் பகைகள் தோன்றும். அந்த உள் பகைகளே, நமக்கான எதிரிகள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்துவிடும். அப்போது நம்மால் எப்படி முன்னேற முடியும்? எனவே, மிகவும் எளிமையான இந்த வழியைப் பின்பற்றி, நம்முடைய வாழ்க்கையில் உள்ளும் புறமும் எதிரிகளே இல்லாமல் செய்து, வாழ்க்கையில் முன்னேறி சாதனைகளைப் புரிவோம்.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.