மந்திரமும் மகிமையும் !!

Aravind parasu

Commander's of Penmai
Joined
Oct 1, 2017
Messages
2,246
Likes
543
Location
chennai
#71
ஸ்ரீ துக்க நிவாரன அஷ்டகம்மங்கள ரூபினி மதியனி சூலினி மன்மத பானியளெ,

சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் ஷங்கரி சௌந்தரியெ,

கங்கன பானியன் கனிமுகம் கண்ட நல் கற்பக காமினியெ,

ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.கானுரு மலரென கதிரொலி காட்டி காத்திட வந்திடுவாள்,

தானுரு தவஒலி தாரொலி மதியோலி தாங்கியே வீசிடுவாள்,

மானுரு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்,

ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.ஷங்கரி சௌந்தரி சதுர்முகன் பொற்றிட சபையினில் வந்தவளெ,

பொங்கரி மாவினில் பொன் அடி வைத்து பொரிந்திட வந்தவளெ,

என் குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்தனல் துர்கையளெ,

ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.தனதன தன் தன தவிலொலி முழங்கிட தன்மணி நீ வருவாய்,

கங்கன கன் கன கதிரொலி வீசிட கண்மணி நீ வருவாய்,

பன்பன பம் பன பரை ஒலி கூவிட பண்மணி நீ வருவாய்,

ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சனல் பானியளே,

கொஞ்சிடும் குமரனை குனமிகு வேழனை கொடுத்தனல் குமரியளெ,

சங்கடம் தீர்திட சமரது செய்தனல் சக்தி எனும் மாயே,

ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.என்னியபடி நீ அருளிட வருவாய் என் குல தேவியளெ,

பன்னிய செயலின் பலன் அது நலமாய் பல்கிட அருளிடுவாய்,

கன்னொலி அதனால் கருனையை காட்டி கவலைகள் தீர்பவளெ,

ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.இடர் தரும் தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்,

சுடர் தரும் அமுதே ஸ்ருதிகள் கூறி சுகம் அது தந்திடுவாய்,

படர் தரும் இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்,

ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி,

ஜெய ஜெய துர்கா ஸ்ரீபரமெஸ்வரி ஜெய ஜெய ஸ்ரீதேவி,

ஜெய ஜெய ஜெயந்தி மங்கலகாளி ஜெய ஜெய ஸ்ரீதேவி,

ஜெய ஜெய ஷங்கரி கௌரி க்ரிபாகரி துக்க நிவாரனி காமாக்ஷி.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,090
Likes
3,165
Location
India
#72
குடும்பத்தில் ஒற்றுமை நிலைக்க பலன் தரும் ஸ்லோகம்

1527481394915.png

மஹாதேவீம் மஹாசக்திம் பவானீம்
பவவல்லபாம்பவார்திபஞ்ஜநகரீம்
வந்தே த்வாம் லோகமாதரம்ஜகத்கர்த்ரீம்
ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம்ஹாரகாரிணீம்முனிபி:
ஸமஸ்துதாம் பத்ராம் வந்தேத்வாம் மோக்ஷதாயினீம்.

ஸ்ரீதேவி துதி

பொதுப் பொருள்:

மகாதேவனுடைய மனைவியே, மிகுந்த சக்தி வாய்ந்தவளே, பவானி என்றழைக்கப்படுபவளே, பக்தர்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் மனக் கவலைகளைப் போக்குகிறவளே, அனைத்து உலகங்களுக்கும் தாயே, தங்களை நமஸ்கரிக்கிறேன். உலகைப் படைப்பவளே, படைத்ததைக் காப்பவளே, கடைசியில் அதை அழிக்கவும் செய்பவளே, முனிவர்களால் துதிக்கப்படுபவளே, பக்தர்களுக்கு எந்நாளும் மங்கலத்தை அளிப்பவளே, முக்தியை தரவல்லவளே, தங்களை நமஸ்கரிக்கிறேன்.

இந்தத் துதியை தினமும் அல்லது வெள்ளிக் கிழமைகளில் பாராயணம் செய்து வர, குடும்பத்தினரிடையே இருக்கும் மன வேற்றுமைகள் தீர்ந்து, குடும்பத்தார் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வர். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வர்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,090
Likes
3,165
Location
India
#73
ஸ்ரீ ராம (தாரக) நாம மகிமை!

கிமைகள் மிகுந்தது ஸ்ரீராம நாமம். தாரக மந்திரம் என்று ஞானப் பெரியவர்கள் போற்றும் ஸ்ரீராம நாமத்தைத் தினமும் ஜபிப்ப தால், சர்வ பாவங்களும் விலகும்; கவலைகள் நீங்கி நிம்மதி பிறக்கும்.

ஸ்ரீராம நாமத்தை அனுதினமும் ஜபித்து வழிபடும் வகையில் மிக அற்புதமான துதிப் பாடலை அருளியிருக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.

யதாவர்ணயத்கர்ணமூலேந்தகாலே
ஸிவோ ராம ராமேதி ராமேதி காஸ்யாம்
ததேகம் பரம் தாரகம் ப்ரஹ்மரூபம்
பஜேஹம் பஜேஹம் பஜேஹம் பஜேஹம்


கருத்து:
ஸ்ரீபரமேஸ்வரன் காசி க்ஷேத்திரத்தில் ஜீவன் சரீரத்தை விடும்போது, வலது காதில் எந்த ராமனுடைய தாரக நாமாவான ராம ராம ராம எனும் நாமத்தை நன்கு உபதேசிக்கிறாரோ... அப்படிப்பட்ட வரும் சர்வ உத்தமரும், ஜனன-மரண துக்கத்தி லிருந்து காப்பவரும், தாரக பிரம்ம ரூபியுமான ஸ்ரீராமபிரானை நான் பூஜிக்கிறேன்.

அனுதினமும் ஸ்ரீராமனை மனதில் தியானித்து இந்தத் துதியைச் சொல்லி வழிபடும் அன்பர்களுக்குத் தோல்விகள் என்பதே இல்லை. அவர்களின் மனதில் சஞ்சலங்களுக்கு இடமிருக்காது. இல்லத்தில் சகல பீடைகளும் விலகி சம்பத்துகள் உண்டாகும். சகல தோஷங்களும் நீங்கி சந்தோஷம் பெருகும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,090
Likes
3,165
Location
India
#74
கண் திருஷ்டிகள் அகல பைரவர் ஸ்லோகம்

1527659381929.png


ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்
த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம்
நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்
வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்.

பொதுப் பொருள் :

சிவந்த சிகையும் ஒளிமிகுந்த தேகத்தையும் கொண்ட பைரவரே, நமஸ்காரம். சூலம், கபாலம், உடுக்கை தரித்து உலகத்தைக் காப்பவரே, நன்றியின் வடிவமான நாயை வாகனமாகக் கொண்டவரே, முக்கண்கள் கொண்டவரே, ஆனந்த வடிவினராக பூத, பிரேத, பிசாசுக் கூட்டங்களைக் கட்டுப்படுத்தும் தலைவரே, அனைத்து புண்ணிய க்ஷேத்ரங்களையும் ரக்ஷிப்பவரே, பைரவரே, நமஸ்காரம்.

தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும்; கண் திருஷ்டிகள் அகலும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,090
Likes
3,165
Location
India
#75
பாவங்களை போக்கும் நடராஜர் ஸ்லோகம்

1527747140105.png

இதம் கமலஸுந்தரம் ஸதஸி காஞ்சநே ந்ருத்யத:
ஸதஞ்சித முதஞ்சிதம் கிமபி குஞ்சிதம் சஞ்சலம்
விசிந்த்ய சிதம்பரே ஹ்ருதயஸம்பதே ஸாஸ்வதம்
விரிஞ்சகரகந்துகம் சரணமிந்து சூடாமணே:
ஸிவ ஸிவ சரணம் ஸிவானந்தம்
ஸிவ ஸிவ ஸிவாய ஸிவாய நமஹ

- சிதம்பர பஞ்சாக்ஷர மந்த்ரம்

பொருள்: இது பூலோக கைலாசமான விளங்கும் சிதம்பரத்தில் ஆனந்த நடனமாடும் நடராஜமூர்த்தியைப் போற்றும் மஹாமந்த்ரம். அவர் தன் குஞ்சிதபாதத்தைத் தூக்கி நடனமிடும் காட்சி அற்புதமானது. பொன்னம்பலத்தில் உலகை இயக்குவதற்காக அவர் ஆனந்த திருநடனம் புரிகிறார்.

சிவ எனும் இரண்டெழுத்து மந்திரம் நம் பாவங்களை நீக்கி புண்ணியத்தை அளிக்கவல்லது. இம்மந்திரத்தில் ஏழு முறை சிவ நாமம் உச்சரிக்கப்படுகிறது. இந்த மந்திரம் வாழ்க்கையில் அடியார்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு, எனும் பிறவிப்பயனை அளிக்கவல்லது. மேலும் இந்த மந்திரம் விசேஷமாக பேரின்ப நிலையை அளிக்கும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,090
Likes
3,165
Location
India
#76
சந்திராஷ்டம பாதிப்புகளை நீக்கும் சந்திர பகவான் துதி

1527747225541.png

ஸ்வேதாம்பரான் விததனும் வரஸுப்ரவர்ணம்
ஸ்வேதாஸ்வயுக்தரதகம் ஸுரஸேவிதாங்க்ரிம்
தோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்ஸும்
ஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி நித்யம்.

பொதுப்பொருள்:

வெண்மையான வஸ்திரம் தரித்தவரும், சிறந்த வெண்மை நிறம் உடையவரும், வெள்ளைக்குதிரை பூட்டிய தேரில் செல்கிறவரும், தேவர்களால் வணங்கப்பட்ட சரணங்களை உடையவரும், இரண்டு கைகளிலும் அபயம், வரதம் என்ற முத்திரைகளைத் தரித்தவரும், வரங்களை அளிப்பவரும் அம்ருத கிரணத்தையும், ஸ்ரீவத்ஸம் என்ற முத்து மாலையையும் தரித்தவருமான சந்திர பகவானை நமஸ்கரிக்கிறேன்.

- இத்துதியை பௌர்ணமி திதியன்றும், திங்கட்கிழமைகளிலும் மற்றும் சந்திராஷ்டம தினங்களிலும் பாராயணம் செய்து வந்தால் சந்திர தோஷங்கள் நீங்கும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,090
Likes
3,165
Location
India
#77
விரும்பும் துறையில் வேலை கிடைக்க ஸ்லோகம்

1528090115458.png

ஸ்ரீதேவி: அம்ருதோத்பூதா கமலா சந்த்ரசோபனா
விஷ்ணுபத்னீ வைஷ்ணவீ ச வராரோஹார்ங்க்ஞ்ச சார்ங்கிணீ
ஹரிப்ரியா தேவ தேவீ மஹாலக்ஷ்மீ ச ஸுந்தரீ.
மஹாலக்ஷ்மி ஸ்துதிமாலா

பொதுப் பொருள்:

செல்வங்களுக்கெல்லாம் அதிதேவதையானவளே, அமிர்தம் வேண்டி தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது உதித்தவளே, தாமரை மலரை விரும்பி ஏற்பவளே, சந்திரனின் சகோதரியே, திருமாலின் பத்தினியே, வைஷ்ணவியாய் அருள்பவளே, பக்தர்களின் நல் வாழ்வில் ஏற்படும் தடைகளை உன் கையில் உள்ள சார்ங்கம் எனும் வில்லால் அழிப்பவளே, தேவர்களுக்கெல்லாம் தேவியே, பேரழகுக் கோலத்தில் திகழ்பவளே, மஹாலக்ஷ்மியே, உனக்கு நமஸ்காரம்.

-இந்தத் துதியை மஹாலக்ஷ்மி திருவுருவப்படத்தின் முன் அமர்ந்து விளக்கேற்றி, தினமும் பதினாறு முறை பாராயணம் செய்து வர, தேவியின் அருளால் அவரவர்க்குப் பிடித்தமான துறையில் நல்ல வேலை கிடைக்கும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,090
Likes
3,165
Location
India
#78
அஷ்ட லட்சுமிகளின் அருளை பெற சொல்ல வேண்டிய மந்திரம்...!

1528173487671.png

ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் அஷ்ட லட்சுமிகளும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஒவ்வொரு லட்சுமிக்கும் ஒவ்வொரு மந்திரங்கள் உள்ளன. அதை கூறி வழிபட்டாலே போதும். அஷ்ட லட்சுமியின் அனுக்கிரகத்தை நாம் பெற்று துன்பமில்லாத வாழ்வை பெறலாம்.1. தன லட்சுமி:யா தேவி ஸர்வ பூதேஷூ

புஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை

நமஸ்தஸ்யை நமோ நம2. வித்யா லட்சுமி:யா தேவி ஸர்வ பூதேஷூ

புத்தி ரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை

நமஸ்தஸ்யை நமோ நம3. தான்ய லட்சுமி:யா தேவி ஸர்வ பூதேஷூ

க்ஷுதா ரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை

நமஸ்தஸ்யை நமோ நம4. வீர லட்சுமி:யா தேவி ஸர்வ பூதேஷூ

த்ரூதிரு ரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை

நமஸ்தஸ்யை நமோ நம5. சௌபாக்ய லட்சுமி:யா தேவி ஸர்வ பூதேஷூ

முஷ்டி ரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை

நமஸ்தஸ்யை நமோ நம6. சந்தான லட்சுமி:யா தேவி ஸர்வ பூதேஷூ

மாத்ரூ ரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை

நமஸ்தஸ்யை நமோ நம7. காருண்ய லட்சுமி:யா தேவி ஸர்வ பூதேஷூ

தயா ரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை

நமஸ்தஸ்யை நமோ நம8. ஆதி லட்சுமி:யா தேவி ஸர்வ பூதேஷூ

லக்ஷ்மீரூபேண ஸம்ஸ்த்திதா

நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை

நமஸ்தஸ்யை நமோ நம||
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,090
Likes
3,165
Location
India
#79
மாங்கல்ய பலம் தரும் ஸ்லோகம்

1528261959184.png

ஒரே ஒரு நாள் வாழ்ந்தாலும் காதலித்த சத்யவானுடன் தான் வாழ வேண்டுமென உறுதியாய் இருந்தாள் சாவித்திரி. ‘பதியே தெய்வம்’ என எண்ணும் உயர்ந்த பண்பாலும், பவித்திரமான மாங்கல்ய பலத்தாலும் தன் கணவனின் ஆயுளை நீடிக்கச் செய்யலாம் என்று உறுதியாக நம்பினாள் சாவித்திரி.

சர்வ சக்தி வாய்ந்த முனிவர் அத்ரி மகரிஷி அவருடைய மனைவி அனுசூயா தேவி. தன் கணவனின் நலனுக்காக அனுசூயா தேவியை வேண்டினாள் சாவித்திரி. பெண்களுக்கெல்லாம் என்றும் மங்களத்தைத் தரக்கூடிய மாங்கல்ய மந்திரத்தைச் சாவித்திரிக்கு உபதேசித்தாள் அனுசூயா.

“மங்களே மங்களாதாரே
மாங்கல்யே மங்களப்ரதே
மங்களார்த்தம் மங்களேசி
மாங்கல்யம் தேஹிமே ஸதா”

என்பதே அந்த மந்திரமாகும்.

மனம் சுத்தியுடன் இந்த மந்திரத்தை ஜெபித்தால், சத்தியவான் நீண்ட ஆயுளைப் பெறுவான் என்ற நம்பிக்கையுடன் இந்த மந்திரத்தை ஜெபித்து வந்தாள் சாவித்திரி.

எந்தப் பெண், அன்னையாம் தேவியிடம் நம்பிக்கை கொண்டவளாக இந்த மந்திரத்தை உச்சரித்து வருகிறாளோ, அவள் என்றும் மாங்கல்ய பலம் பெற்று பல்லாண்டு மங்கல வாழ்வு வாழ்வாள்.

காரடையான் நோம்பினை மேற்கொண்டு சரடு மாற்றும் போது இந்த ஸ்லோகத்தை ஜெபிக்க வேண்டும். அன்னையின் பூரண நல்லாசி கிடைக்கும்.
 

vijaykumar12

Ruler's of Penmai
Joined
Aug 9, 2012
Messages
17,090
Likes
3,165
Location
India
#80
கண்பார்வை குறைபாடுகளை நீக்கும் சௌந்தர்யலஹரி ஸ்லோகம்

1528356430616.png

நம்மில் பலருக்குக் கண்பார்வையில் சிற்சில குறைபாடுகள் ஏற்படலாம். அதனால், பார்க்கும் திறன் குறைந்து சிலபல சிரமங்களுக்கு ஆளாக நேரும். கண் பார்வைக் குறைபாடுகள் எதுவாக இருந்தாலும், இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை பக்திபூர்வமாக பாராயணம் செய்து வந்தால், கண்பார்வைக் குறைபாடுகள் நீங்கி பார்வையில் தெளிவு உண்டாகும்.

அந்த ஸ்லோகம் இதுதான்.

லோகாச் சதுர்த்தச மஹேந்த்ர முகாச்ச தேவா:
மூர்த்தித்ரயம் முனிகணாச்ச வஸிஷ்ட முக்யா: |
ஸத்யோ பவந்தி ந பவந்தி ஸமஸ்த மூர்த்தே:
உன்மீலனேன தவ தேவி நிமீலனேன ||
இந்த ஸ்லோகத்தின் சாரம் இதுதான்.

தேவீ, பக்தர்கள் கேட்கும் வரங்களை நீ உடனுக்குடன் கொடுத்துவிடுவதால், நீ யாருக்குமே கடன்பட்டவள் இல்லை. உன்னுடைய அருளைப் பெற்ற பக்தர்களே உனக்குக் கடன்பட்டவர்கள் ஆகின்றனர். நீ இப்படி பக்தர்கள் எப்போது என்ன வரம் கேட்பார்களோ என்று நினைத்து, பக்தர்களின் கோரிக்கைகளை கேட்பதற்காக உன் அழகிய விழிகளைக் கூட மூடாமல், எப்போதும் விழித்துக்கொண்டே இருக்கிறாய். உன்னைப் போலவே மீன்களும் கண் சிமிட்டாமல் இருக்கிறது. காதுவரை நீண்டிருக்கும் உனது அழகிய திருநயனங்கள, உன் கண்களைப் போலவே எப்போதும் கண் சிமிட்டாமல் இருக்கும் மீன்களைப் பற்றி கோள் சொல்வதுபோல் இருக்கிறது.
 

Important Announcements!

Latest Posts

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.