மனதின் வார்த்தை சொல்லவா? - Manadhin Vaarthai Sollava By Surangi

sumathisrini

Silver Ruler's of Penmai
Staff member
Super Moderator
Joined
Jun 28, 2011
Messages
34,920
Likes
76,727
Location
Hosur
#1
friends,

I am glad to introduce one more new writer to our 'Penmai' family. Pls. join with me in welcoming our friend
Surangi.

Below goes her story 'மனதின் வார்த்தை சொல்லவா?' & her introduction. We wish her all the very best and to have a long & fruitful association with 'Penmai'. Enjoy by reading her story & do support with your valuable feedback / comments.

ஹாய் தோழமைகளே,

என் முதல் கதையோடு உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

மனதின் வார்த்தை சொல்லவா!

ஹீரோ: ராஜீவ்

ஹீரோயின்: த்ரிதி


காணாமல் போன அண்ணனையும் இதுவரை கண்ணால் கண்டிராத காதலைனையும் தேடி காசிலிங்கம் பல்கலைகழகத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி படிப்பில் சேர்கிறாள் த்ரிதி.அங்கே அவளுக்கு அவர்கள் கிடைப்பார்களா?அவள் எண்ணம் ஈடேறுமா? தெரிந்து கொள்ள கதையைப் படியுங்கள் தோழிகளே!

அன்புடன்,
Surangi
 
Last edited:
Joined
Mar 2, 2018
Messages
8
Likes
13
Location
Haluvalli
#3
அத்தியாயம் 1

ரிதிம்மா!நீ அந்த பல்கலைக்கழகத்தில் சேரத்தான் வேண்டுமா? போலீஸ் உன் அண்ணனை தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.நீ அங்கே சேர வேண்டிய அவசியமென்ன?"

கிளம்புவதற்கு தயாராக பெட்டியில் தன் உடைமைகளை அடுக்கியபடி இருந்த த்ரிதி தாயின் வார்த்தைகளைக் கேட்டு கோபமுற்றாள்.

"ஆமாம் மூன்று ஆண்டுகளாக இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் இதுவரை அண்ணனைப் பற்றி ஒரு விவரமும் கிடைக்க வில்லை.அவன் காணாமல் போன போது அந்த பல்கலைக்கழகத்தில்தான் லெக்சரராக இருந்தான்.அதனால் அவனைப் பற்றி தெரிந்து கொள்ள நான் அங்கே சேரத்தான் வேண்டும்.தயவுசெய்து என்னைத் தடுக்காதீர்கள் அம்மா"என்றாள் கலங்கிய குரலில்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை அவர்கள் வாழ்வு பூத்துக் குலுங்கும் நந்தவனமாகத்தான் இருந்தது.கலக்டேரேட் ஆபிஸில் பெரிய வேலையில் இருந்தார் சீனிவாசன்.அவர் மனைவி சகுந்தலா இல்லத்தரசி.ஆஸ்திக்கு மகன் நவீனும் ஆசைக்கு மகள் த்ரிதி இருவரும் அவர்களின் கண்ணின் கருமணிகளாக இருந்தனர்.

சிறுவயதில் இருந்தே நவீன் சரித்திர பாடத்தில் விருப்பமாக இருந்தான்.இளங்கலையில் சரித்திரமும் முதுகலையில் தொல்பொருள் ஆராய்ச்சியும் படித்த நவீன் தான் படித்த அதே பல்கலைக்கழகத்தில் லெக்சரராக சேர்ந்தான்.வேலையில் சேர்ந்த ஒரு வருடம் எந்த தொந்தரவும் இல்லை.ஆனால் வருடத்தின் கடைசியில் தொல்பொருள் ஆய்வுக்காக பல்கலைக்கழகத்தின் சார்பில் வெளியூர் சென்ற நவீன் திரும்பி வரவேயில்லை.பல்கலைகழகமும் அவன் வீட்டாரும் நண்பர்களும் கவலையில் ஆழ்த்தனர்.இந்த மூன்று ஆண்டுகளாக அவனைத் தேடியும் எந்த தகவலும் இல்லை.அதனால் தானே அவனைத் தேட முடிவெடுத்த த்ரிதி அவன் காணாமல்போன அதே பல்கலைக்கழகத்தில் சேர முடிவெடுத்தாள்.

"நீ சொல்வதெல்லாம் சரிதான் ரிதிம்மா.ஆனால் ஒரே மகனை பறிக்கொடுத்த அதே இடத்திற்கு உன்னையும் அனுப்ப தாய் மனம் இடங்கொடுக்கவில்லை, உனக்கும் ஏதாவது ஆகிவிட்டால் என்னால் அதை தாங்க முடியாது கண்ணம்மா!"

கலங்கிய தாயை அணைத்த த்ரிதி,
"அம்மா எனக்கு எதுவும் ஆகாது.நீங்கள் தயவுசெய்து நான் அங்கே போவதற்கு சம்மதம் கொடுங்கள்.நான் எப்படியாவது அண்ணனைக் கண்டுபிடித்து உங்களிடம் சேர்ப்பேன்.என்னை நம்புங்கள் அம்மா"

"சரி த்ரிதி நீ போய் வா.நான் உன்னை தடுக்க வில்லை.ஆனால் நீ ரொம்பவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.எந்த நேரத்திலாவது அங்கே இருக்க முடியவில்லை என்றால் நீ உடனே இங்கே திரும்பி வந்து விட வேண்டும் சரியா?"

"அம்மா என்றால் அம்மாதான்.நீங்கள் சொன்னதுபோலவே இருக்கிறேன்."

"சரி சரி இதையெல்லாம் சீக்கிரம் முடித்துவிட்டு கீழே வா.சாப்பிட்டு புறப்படுவதற்கு சரியாக இருக்கும்."

அம்மா கீழே போன பின் தன் கழுத்தில் மறைந்திருந்த லாக்கெட்டை எடுத்த த்ரிதி அதை கையில் அடக்கியப்படி ,

"அங்கே சேர்வது அண்ணனைத் தேடுவதற்கு மட்டுமில்லை.என் ஜீவாவை பார்ப்பதற்கும் தான்.இந்த ஆறு ஆண்டுகளாக அவர் மேல் கொண்ட காதல் நாளுக்கு நாள் பெருகி கொண்டே இருக்கிறது.எனக்கு அவரை ஒரு முறையாவது பார்க்க வேண்டும்.என்னிடம் அவர் நினைப்பிற்கு அவரின் இந்த லாக்கெட் ஒன்றுதான் இருக்கிறது."

அந்த லாக்கெட்டை அழுத்திய த்ரிதி அதை மென்மையாக முத்தமிட்டாள்.
 

Important Announcements!

Type in Tamil

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.